Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

கல்வி எனும் கண்
அ. மு. பரமசிவானந்தம்



கல்வி எனும் கண்

பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம்

(நிறுவனர், வள்ளியம்மாள் கல்வி அறம்,

அண்ணாநகர் கிழக்கு—சென்னை 102)

தமிழ்க்கலைப் பதிப்பகம்

தமிழ்க்கலை இல்லம்

சென்னை-30

முதற் பதிப்பு: டிசம்பர், 1991

உரிமை-- ஆசிரியருக்கே

விலை : 12-00

(ரூபாய் பன்னிரண்டு)

விற்பனை உரிமை :

பாரி நிலையம்,

பிராட்வே, சென்னை.

அச்சிட்டோர் :

மாருதி பிரஸ்,

173, பீட்டர்ஸ் ரோடு,

சென்னை-600 014.



* * *

* * *

‘எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணன்ப வாழும் உயிர்க்கு (குறள்—392)

எண் எழுத்து இகழேல் (ஆத்திசூடி—7)

எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்

(கொன்றை வேந்தன்-7)

‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

கிற்க அதற்குத் தகவென்ற-சொற்குள்ளே

எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற

வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ’

(தமிழ்விடு தாது—97, 98)

* * *


 

⁠ முன்னுரை

1. கல்வி எனும் கண்

2. பல்கலைக் கழகங்கள்

3. மேநிலை வகுப்பு (+2)

4. இடைநிலை—உயர்நிலைப் பள்ளிகள்

5. ஆரம்பக் கல்வி

6. மழலையர் கல்வி

7. முதியோர் கல்வி

8. தொழிற் கல்வி


* * *

கடந்த அறுபது ஆண்டுகளில் 1930இல் குமாரராஜா (ராஜா) முத்தையச் செட்டியார் (நீதிக்கட்சி) கல்விப் பொறுப்பில் இருந்த நாள் தொட்டு, இன்று (1991) மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்கள் அத்துறையினை வகிக்கும் நாள் வரையில் தமிழகக் கல்வித் துறையினை — வளர்ச்சியினை — மாற்றத்தினைக் கண்டவனாதலின் — அன்று முதல் இன்று வரை அதனொடு தொடர்பு உடையவன் ஆதலின் இந்நூலினை எழுத முற்பட்டேன்.

அ.மு.ப.

முன்னுரை

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக' என்று வள்ளுவர் சொன்ன குறளின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம் தந்த பரிமேலழகர் ‘இதனால் கற்கப்படும் நூல்களும் கற்குமாறும் கற்றதனால் பயனும் கூறப்பட்டன’ என்கிறார். இந்த முறையில் இன்றைய நாட்டுக் கல்வி இருக்கிறதா என்பதை நல்லோர் எண்ணிப் பார்க்கவும் இல்லையானால் வள்ளுவர் பிறந்த நாட்டில் அவர் மொழிந்த வகையில் கல்வித்துறையை அமைக்கவும் வேண்டியே இந்நூல் எழுதப்பெற்றது.

நாட்டில் நாம் கற்கிறோம். ஆனால் கற்பவற்றை-கற்க வேண்டியவற்றைக் கற்கிறோமா? இல்லையே! இன்றைய கல்வி மக்கள் வாழ்க்கைக்கு-சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா? ஆம் என்று யாராவது கூறமுடியுமா ?

சரி, அவ்வாறு கற்பனவற்றைக் கசடுஅற-பிழையறா (பரிதி) மாசுஅற (காளிங்கர்) குற்றமறக் (மணக்குடவர்) கற்கிறோமா? அதுவும் இல்லையே. ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி முதுகலை வரையில் அவ்வாறு மாணவர்கள் கற்றால்-கற்கும் வகையில் ஆசிரியர்கள் ஆற்றுப்படுத்தினால் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேற வேண்டாமா? ஆனால் அந்த நிலை இல்லையே!

அடுத்து, கற்றபடியாவது நிற்கிறோமா? அதுவும் இல்லையே! ‘தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என்ற குறளுக்கு ஏற்ப, அனைவரும் கற்றபடி நடந்தால் நாட்டில் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’. பெற்று இன்பமாக வாழும் நாடாகத்தானே இது இருக்கும். ஆனால் அந்த இன்பம் எங்கே இருக்கிறது?

எனவே நாட்டில் தேவையான-சமுதாய வாழ்வை வளம் படுத்தும் கல்வி இல்லை என்பது கண் கூடு. இதை ஒருவாறு விளக்கும் வகையிலே ஒவ்வொரு பகுதியும் இந்நூலில் எழுதப்பெற்றுள்ளது. அக்குறைகளை நீக்க வழிகளும் ஓரளவு சுட்டப் பெறுகின்றன.

திருக்குறளில் பொருட்பாலில் அரசியல், தொடக்கத்தே முதல் அதிகாரமான இறைமாட்சிக்கு (38) அடுத்த அதிகாரமாகவே கல்வி (89) அமைகின்றது எதைக் காட்டுகிறது? கல்வியை - தேவையான கல்வியைத் தம் மக்களுக்கு அளித்தலே அரசின் முதற் கடமை என்பதைத் தானே இது விளக்குகிறது. நாட்டிலே கல்வி நலம் பெறவில்லையானால், வேறு எதுவும் நல்லமுறையில் அமையாது என அன்றுதொட்டு இன்று வரை எல்லாரும் கூறிவருகின்றனர். அன்று அரசுக்கு அறமுரைத்த வள்ளுவர் தொடங்கி இன்று நம் நாட்டு-உரிமை நாட்டுப் பெருந்தலைவர் பண்டித நேரு உட்பட அனைவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனரே. 1961இல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் இந்திய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்க ஏற்பாடு செய்த மாநாட்டில் பண்டித நேரு அவர்கள், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி நாடு வாழ-நானிலம் வாழ-சமுதாயம் சீர்பெறக் கல்வியே முக்கியம் என்பதனை வலியுறுத்திக் காட்டியுள்ளார். அந்த மாநாட்டில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல் அமைச்சர்களும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வி வல்லுநர்களும் அறிவியல் மேதைகளும், தொழில் முதல்வர்களும் கூடி இருந்தனரே. (1961-செப் 28 முதல் அக் 1 வரை) அந்த மாநாட்டில் கூடி இருந்த அத்தனை பேரும் இன்றுவரையில் கல்வியில் நலம்பெறு மாற்றங்கள் என்ன கண்டார்கள்? எண்ணிப்பார்க்க இந்நூல் சுடர் விளக்காயினும் நன்றாய் விளக்கிடும் தூண்டுகோலாக அமைகின்றது. பண்டிதர் நேரு அவர்கள் கூறியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.

“Education provides the most important means of bringing about National integration. Since the Problems of National Integration or of national unity essentially, involue the attitudés of groups or large sections of the community and since Education in its brodest sense has been recognised as a powerful instrument for influencing or modifying these attitudes, the conference regards the process of Education and its re-orientation where necessary, as of primary importance” (The Hindu. 17. 11.91)

இந்தக் கருத்தினை அவர் வழியே நாட்டை ஆளும் மத்திய அரசோ மாநில அரசுகளோ எண்ணிப் பார்த்து உடன் திருத்தியிருக்க வேண்டுமே. இன்று, அன்று இல்லாத வகையில் எத்தனையோ வேறுபாடுகள் முளைத்துத் தலை விரித்தாடுகின்றனவே. இப்போதும் இத்தகைய பல்லோர் கலந்த நலம் காணும் கூட்டங்களை இன்றைய பிரதமரும் நடத்துகிறார். உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் கல்வி-பெண் கல்வி மிக இழி நிலையில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன. (The Hindu- 22.11.91) எனவே தலைவர்கள்-அறிஞர்கள், கல்வித் துறையினைக் கட்டி ஆளுபவர்கள் பண்டித நேரு கூறியதையும் உலகத்தார் பழிப்பதையும் எண்ணி உடன் செயலாற்ற இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்ப்தே என் ஆசை.-- வேண்டுகோள்.

எல்லாவற்றினும் நல்லனவும் உண்டு; அல்லனவும் உண்டு. எனவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்நியர் ஆட்சியில் இருந்த கல்வி முறையினைப் பற்றிக் கூறி, அதில் உள்ள நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அல்லனவற்றை விட்டு வேறு திருத்திய நெறிக்கு மாற வேண்டுமெனவும் நூலில் அங்கங்கே சுட்டியுள்ளேன். பல நல்லன மாறியுள்ளன. அவற்றை எண்ணிப் பார்க்கவும் வேண்டியுள்ளேன்.

சுதந்திரம் பெற்றபின் மாநில, மத்திய அரசுகள் இக்கல்வியின் சீர்திருத்தம் பற்றியும் மாற்றம் பற்றியும் எத்தனையோ குழுக்களை அமைத்தன. அவையும் பலப் பல வகைகள் ஆய்ந்து பல்வேறு கருத்துக்களை ஏட்டில் வடித்துத் தந்தன. ஆயினும் அவை ‘கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே நாளில் மறப்பாரடி’ என்ற பாரதியார் வாக்கின் வழிதானே நிற்கின்றன. அண்மையில் திரு. இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் இந்திய அரசு அமைத்த கல்விக் குழுவும், நாட்டு நலம் காணத்தக்க கல்வி முறையினை ஓரளவு வரையறுத்துக் காட்டியுள்ளது. அதன் கருத்துக்கள். சிலவற்றையும் அப்படியே இந்நூலில் , (ஆங்கிலத்தில்) சேர்த்துள்ளேன்.

அதில், ஓரிடத்தில் கல்வியில் பெற வேண்டிய மாற்றங்களைச் சுட்டி, அவ்வாறு நல்ல நெறியில் கல்வி திருத்தம் பெறாவிட்டால், அத்தகைய கல்வியைக் கற்பதைக் காட்டிலும் கல்லாதிருப்பதே மேல் எனவும் குறித்துள்ளார். (If this is what our education has done to us, one may well ask, is not no education better than bad education— Page V). இது எனக்கு, ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்ற தாயுமானவர் அடியை நினைவூட்டிற்று. தாயுமானவர் ‘கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன்’ என்று நைந்து உருகியதையும் நினைக்க வேண்டியுள்ளது. இன்றைய மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நெறி வழியைப் பின்பற்ற வேண்டும். பாடங்கள் செம்மையாக்கப் பெறவேண்டும். ஆசிரியர் பட்டத்துக்கு ‘நல்லாசிரியர்’களாக அன்றி உண்மையிலேயே நல்லாசிரியர்களாகத் தம்மிடம் பயில்வாரை வாழ வைக்கவேண்டும். பெற்றோர்களும் பிறவற்றைக் காட்டிலும் தம் மக்கள் கண்ணாகிய கல்வியில் நலம் பெறுவழியே உதவி செய்யவேண்டும். மாணவர்களும் இன்றைய சுற்றுப்புறச் சூழலில் சிக்காமல் கற்பன கற்று, அதன் வழி நின்று நாட்டை வளமாக்க முயலவேண்டும். இந்தப் பேராசையின் காரணமாகவே நான் இந்த நூலை எழுதினேன்.

இந்த நூல் நாட்டுக்கல்வி ஒன்றினையே நாட்டமாகக் கொண்டு எழுதப் பெற்றமையின் அதில் தற்போது உள்ள குறைகளை அங்கங்கே மென்மையாகவும் வன்மையாகவும் சுட்டிக் காட்டினேன். இதனால் நான் யாரையும் குறை கூறினேன் என்றோ, குறைத்து மதிப்பிட்டேன் என்றோ யாரும் எண்ணவேண்டாமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

எப்படியாயினும் நம்முடைய பரந்த பாரதமும் சிறந்த தமிழகமும் பண்டைப் பெருமைகளைத் திரும்பப் பெற்று, உலக நாடுகளுக்கிடையில் உயர்ந்த ஒன்றாக-பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக ஆன்மீக நெறி, சமுதாயநெறி. முறைபிறழா அரசநெறி, கல்விநெறி ஆகிய அனைத்தும் மிக உயர்ந்த இடத்தினைப் பெற்றுச் சிறக்கவேண்டும் என்ற ஆசை -குறிக்கோள் அடிப்படையிலேயே இச்சிறுநூலை வெளியிடுகின்றேன். நாட்டிலுள்ள நல்லவர் - வல்லவர்-ஆட்சியாளர்கள்-அறிஞர்கள் நல்லவற்றை ஏற்று நாட்டை வளஞ்செய்து கல்வியினை நேரிய வழியில் ஒம்பி அதன் வழி நாட்டு நலனைக் காத்து, நாடு உயர்ந்து ஓங்க வழிகாண வேண்டும் என வேண்டி வணங்கி அமைகின்றேன்.

தமிழ்க்கலை இல்லம்

சென்னை-30 1.12.91

பணிவுள்ள,

அ.மு. பரமசிவானந்தம்

* * *

அச்சிடும்போது பிழைகளை ஒத்து நோக்கித் திருத்தி உதவிய பேராசிரியர் திரு. சா. வளவன் அவர்களுக்கு என் நன்றி உரித்து. .

அ.மு.ப

1. கல்வி எனும் கண்

* * *

உலகம் சுழன்று வரும் வேகத்தில் மக்கள் உணர்வு ஊசலாடுகின்றது. கி.பி. 2000இல் இதைச் செய்வோம், அதைச் செய்வோம்—நாட்டை பொன்னாடாக்குவோம்—விண்முட்டப் புகழ் பரப்புவோம் என்று மேலை நாடுகள் மட்டுமின்றி. பரந்த பாரதமும் அதன் அங்கமாக உள்ள தமிழகமும் நாள்தோறும் முழங்குகின்றன. ஆனால் செயல் முறையில் அத்தகைய, நாட்டமும் ஊக்கமும் உணர்வும் வேகமும் காட்டவில்லை:

"கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றல் இன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே

நாளில் மறப்பாரடி"

என்று பாரதியார் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூறிய கூற்று. இன்றும் மெய்ம்மையாக அன்றோ உள்ளது. ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்பது இன்றைய வழக்கமாகிவிட்டது. அரசியலைச் சூதாட்டம் என்பர். ஆனால் அறிவியல், ஆன்மவியல், சமூகவியல், பண்பாட்டியல் யாவுமே சூதாட்டமாகவன்றோ இன்று வடிவெடுத்து உலவுகின்றது. பாரதி பாடி ஒரு நூற்றாண்டு-அவன் மறைந்து முக்கால் நூற்றாண்டு, உரிமை பெற்று அரை நூற்றாண்டு இப்படி நூற்றாண்டு எல்லை கழிந்தும் இந்திய மக்கள்—தமிழ் மக்கள் எந்தவகையில் முன்னேறி உள்ளனர் என்று சொல்ல முடியும்? எண்ணிப் பாருங்கள்!

‘வஞ்சமின்றி வாழுமின்’ என்று பெரியவர்கள் வலியுறுத்திய நாட்டில்-வள்ளுவர் பிறந்த நாட்டில் வாழ்க்கை நெறி எப்படி வரம்பின்றி வீழ்ந்து, நாட்டையும் உலகையும் நலிவுறுத்துகின்றது. இன்று பலர் பேசுவது

போன்று 'ஆங்கிலேயன் ஆட்சியே மேல்' என்ற உணர்வு தானே பலருக்கு உண்டாகின்றது. உணவிலே, உடையிலே, ஊர்ப் பயணத்திலே, உற்ற செயல்களிலே மனிதன் மாறி விட்டாலும் கவலை இல்லை. காலம் அவனைத் திருத்தி விடும் என நம்பலாம். ஆனால் உள்ளத்தால்-உள்ளத் துணர்ந்து காணும் பண்பாட்டால்-அப்பண்பாட்டின் வழியே முகிழ்க்கும் செயலால் அவன் மாறிவிட்டால் அவனை என்றும் யாராலும் திருத்த முடியாதே! சமுதாயத்தில், தன்னை ஒரு அங்கமாக்கிக்கொண்டு, தான் சமுதாயத்துக்காக வாழவேண்டியது மக்கள் நியதி. நாம் சமுதாயத்துக்கு-உயிரினத்துக்கு இன்று என்ன செய்தோம் என அவன் இரவில் படுக்கப் போகும்போது எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டவன். ஆனால் இன்றைய மனிதன், எனக்கு மற்றவர் இன்று என்ன செய்தார்கள்-நான் யார் யாரிடம் கையூட்டு வாங்கினேன்-மொத்தம் எவ்வளவு ஆயிற்று-ஏன்? எத்தனை பேருக்குத் தீங்கிழைத்தேன்எத்தனை பேரைக் கொலை செய்தேன் என்றல்லவா கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் களம் காணவேண்டிய-செயலாற்ற வேண்டிய படைக்கலன்கள், இன்று வீடுதொறும்-தெருதொறும்-சந்திதொறும் ஓயாது ஒலிப்பதையும் பாழ்படுத்துவதையும் நாம் காண்கிறோம். 'துப்பாக்கி கலாசாரம்' (Gun Culture) என்று 'பிறரைச் சுடுதலாகிய பண்பாடே' என்று பேசுவதன்றோ இன்று நாட்டில் நடமாடுகின்றது. மாணவன் ஆசிரியரைக் கண்டு பயந்து-பணிந்து வணங்கிய காலம் போய் ஆசிரியர் மாணவரைக் கண்டு பயந்து நடுங்கும் காலம் வந்துவிட்டது. நாடாளும் மன்னர்கள் அச்சமின்றி இரவிலும். பகலிலும் தனியாக நாட்டு நலன் காண வரும்போது மக்கள் அஞ்சியும் அன்புளத்தாலும் போற்றி வணங்கிய நிலைமாறி, ஆளுகின்றவர்கள் மக்களுக்கு அஞ்சி அடுக்கடுக்காகக் காவல் சூழ அன்றோ வெளி வரவேண்டியுள்ளது. வீடுதோறும் கலையின் விளக்கம் என்று கேட்டவர்களுக்கெல்லாம் புதுப்பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாரி வழங்கிய பண்பாடு நீங்கி, இன்று

பள்ளியோ கல்லூரியோ தொடங்கவோ அன்றிப் புதுப்புதுப் பாடங்கள் பெறவோ இலட்சக்கணக்காகக் கையூட்டு தரவேண்டிய காலமாகவன்றோ இன்று மாறிவிட்டது. இந்த நாட்டில் லஞ்சம் தாண்டவமாடாத இடம் எங்கும் இல்லை என்ற பெருமைக்கு இங்குள்ளவர்கள் வழிவகுத்து உள்ளார்களே. சிறு ஊழியர்கள் பத்து, நூறு என்ற அளவில் நிற்க, பெரியவர்கள்-உயர்நிலையாளர்கள், ஆட்சியாளர்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்குவதுதானே இன்றைய வாழ்க்கை நெறி, ‘சம்பளம் கிம்பளம்’ என்று வேடிக்கைக்காகச் சொல்லும் சொற்றொடர் இன்று வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்று விட்டதே. பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆயிரக் கணக்கிலும் இலட்சக் கணக்கிலும் வாரிக்கொட்ட வேண்டியுள்ளது. அப்படியே வேலை பெறத் தகுதி வேண்டாது லஞ்சமே அளவு கோலாக அமைய இலட்சத்தின் எல்லையினையும் அது கடக்கின்றதே!-இந்த அவல நிலையில், ‘மனிதன் எங்கே செல்கிறான்?’ என்ற கேள்வி எழுகின்றதே இந்த நிலையில் பாரதி கூறியபடி ‘நாட்டத்தில் கொள்வது’ எங்கே? எப்படி முடியும்?

பல பொருள்களைப் பற்றி எண்ணம் எழுகிறது. இங்கே முதலில் கல்வியைப் பற்றிக் காணலாம். பழங்காலத்தில் கல்வி போற்றப் பெற்றமை ‘குருகுல வாசம்’ என்ற வகையால் நாம் அறிகிறோம். தனித்த குருவினிட்ம், அவர்கள் வீட்டுப் பணிகளையும் செய்து கொண்டு, குடும்பமாகச் செல்வரும் வறியரும் வேறுபாடு இன்றி, கல்வி கற்று முன்னேறி நாட்டை வாழ்வித்தனர். வறிஞரான குசேலரும் அரச மைந்தனான கண்ணனும் ஒரே குருவிடம் வேறுபாடின்றிக் கற்றனர். பல பேரறிஞர்கள் அரச குமாரர்களையும் ஆண்டிகளின் பிள்ளைகளையும் தம்முடன் இருத்தி, தக்க வகையில் கல்வி கற்பித்ததைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் இன்று அந்த நிலையில்லை. ஆசிரியர்களும் நன்னூலாசிரியர் காட்டிய நல்லாசிரியர்கள் போன்று கோல்டு ஸ்மித் என்ற ஆங்கிலப் புலவர் காட்டிய என்ற ஆங்கிலப் புலவர் காட்டிய :கிராமப் பள்ளி ஆசிரியர் போன்று முற்றும் கற்று உணர்ந்தவர்களாய்-ஊருக்கு வழிகாட்டும் உத்தமராய், எதுவரினும் கலங்காத உள உரம் உடையவராய்-தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்-தலை நிமிர்ந்து மலையினும் மாணாப் பண்பு பெற்ற பெரியவராய் வாழ்ந்துவந்தனர். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் நிலையினை எண்ணிப் பார்க்கக் கூடவில்லை. எங்கோ ஒரு சிலர் பழைய பண்பாட்டு நெறி மாறாமல் வாழ்கிறார்கள். என்றாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தாழ்வுற்றுத் தறிகெட்டுத்தானே வாழ்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி மாணவர் நடந்தால் என்னாகும்? பட்டங்கள் பெறுவதிலும் எத்தனை ஏமாற்றம். பல பல்கலைக் கழகங்கள் காளான்களாகத் தோன்றி-அரசு தரும் உரிமம் இன்றியே (அங்கீகாரமின்றியே) செயல்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்து, பின் நடுத்தெருவில். நிற்கவிடுகின்றன. ருபாய் இருநூறும் முன்னூறும் தந்தால் டாக்டர் பட்டம் பெற வாய்ப்பும் உண்டே! இவை பற்றியெல்லாம் நாள்தோறும் நாளிதழ்களில் செய்திகளைக் காண்கின்றோமே! பட்டங்கள் பெறுவதைப்பற்றியும் நகைப்புக்கிடமான வகையில் பல செய்திகள் வருகின்றனவே. ‘டாக்டர்’ பட்டம் பெறுவதற்குப் பணமே முக்கியம். படிப்பு முக்கியமில்லை என்று சில ஆண்டுகளுக்குமுன் ஒரு சிறந்த நாளிதழில் அன்னையார் ஒருவர் எழுதிய கட்டுரை என் நினைவுக்கு வருகின்றது. அதை யாராவது -எந்தப் பல்கலைக் கழகமாவது மறுத்ததுண்டா? உண்மையை எப்படி மறுக்கமுடியும்?

மேலை நாடுகளில் சிறப்பாக அமெரிக்காவில் தமிழ் நாட்டுப் பழங்காலக் கல்வி முறையினை, நான் சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது: கண்டு மகிழ்ந்தேன். என் நூலிலும் (ஏழு நாடுகளில், எழுபது நாட்கள்) அதுபற்றிக் குறித்துள்ளேன். ஒரே பாடத்துக்கு. நான்கு ஆசிரியர் என்ற அவல நிலை அங்கில்லை. ஒரே பேராசிரியரின் கீழ், ஒரே

தெளிந்த பாடத்தினை எடுத்துக் கொண்டு, அவரிடமே முறையாகப் பயின்று, நூல் நிலையத்தினை நன்கு பயன்படுத்தி, தக்க வகையில் சில விடங்களில் ஆண்டு எல்லை கூட இன்றிப் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். அவர்தம் தெளிந்த புலமையை உலகம் வியந்து போற்றுகின்றது. இது நம்நாட்டுப் பழக்காலக் குருகுல வாக்கையினையே நினைவூட்டுகிறதன்றோ! அங்கே தமிழும் அந்த வகையிலேயே பயிற்றப்பெறுகின்றது. ‘ஒளவையார்’ பாடல்கள் ஒன்றனையே பாடமாகப் பெற்று, ஒரே ஆசிரியரின் கீழ்ப் பட்டம் பெறப் பயின்றவரை நான் கண்டேன். அப்படியே டாக்டர் பட்டம் பெறுவதும் ஆழ்ந்து பயின்று தெளிந்தாலன்றி இயலாது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தே தமிழ்நாட்டுப் பொருள் பற்றிய (worship of Sun God in Tamilnadu during nineth century) கட்டுரை ‘எம்.எ.’ வகுப்பிற்கு ஆய்வுக் கட்டுரையாக அமைய, பல தேர்வாளர்களோடு நானும் ஒருவராய் இருந்தேன். நில நூல், தமிழ், வானநூல் போன்ற பல நூல்கள் கற்ற பல துறையினர் 36 பேர் கூட்டி, அந்தக்கட்டுரையை ஆராய்ந்து, கேட்ட கேள்விக்ளுக்கெல்லாம். அந்த மாணவி பதில் அளித்தார். சிறந்த வகையில் அமைந்ததால் பட்டமும் பெற்றார்.

இங்கே டாக்டர் பட்டத் தேர்விற்கு அம்மாணவரின் மேற்பார்வையாளரே முக்கிய தேர்வாளர். அவருக்கு வேண்டிய வேறு இருவர் உடன் தேர்வாளர்கள். பின் எதை எழுதினும் பட்டம் பெறத் தடை என்ன?

எங்கள் கல்லூரியில், தமிழில் முதல் வகுப்பில் தேறிய ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். ஒரு நாள் அவரை அழைத்து, ‘வாக்குண்டாம்’ என்ற நூலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று கேட்டேன். ஆமாம் ‘வாக்குண்டாம் நல்ல மன்முண்டாம்’ என்ற பாடல் இருக்கிறது என்று யோசித்துச் சொன்னார். ஆனால் அந்த நூலைப் பற்றியோ அதன் ஆசிரியரைப் பற்றியோ அவ்ர் எழுதிய வேறு நூல்களைப்

பற்றியோ ஒன்றும் தெரியவில்லை. நல்லவேளை அவர்கள் இப்போது பணியில் இல்லை.

ஒருமுறை தேர்வாணையத்தில் கல்லூரி ஆசிரியரைத் தேர்வு செய்யும் பணிக்கு அழைக்கப்பெற்றேன். அங்கே வந்த ஒருவர் ‘எம்.ஏ.’ வகுப்பில் சைவ இலக்கியங்களைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தார். எனவே நான் அவர்களை நோக்கி, முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் யார்? என்று கேட்டேன். உடனே தயக்கமில்லாமல் ‘திருநாவுக்கரசர்’ என்றார். உறுப்பினர் அனைவரும் சிரித்தனர். என் பக்கத்திலிருந்த முகமதிய உறுப்பினர் ‘ஐயா, எனக்குத் தெரிகிறதே, இவர்களுக்குத் தெரிய வில்லையே’ என்று வருந்தினார். அந்த ஆண்டு அவரைத் தேர்வு செய்யவில்லை. எனினும் அடுத்த ஆண்டு எப்படியோ இடம்பிடித்து, இப்பொழுது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இதுபோன்று எத்தனையோ சான்றுகள் காட்ட முடியும்.

தமிழில் மட்டுமின்றி பிறமொழிகளிலும் பிறபாடங்களிலும் இதே நிலையினைக் காண முடிகின்றது. எங்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு வரும் விண்ணப்பங்களைப் பார்த்தால் மயக்கம் வந்துவிடும். ஆங்கிலத்தில் சிறப்பு நிலையில் 80% மேல் எண் வாங்கிய ஒருவர் எழுதிய விண்ணப்பத்தில் குறைந்தது ஐந்தாறு சாதாரணப் பிழைகள் இருக்கும். அப்படியே தமிழ் பயின்றவர்கள் நேர்முகத் தேர்வில் சங்கப் பாடல்களில் சாதாரண கேள்விகள் கேட்கும் போதுகூட, பதில் சொல்ல முடியாது திணறுவார்கள் இத்தகைய ஆசிரியர்களிடம் பாடம் பயிலும் மாணவர்கள் எப்படி வல்லுநர்களாக-நாட்டின் பெருமையைக் கட்டிக்காப்பவராக வரமுடியும்? நாடாளும் நல்லவர் இந்த நிலையினை எண்ணிப் பார்க்கவேண்டும்.

நாட்டில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்றவற்றிற்கெல்லாம் நூற்றுக்கு 70, அல்லது 80 வாங்க

வேண்டும் என வரையறுக்கிறார்கள், ‘பி.பி.ஏ.’ போன்ற பாடங்களுக்கு 60% தேவையாகிறது. ஆனால் ஆசிரியர் படிப்புக்கோ ஒன்றும் தேவை இல்லை. பல முறை தோல்வியுற்று நூற்றுக்கு முப்பத்தைந்து நாற்பது வாங்கினால் போதும் என்ற விதி உள்ளது. ‘இது முறையோ! இது தகுமோ! இது தருமந்தானோ?’ என்று வள்ளலாரைப் போன்று வாய் விட்டு அலற வேண்டியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி சிறுவகுப்புகளுக்கு உரிய ஆசிரியர்களுக்கு (Sec-Grade) இரண்டாண்டுகள் இருக்க, உயர்நிலைப் பள்ளியில் பயிற்றுவோருக்கு ஓராண்டாகக் குறைத்தது ஏனோ எப்படி அந்த எல்லையில் அவர்கள் பயிற்சி பெற முடியும்? அவர்களுக்கு (Practical work) களப்பணியும் செம்மையாக நடைபெறுவதில்லை. ஜூலை கடைசியில் சேர்ந்து, பிப்ரவரி இறுதியில் முடித்து. மார்ச்சில் தேர்வு எழுதி, பட்டம் பெற்றவர் எப்படி முதிர்ந்த அறிவுடைய பவணந்தி காட்டிய ஆசிரியராக முடியும்? அதிலும் இப்போது அஞ்சல் வழிக்கல்வி முறையிலே இப்பயிற்சியைப் பல்கலைக் கழகங்கள் போட்டியிட்டுப் புகுத்தியுள்ளன. எப்படி, களப்பணியும் பாடங்கள் அறியும் நிலையும் அவர்களுக்கு அமையும். ஆகவே எப்படியோ இயந்திர சாலையில் இயந்திரங்களை உற்பத்தி செய்து அனுப்புவது போன்று பல்கலைக்கழகங்கள் பல்லாயிரவரை அனுப்பி நாட்டைப் பாழ்படுத்துகிறது. இயந்திரங்களாவது செம்மையாகச் செயலாற்றும். ஆனால் ஆசிரியர்கள்? இவர்கள் தேர்வினைத் தக்க வகையில் 70% மேற்பட்ட எண் பெற்றவராகத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டு தக்க ஆசிரியரின் கீழ்ப் பயிற்சி பெறச் செய்தால் இவர்களிடம் பயில்வோர் சிறந்து விளங்குவர். இந்த அடிப்படை இல்லை. நாட்டில் கல்வியின் தரம் ‘குறைந்து விட்டது-குறைந்து விட்டது’ என்று மத்திய அமைச்சர்கள்-மாநில முதல்வர்கள் ஆகியோர் கூறுவதில் பயனில்லை. சிகரெட்டு விளம்பரத்தை அழகாக நாளிதழில் விளம்பரப்படுத்தி, அடியில் சிகரெட்டு பிடிப்பது நோயற்ற வாழ்வுக்கும் கேடு பயப்பது’ என்று அச்சிட வேண்டும் என: அரசாங்கம் சட்டம் செய்துள்ளது. சிகரெட்டை அரசாங்கம் விரும்பினால் தடை செய்யலாம். அதைச் செய்யாது, அது பற்றி விளம்பரங்களையும் அனுமதித்து, அதன் கீழே அது தீங்கு செய்யக் கூடியது என்று அச்சிடுவது கேலிக் கூத்தாக அல்லவோ உள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்கள் எனக் கருதுகிறார்களோ எனவும் நினைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வகையில் நாட்டின் கண்ணான கல்வியினைக் காட்டும் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முதல் பணி செம்மையாக நடைபெற வேண்டும். அத்தகைய நிலை அமைந்தால்-நல்லவர்-கற்றவர்-வல்லவர்-கடமை உணர்ந்து செயலாற்றுபவர் (கை எழுத்திட்டு வேறு வேலை கவனிக்காது செயல்புரிபவர்) மாணவர் நலம் கருதி அவர் உளங்கொளப் பாடம் சொல்பவர் பவணந்தியின் இலக்கணத்துக்கு இலக்கியமாக அமைபவர் ஆசிரியர்களாக அமைவர். அவ்வாறு அமைந்தால், நாட்டுக் கல்வி உயர்நிலை பெறும் என்பது உறுதி. ஆட்சியாளர்கள் இதில் முதல் கவனம்-முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.

பல்கலைக் கழகமானியக் குழு, இந்த அஞ்சல் வழிக்கல்வி முறையினை-ஆசிரியர் பயிற்சி அளவில் எடுத்துவிடப் போவதாக அண்மையில் ஒரு செய்தி வந்தாக அறிகிறேன்: விரைவில் செயலாக்கப் பெறின் பயன் விளையும்.

மற்றொரு வேடிக்கை. கல்லூரி ஆசிரியருக்கு" எந்தவிதப் பயிற்சியும் இல்லை. நேற்றுவரை ‘எம்.ஏ.’, பயின்றவர் எம்.பில்., தேர்வு எழுதியவர், இன்று சூன் திங்களில் அந்த ‘எம்.ஏ’ அல்லது ‘பி.ஏ’. வகுப்பிற்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியராகிவிடலாம். இதை எந்த அறிவுள்ள உலகமாவது ஏற்றுக்கொள்ளுமா? எண்ணிப்பார்க்க வேண்டாமா? பின் எவ்வாறு நம் மாணவர்கள் முன்னேற முடியும்? இனியாகிலும் உள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலோ அன்றிப் புதிதாகக் கல்லூரி அமைத்தோ தனியாகக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சியினை அளித்தல் இன்றியமையாததாகும், பள்ளிகளும் கல்லூரிகளும் நாட்டில் பல்கிப் பெருகி. விட்டன. ஆனால் தரம் தாழ்ந்துவிட்டது. இதுதான் ஆளும் தலைவர்கள் உட்படப் பலரும் கூறுவது. ஏன் இந்த அவலநிலை? நான் மேலே காட்டிய இரண்டொன்று மட்டும் காரணமாக நின்றுவிடாது. இன்னும் சில உள்ளன.

இன்று எல்லாரும் கல்வி கற்க வேண்டும் என்ற அவாவினால் பலரும் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் நகரங்களிலும் - கிராமங்களிலும் கூட ஆங்கில்ப் பயிற்சிப் பள்ளிகளே அதிகமாக வளர்கின்றன. ‘வீதி’தோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி இத்தகைய பள்ளிகளைச் சொல்லவில்லை. வீட்டில் பெற்றோர்களும் மம்மி, டாடி என்று குழந்தைகள் அழைப்பதில் பெருமை கொள்ளுகின்றனர். ஆயிரக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து, நூற்றுக்கணக்கில் மாதச் சம்பளம் கட்டி, நெருக்கமான வீடுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள இப்பள்ளிகளில் பெற்றோர் தம் குழந்தைகளைச் சேர்க்கின்றனர். அங்கே உரிய பாடங்களையும் நன்கு கற்றுத் தருவதில்லை. எங்கோ ஒரு சில பள்ளிகள் தவிர, பல, வணிக நிலையங்களாகவே செயல்படுகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய பள்ளிகளில் பயின்ற பிள்ளைகளை எக்காரணம் கொண்டும், அரசாங்க இசைவு பெற்ற பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்ற உத்திரவிட்டு, அதைச் செம்மையாகப் பாதுகாக்க வேண்டும். ‘முதற்கோணல் முற்றும் கோணல்’ என்றபடி இந்த முதற் கோணலே நாட்டுக் கல்வியை நலிவு செய்கிறது. இது மாற்றப் பெறல் வேண்டும். அரசாங்கம் உடன் ஆவன செய்ய வேண்டும்.

பள்ளியில் பயிலும் மாணவரும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் அமைவதோடு அவற்றை மாணவர் நன்கு அறிந்து தெளிந்த பின்னரே மேல் வகுப்பிற்கு மாற்றப் பெறல் வேண்டும். பள்ளியில் சேர்ந்துவிட்டால் பத்தாம் வகுப்பு வரை, தன்னை யாரும் தடை செய்ய முடியாது என்ற நினைவில் பலர் படிக்காமலும் பள்ளிக்குப் பல நாள் வராமலும் வேறு வகையில் வாழ்கின்றனர். சில பெற்றோர் தங்கள் வேலைகளுக்குப் பிள்ளைகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வினை முறையாக நடத்தி நன்கு எழுதி வெற்றி பெறுபவரையே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும், எந்தவிதத் தேர்வும் இன்றிப் பத்தாம் வகுப்பு வரையில் செல்லலாம் என்ற நிலை ஒருகால் இருந்தது. நூற்றுக்குப் பதினைந்து பெற்றால் போதும்; மேல் வகுப்பிற்குப் போகலாம் என்ற நியதியும் ஒருகால் இருந்தது. இன்று அவை இல்லை என எண்ணுகிறேன். பள்ளியில் பயிலும் பிள்ளைகள் வகுப்பிற்கு ஏற்ற பாடங்களை முறையாகப் பயின்று படிப்படியாக மேலேறினால் தான் பயன் உண்டு. இந்த நிலை நன்கு வற்புறுத்தப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் (செப்-5) நடைபெறுகிறது தேர்ச்சிபெற்ற சிறந்த மாணவர்களுக்குப் பரிசுவழங்கப் பெறுகிறது. நல்லாசிரியர் விருதும் வழங்கப்பெறுகின்றது. ‘நல்லாசிரியர்’ விருது பற்றிச் சிலருக்கு மனக்கசப்பு உண்டு. இங்கே நான் அதுபற்றி ஆராயவிரும்பவில்லை. ஆனால் மாணவருக்குப் பரிசு வழங்குவது எண்ணத்தக்கது. பல பள்ளிகளில் மாணவர் தங்கள் தங்கள் பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். பல பள்ளிக்கூட மாணவர்கள் வேறுபள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதன் காரணத்தை நான் ஆராய வேண்டா. ஆனால் தம் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தாமே விடைசொல்லித் தருவதும், நூல்களைத் தந்து விடை எழுத வைப்பதும் சிலவிடங்களில் நிகழ்கின்றன. ஆனால் அதே பள்ளியில் தேர்வு எழுதும் வேற்றுப்பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாளும் உரிய வேளையில் தருவதில்லை முடியப் பத்து நிமிடம் இருக்கும் போது, எழுதத் தாள்கேட்டால், ‘நீ இனி என்ன எழுதிக் கிழிக்கப்போகிறாய்! போதும் கொடு’ என்று தடுப்பவரும் உள்ளனர். இதுபோன்ற கொடுமைகள்பற்றித் தேர்வாணையருக்கும் பெற்றோர் கடிதம் எழுதி இருப்பார்கள்.

முன்பெல்லாம் ஒரு பள்ளிமாணவர் மற்றொரு பள்ளியில் தேர்வு எழுதுவது வழக்கம். திரு வி க. பள்ளி கிறித்துவர் கல்லூரிப் பள்ளியில் எழுதலாம். கிறித்துவர் கல்லூரிப் பள்ளி வேறுபள்ளியில் எழுதலாம். வேறு பள்ளி மாணவர் திரு.வி.க. வில் எழுதலாம். இந்த முறை கல்லூரிக்கும் பொருந்தும். நான் பச்சையப்பரில் பணியாற்றிய ஞான்று பெரும்பாலும் லயோலா கல்லூரி மாணவர் பச்சையப்பரில் எழுதுவர். இந்த முறை இருப்பின் மாணவர் உண்மையான திறன் கண்டு தெளியப் பெறும். இல்லையாயின் இன்று சிறந்த மாணவர்களுக்கு வழங்கும் பரிசை ‘லஞ்சமற்று’ வழங்கிய பரிசாகக்கொள்ள இயலாது. மத்திய கல்வி நிலையங்களில் வேறு பள்ளியின் தலைவர் வந்து பள்ளியின் தேர்வை நடத்துவர். அதனினும் முந்தியது சிறந்தது. வேண்டுமாயின் மாணவர் அடையாளம் காட்ட, பயின்ற பள்ளியின் இரண்டொரு ஆசிரியர் தேர்வுப்பள்ளியில் கண்காணிப்பாளராகச் செல்லலாம். ஒரு கல்லூரியில் மூன்றுமணி நேரத் தாளை நான்குமணி நேரம் எழுதவைத்ததோடு விடைகளையும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தார்களாம். எப்போதோ ஒரு முறை பல்கலைக் கழகப் பறக்கும்படை வரும். அப்போது சற்று நிமிர்ந்து விடுவார்களாம். இதுபற்றிச் சென்ற ஆண்டு பல்கலைக்கழகத்துக்குக் குறிப்புவந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்ததோ தெரியாது. எனவே, தேர்வுமுறை இந்தவகையில் மாற்றி அமைத்தாலன்றி, சிறந்த மாணவருக்குப் பரிசு வழங்கல் ஒரு கேலிக்கூத்தாகவே முடியும்.

இனி பள்ளிநடக்கும் வேளையினைப்பற்றி எண்ணுவோம். மேலைநாடுகளிலும் அமெரிக்கா ஜப்பான் மலேசியா போன்ற கீழைநாடுகளிலும் பள்ளிகள் காலை 7.30 அல்லது 8க்குள் தொடங்கி 12 அல்லது 1 மணிக்குள் முடிந்துவிடும். காலை 8 மணிக்குச் சூரியனைக் காணாத அந்த நாடுகளிலெல்லாம் அவ்வாறு விடியலில் பள்ளிகள் நடக்கும்போது, நம்நாட்டில் மட்டும் பத்துக்கு என வைத்து, நன்கு உண்டபிறகு, உறங்கும் நிலையில் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகிறோம். சென்னை போன்ற நகரங்கள் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குப் போவதால் பெரும்பாலும் அவர்கள்பணி 10க்குத் தொடங்குவதால் குழந்தைகளை அப்படியே பள்ளியில் விட்டு வேலைக்குச் செல்ல செளகரியமாகும் என நினைக்கின்றனர். நல்லவேளையாக, பஸ் நெருக்கடி காரணமாகச் சென்ற ஆண்டு காலை 8.30க்குப் பள்ளிகள் தொடங்க முடிவு செய்து இன்று நடைமுறையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நடைபெறுதல் நல்லது. .

‘வெள்ளி முளைக்கப் பள்ளிக்கும் வாரும்’ என்று விநாயகர் வழிபாட்டில் ஓரடி வருகிறது. அப்படி விடியற்காலையில் சென்று. விளக்கின்றேனும் முறையம் சொல்லும் வகையில், பல இலக்கியங்களை, வாய்பாடுகளை முறையாக ஆசிரியரோ, மற்றைய அறிந்த மாணவரோ சொல்ல, மற்றவர்கள் சொல்லுவார்கள். பின் பொழுது விடிய; அவரவர் வீட்டிற்குச் சென்று, ஒன்பது மணி அளவில் வந்து பாடங்களைப் பயில்வர். இந்த ‘முறையம்’ சொல்லும் வகையில் கீழ்வாய் இலக்கம், முதலிய கணக்குக்குரிய வாய்பாடுகள் மனப்பாடமாகின்றமையால் இன்றைய (Clerk Table) கிளார்க்டேபில் போன்றவை இல்லாமலே எத்தகைய. பின்ன கணக்குகளையும் பிறவற்றையும் மனத்தாலேயே போட்டு முடிவு எடுப்பர். அப்படியே நிகண்டு முதலியன படிப்பதால், அகராதி இன்றியே எல்லா இலக்கியங்களுக்கும் உரை காண்பர். நல்ல இலக்கியங்கள் மனப்பாடம் ஆவதால் அவர்தம் பேச்சும் எழுத்தும் சிறந்து விளங்கும். இளமையில் என் கிராமத்தில், அக்காலத்தில் (1918-24) இவ்வாறு பயின்றமை இன்றும் நினைவுக்கு வருகிறது. ஆயினும் இந்த முறை இன்று நடைபெறாது. அதுபோன்று விடியலில் எழுந்து சொல்லித்தரும் ஆசிரியரும் இல்லை; மாண்வர்களும் எழுந்து போக மாட்டார்கள். ஓரளவு இன்று வேறுபல சாதனங்கள் வந்துவிட்டமையால் மனப்பாடம் தேவை இல்லாத ஒன்றாகி விட்டது மனிதனால் செய்யப் பெற்ற கணிப்பொறி மனிதனைக் காட்டிலும் ஆயிரமாயிரம் நினைவாற்றல் உடையதாக, மனிதனுடைய வாழ்வையே தனதாக்கிக் கொள்ளும் நிலையில் நாம் வாழ்கிறோம். எனவே குருகுல வாசமும் மனப்பாடம் செய்யும் முறையும் மெல்ல மெல்ல இல்லையாகிவிட்டன.

இனி, பாடங்களைப் பற்றி ஓரளவு எண்ணலாம் என எண்ணுகிறேன்.

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின் கார்கொள்வானிலோர் மீன் நிலைதேர்ந்திலார்

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார் வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்

துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள் சொல்லுவார் எட்டுணைப் பயன்கண்டிலார்

என்றுபாரதி பாடிய அதே நிலையில்தானே இன்றும் நாடு இருக்கிறது. 11+2+2 என்பதுமாறி 11+1+3 எனமாறிற்று பின் அதுவும் மாறி 10+2+3 என மாறிற்று. இப்படி வருடக் கணக்கு மாறி மாறி வருவதால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடுமா? பாடத்திட்டங்களில் என்ன மாற்றம் உண்டு? அப்படியே தமிழ் இரண்டாம் இடத்திலிருந்து முதலிடம் என்று பெயரைப் பெற்றதே தவிர ஆங்கிலம்தான் கட்டாயம் பயில வேண்டியுள்ளது. தமிழோ பிற இந்திய மொழிகளோடு, மற்றைய பிரஞ்சு, லத்தீன் மொழிகளோடு ஒரு மொழியாகவே ஒதுக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோது, இன்றைக்குச் சுமார் நாற்பதாண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் பயிலும் மாணவர் அனைவரும் தமிழைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும் என வற்புறுத்தினர். சட்டம் செய்தார். அன்று பாட நூல்களைத் தனியார் வெளியிட்டனர். எனினும் அத்தகைய பாடநூல்களை உடன் துணிந்து எழுத யாரும் முன் வரவில்லை இம்முறை என்னாகுமோ? என அஞ்சினர். அமைச்சர் என்னை அழைத்து எழுதச்சொன்னார்கள். நான் பாடநூல் எழுதுவது இல்லை என்ற கொள்கை உடையவன். எனினும் அவர் கேட்டுக்கொண்டதற்காக இசைந்து ஆறு, ஏழு. எட்டு ஆகிய மூன்று வகுப்புகளுக்குப் பாடநூல் எழுதினேன். அதனை வெளியிடத் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் விரைந்து செயல்படாதபோது, அப்போது ஆங்கிலப் பதிப்பகமாக இருந்த மாக்மில்லன் கம்பெனியே வெளியிட்டது. பின்னால் பலரும் வெளியிட்டனர்.

தமிழினைப் பொது, சிறப்பு என இருவகையாகப் பிரித்து, பொதுவினை எல்லாரும் பயிலவேண்டும் எனவும் சிறப்பினுக்குப் பதிலாக சிறுபான்மையோர் அவரவர் தாய் மொழியினையோ வேறு வேண்டிய மொழியினையோ கற்கலாம் எனவும் விதித்து அவ்வாறே ஒரு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயமாக இருந்தது. அதே வேளையில் வேற்று மொழியாளராகிய சிறுபான்மையோருக்கும் அவரவர் மொழியினைக் கற்க வாய்ப்பும் இருந்தது. ஆயினும் அதே காங்கிரசினைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் கல்வியமைச்சராக வந்ததும், அந்த முறையை எடுத்துவிட்டு, தமிழைப் பதினான்கு மொழிகளோடு ஒன்றாக்கினார். அன்றுமுதல் வரும் கல்வி அமைச்சர்கள் முதல்வர்களுடன் இதைச் செயலாக்கவேண்டும்; தமிழ் நாட்டில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் யாரும் செவிசாய்க்கவில்லை. அண்டை மாநிலங்களில் கன்னடம், மராத்தி போன்ற மொழிகள் கட்டாயமாக வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல வேளை இன்றைய முதல்வரும் கல்வி அமைச்சரும் விரைவில் தமிழைக் கட்டாயம் பயில வழிகாண ஏற்பாடு செய்வதாக

அறிய ஆறுதல் பிறக்கிறது. அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் கடிதங்கள் எழுதினேன். விரைந்து செய்வார்கள் என நம்புகிறேன். அடுத்த கல்வியாண்டிலேயே (1992-93) அது செயலாக்கப்பெறும் என நம்புகிறேன்.

பாடநூல்களை இன்று அரசாங்கமே வெளியிடுகிறது. அந்த வெளியீட்டகம் பெரிய பத்து மாடிக் கட்டடமும் கட்டிக்கொண்டு சிறக்க வாழ்கின்றது. ஆயினும் பாடங்களைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரே வகையான நூலைத்தான் படிக்க வேண்டியுள்ளது. முன்பெல்லாம்-கால்நூற்றாண்டுக்கு முன் பல பதிப்பாளர்கள்-நூற்றுக்கு மேல் இருப்பர் என எண்ணுகிறேன். மொழிப்பாடங்கள் உட்பட நல்ல பாடநூல்களை எழுதினார்கள்-வெளியிட்டார்கள். பல தெளிந்த அறிவும் மதிநுட்பமும் உடைய ஆசிரியர்கள் நூல்கள் எழுத வாய்ப்பு இருந்தது. அப்படியே பதிப்பகத்தாரும் தரமான நூல்களை வெளிக்கொணர முடிந்தது. அவற்றை ஆராய ஒவ்வொரு பாடத்திற்கும் வல்லுனர்குழுக்கள் அமைத்து, நல்லனவற்றைக் கொண்டு, அல்லனவற்றைத் தள்ளினர். பள்ளிகளிலும் நல்லனவற்றை ஆராய்ந்தெடுத்து, சிறக்கக் கல்வியினை-எல்லாப் பாடங்களையும் கற்றுத் தந்தனர். இப்போதோ ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களை ஆசிரியர் குழுக்களாக அமைத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பகுதிகளை-சிலசமயம் அரசியல் வாடை வீசுவனவாக உள்ளவற்றையும் தொகுத்துப் பாடநூல்களாகத் தருகின்றன. சில சமயம் பாடத்திட்டத்தினையும் பிறவற்றையும் சரியாகப் புரிந்து கொள்ளாது ஏதோ தொகுத்தோம் என்று பாடநூல்களைத் தொகுத்துவிடுகின்றனர். புதிய பாடத்திட்டம் (10+2) வந்தபோது ஒரு பாடத்திற்கு இவ்வாறு தவறாக அச்சிடப்பெற்ற சுமார் 40000 நூல்கள் (நாற்பதாயிரம்) தள்ளப்பெற்று வேறு புதிய வகையில் வெளியிடப்பட்டதெனக் கேள்விப்பட்டேன். (அப்போது உயர்நிலைப் பள்ளிக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்),

தனியார் வசம் ஒப்புவித்தால் சிலசமயங்களில் தவறு உண்டாகிறது என்பார் கூற்று காதில் விழுகின்றது. வேண்டியவர்கள்-அல்லது கையூட்டு அதிகமாகத் தருகின்றவர்கள் அல்லது மேலிடத்து ‘சிபாரிசு’ பெற்றவர்கள் பாடநூல்களை -அவை பிழைபட்டனவாயினும் வெளியிட ஒப்புதல் தருவதும், அத்தகைய நூல்களை அப்படியே கையூட்டு முதலியன பெற்று பள்ளிக்கூடங்களில் வைக்கப்பெறுவதும் உண்டு என்றும் சிலர் கூறுகின்றனர். நாமும் அவர்தம் கூற்றினையும் நூற்றுக்கு நூறுபொய் என்று தள்ளவும் முடியாது. பல்கலைகழகப் பாடநூல் குழுவினர் இந்த வகையில் செயல்படுகின்றனர் என்ற பேச்சு அடிக்கடி காதில் விழுகிறது. இந்த ஆண்டு ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப்பகுதி நீக்கப்பெற்று வேறு அமைக்க ஏற்பாடு செய்யப்பெற்றதை நாளிதழ்கள் வெளியிட்டன. எனவே குறை எதிலும் இல்லாமல் இல்லை. எனினும் பலவற்றுள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து நல்லன செய்து வழிகாண வேண்டுவது அரசாங்கத்தின் கடமையாகும்-இன்றியமையாததுமாகும்.

பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிப்பாடங்களைத் தொகுக்கும் பொறுப்பினைக் கல்லூரி ஆசிரியர்களிடம் விடுகின்றது. இது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கொள்வோர் கொள்கை அறிந்து, இளம் உள்ளங்கள் அறிந்து பாடங்களை அமைக்க இயலாது என்பது பலர் கருத்து. மத்திய பள்ளிகளில் 10,12 ஆகிய தேர்வு எழுதும் வகுப்புகள் தவிர்த்து முற்றைய அனைத்து வகுப்புகளுக்கும் தனியார் பாடநூல்கள் உள்ளன-தரமாக உள்ளன. எனவே பயில்பவர் சிறக்க வருகின்றனர் என்ற நிலையும் உண்டாகிறது. இதை மாற்றுவதில் தவறு இல்லை. அறிவியல் போன்ற பாடங்களை வேண்டுமாயின் அத்தகைய உயர்நிலையில் உள்ளவர் இரண்டொருவர் துணைகொண்டு வெளியிடலாம். ஆனால் மொழிப்பாடங்கள் போன்றவை பயிற்றுபவர்களில் அனுபவம் முதிர்ந்தவர்களைக் கொண்டு தொகுக்கப்பெறின் பயன் விளையும்.

அண்மையில் மத்திய அரசாங்கம் கரும்பலகைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தில் ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கோடிக்கணக்கில் வாரிவழங்கியது. தமிழ்நாட்டில் அந்தத் தொகையினைத் தக்க வகையில்-அக்குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் நூல்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சான்றுகள் காட்டிச் சில இதழ்கள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை மறுத்து அரசாங்கமோ அந்த நூல்களுக்கு உரியவர்களோ எந்த மறுப்பும் வெளியிடாத காரணத்தால் அக்குற்றச்சாட்டுகள் உண்மை என்று கொள்ளத்தானே வேண்டி உள்ளது. எனவே இத்தகைய குறைபாடுகள் இல்லாவகையில் மாணவர்தம் எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் நல்ல பாட நூல்களை வெளிக்கொணர முயலவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் அமைக்கும் பாடங்களைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் அந்தந்தத் துறைகளைத் தனியாகக் காணும்போது விளக்கலாம் என எண்ணுகிறேன்.

தாய்மொழியிலேயே கல்வி அமையவேண்டும் என்று விடுதலைக்கு முன்பே மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் எல்லாப் பாடங்களுக்கும் நல்ல தமிழ்ச்சொற்களைக் கண்டு தனித்தனி (ஒவ்வொரு பாடத்திற்கும்) அகராதி நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவோர்க்கு ஊக்கம் அளித்தார் இராஜாஜி. அதற்குப் பிறகும் ஒருமுறை இந்த வகையில் எல்லாப் பாடங் களுக்கும் தனித்தனி அகராதிகள் வந்தன. மத்திய அரசும் ஒரு மொழிக்கு ஒரு கோடி அளவில் அவ்வம் மொழியில் பாட

க—2 நூல்கள் வெளியிடுவதற்கென மானியமாகத் தந்து ஊக்கியது. பிற மாநிலங்களெல்லாம் அவற்றைச் செலவு செய்து நூல்கள் வெளியிட்டன. சில மாநிலங்கள் கொடுத்த மானியம் போதாது என்று மேலும் கேட்டன. ஆனால் தமிழகம் தனக்கென மானியமாகத் தந்ததில் பெருந்தொகையினைத் திரும்பத் தந்தது எனக் கூறக்கேட்டிருக்கிறேன். ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று மேடையில் பேசுவதே அன்றிச் செயலில் காட்டுவர் இலரே என வருந்தவேண்டியுள்ளது இன்று (I.A.S.) ஐ.ஏ.எஸ். முதலிய தேர்வுகளில் தமிழ்நாடு எங்கேயோ பின்தங்கிவிட்டது என அரசியல் தலைவர்களும் ஆள்வோரும் கூறுகின்றனர். ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று கடை இடத்தில் வரக்காரண்ம் என்ன? பாடங்களை அவ்வம் மொழியில் பயிலலாம் என்ற நிலை மற்ற மாநிலங்களில் இருப்பதோடு ஐ.ஏ.எஸ். தேர்வினையும் அவரவர் தாய்மொழியில் எழுதலாம் என்ற விதியும் உள்ளது. வடநாட்டவரும் பிறரும் இந்தியிலும் பிற மொழிகளிலும் எழுதி அவ்வம் மொழி அறிந்தவராலேயே திருத்தப்பெற்று நல்ல இடங்களைப் பெறுகின்றனர். தமிழ் நாட்டிலிருந்து ஐ.ஏ.எஸ். எழுதுகின்றவர்கள் எத்தனை பேர் தமிழில் எழுதுகின்றனர்? யார் எண்ணிப் பார்ப்பவர்?

கால் நூற்றாண்டுக்கு முன் ஐ.ஏ.எஸ். தேர்விற்குத் தமிழில் ஒருதாள் அமைக்க விரும்பியபோது, நானும் திரு தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களும் பாடத் திட்டம் வகுத்து ஒரு தாளை எழுத ஏற்பாடு செய்தோம். அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளும் நான் பின் இரண்டு ஆண்டுகளும் தேர்வாளராக இருந்தோம். மிகக் குறைவாகவே -ஒரு சிலரே எழுத முன்வந்தனர். இன்றும் அந்தத் தாள் இருக்கிறது என எண்ணுகிறேன். (தமிழ் இலக்கிய வரலாறு-மொழி வரலாறு). அதை எழுதுபவர்கள் உளரோ இல்லையோ என்பது தெரியாது.

எனவே தமிழன் பேச்சினை விடுத்துத் தாய்மொழியில் கல்வியைக் கற்றுத் தெளிந்தாலன்றி, பாரத நாட்டுப் பிற பகுதிகளோடு போட்டியிட முடியாது. இன்று தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியில் பாதிக்குமேல் தமிழ் அறியாதவர்களாகவே உள்ளமைக்கும், கோட்டையில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் பயிலாதவர்களாக இருப்பதற்கும் இதுவே காரணம். தில்லி மத்திய அரசாங்கத்திலும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் எத்துறையில் சென்றாலும் தமிழரைப் பெரும்பாலும் காணமுடியும். அவர்களும் இங்கிருந்து செல்வோரை அன்புடன் ஏற்று ஆவன செய்து உதவினர். இன்று அங்கேயும் தமிழனைக் காண்பதரிது. ஏன் இந்த அவல நிலை? இதைத் திருத்த வேண்டாமா?

நான் ஆங்கிலத்தையோ இந்தியையோ வேற்று மொழியையோ நம் மாணவர் கற்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ‘தாய்க் கொலைச் சால்புடைத்து என்பாரும் உண்டு’ என்று முன்னைப் பெரியவர்கள் கூறியது போன்று தாய்மொழியைக் கொலைசெய்துவிட்டு வேற்றுமொழியினை ‘ஓம்பு’தல் தவறு எனவே சுட்டிக்காட்டினேன். தமிழோடு எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்கலாம் தமிழன் அத்துணை அறிவும் ஆற்றலும் திறனும் பெற்றவன். இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தமிழுக்குத் தமிழ்நாட்டில் முதலிடம் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்! இது புதிதன்று. இப்படியே பல மாநிலங்களில்-உலகில் பல நாடுகள் உள்ள நிலையினை அறியவேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருசில ஆண்டுகளுக்குள் ஆங்கிலம் பயிற்றுவிக்க அடிக்கடி விதிகள் மாற்றப்பெற்றன. ஒருமுறை ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் தொடங்கினால் போதும் என்றும், ஒரு முறை மூன்று அல்லது நான்காம் வகுப்பில் தொடங்கினால் போதும் என்றும் அரசு ஆணையிட்டதாக அறிகிறேன். அந்தக் காலத்தில்தான் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் மூலைக் கொன்றாகத் தோன்ற ஆரம்பித்தன. அந்தோ ஆங்கிலம் இல்லையா? என்று ஒன்றும் அறியாக் கிராமவாசிகள் உள்பட, ஆங்கிலப் பள்ளி எங்கே எங்கே என்று தேடி அவற்றுள் தம் பிள்ளையைச் சேர்க்கப்பாடுபட்டனர். இன்று கட்டுப்பாட்டுக்கு அடங்கா வகையில் அது பெருகி விட்டது. அவற்றை முறைப்படுத்துவதும் பெற்றோர்களைத் தெளிவுபடுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வகையில் 10ஆம் வகுப்பு வரையில் பலப்பல வகையில் பள்ளிகள் அமைந்துள்ளன. அரசாங்க இசைவு பெறாத குழந்தைகள் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன. பின் ஆறு முதல் பத்து வரையிலும் எத்தனையோ வேறுபாடு! மானியம் பெறும் எஸ்.எஸ்.எல்.சி எனும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், கீழ்த்திசைப் (Oriental) பள்ளிகள், மத்தியப் பள்ளிகள், தில்லி கிறிஸ்தவ சங்கம் நடத்தும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனப் பலவகையில் பள்ளிகள் நடைபெறுகின்றன. முதலது அரசாங்க முழு மானியம் பெற்று நடைபெறுவது. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலோ பாடத்திட்டம்-மொழித் திட்டம் மிகக் குறைவாக உள்ளது. கீழ்த்திசைப் பள்ளிகளும் அவ்வாறே. மத்தியப் பள்ளிகளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஆங்கிலத்தையே பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. சில மத்தியப் பள்ளிகளில் இந்தி பயிற்சி மொழியாக இருக்கலாம். இப்படித் தமிழ் நாட்டு இளஞ்சிறுவர்கள் பயில இடர்ப்படும் கல்வி நிலை தேவைதானா? அன்று ஆங்கிலேயன் ஆண்டகாலத்தில் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், அம்மரபினரைச் சார்ந்த குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இன்று அந்த மரபினர் தமிழ் மரபினரோடு ஒன்றிவிட்டனரே! மேலும் அப்பள்ளிகளில் 100க்கு 95க்கு மேல் மற்றவர்கள் தானே பயில்கின்றனர். ஆசிரியர்களும் அப்படியே. சிறுபான்மை கருதியோ வேறு காரணத்தாலோ அன்று ஆரம்பித்தாலும் அத்தகைய நிலை இன்று இல்லையே! சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் அனைத்தும் அந்த நிலையில் தானே உள்ளன. சிறுபான்மை நிலையங்களில் 100க்கு 90க்கு மேல் மற்றவர்கள்தானே பயில்கின்றனர். கிறித்தவப் பள்ளிகளிலும் சிறுபான்மையோர் நடத்தும் பிற பள்ளிகளிலும், அடிப்படையில் அமைந்த சிறுபான்மையோர் பள்ளிகளிலும் பயில்வோருள் 100க்கு 90க்கு மேல் அவ்வச் சிறுபான்மையைச் சாராதவர்கள்தாமே பயில்கின்றனர். இவற்றைச் சிறுபான்மையோர் கல்விச்சாலைகள் எனக் கொண்டு தனிச் சலுகைகள் அளிப்பது எப்படிப் பொருந்தும்? அவர்களே பெரும்பான்மையிராகவோ முற்றுமாகவோ பயின்றால் தனிச்சலுகைகள் தேவையே! அரசியல் சாசனத்தில் இதற்கு விளக்கம் தரப்பெறுதல் வேண்டும்.

எங்கோ சென்று விட்டேன். மன்னிக்கவும். தமிழ் நாட்டில் இவ்வாறு பலவகைக் கல்விகள் தொடக்கநிலையில் இருப்பது தேவைதானா! ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளி களில் பயிலும் மாணவர் தாமே உயர்ந்தவர் என்று கருதித் தனிச் சாதியாக வளர்கின்றனர். உள்ள வேறுபாடு போதாது என்று இந்தப் புதிய வேறுபாட்டினை அரசாங்கமே உண்டாக்க வேண்டுமா? கல்வித்துறை நிர்வாகிகளும் அமைச்சகமும் கருத்திருத்தி உடன் இதற்கு மருந்து காண வேண்டும். கல்வியை மாநில எல்லையிலே கொள்ள வேண்டுமேயன்றி, மத்திய அரசுடன் இணைத்தல் தவறாகும். இதை உணரும் நாளே நாட்டில் உண்மையான கல்வி மலரும் நாள். தமிழ்நாட்டு அரசாங்கம் உடன் தீவிரமாகச் சிந்தனை செய்து தொடக்கக் கல்வி நிலையில் (10ம் வகுப்பு வரை) இத்தனை வேறுபாடுகள் இல்லையாகச் செய்யவேண்டும். இளம் பிஞ்சு உள்ளங்களில் கற்கும்போதே மாற்று எண்ணங்களை-வேறுபாட்டு உணர்வுகளை வளர்க்கும் கல்வி முறை களையப்படல் வேண்டும். இன்றேல் நகத்தால் கிள்ளுவதை விட்டுப் பின் கோடரி கொண்டு வெட்ட வேண்டிய நிலை உண்டாகும். இந்த அடிப்படை மாற்றம் செய்யாது, எத்தனை ஒருமைப்பாடு மாநாடுகள் கூட்டினாலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வரிசை வரிசையாக நிகழ்ச்சிகள் அமைத்தாலும் பயன் விளையாது. ஆரம்பக் கல்வி பற்றியும் பிற நிலைகளைப் பற்றியும் உயர்நிலைக் கல்வி நிலை முதலியன பற்றியும் அவ்வத் தலைப்புகளில் பிறகு ஆராயலாம்.

நம் நாட்டில் நன்கு பயின்று சிறக்கப் பட்டம் பெறுபவர் நம் நாட்டில் தங்காது பிற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றார்களே என்று பெருந்தலைவர்கள் உள்படப் பலர் வருந்துகின்றனர். அண்மையில் நம் தமிழக முதல்வர் கூட அத்தகைய கருத்தினை ஓரிடத்தில் பேசியுள்ளார்கள் என அறிகிறேன். அதற்கு அடிப்படைக் காரணத்தை ஆராயவேண்டும். நான் 1985இல் மேலை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சென்ற காலை அங்குள்ளவர்களை இதுபற்றிக் கேட்டேன். பல நல்ல மருத்துவர்கள் (Doctors) பொறியியலாளர்கள் (Engineers)-பிற துறைகளில் வல்லுநர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்-அங்கங்கே சிறக்கச் செயல் புரிந்து அவ்வந் நாட்டை வளப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் ‘தாய்நாட்டை விட்டு ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் கூறிய பதில்கள் ஏறக்குறைய ஒரே முடிவினைத் தருவதாகவே உள்ளன. ‘நாங்கள் இங்கே நிறையவே சம்பாதிக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டை விட்டு வர மனமில்லைதான். இங்கே சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பாகம் அங்கே சம்பாதித்தாலும் போதும்; மன நிறைவோடு வாழ்வோம். இங்கே அறிவுக்கு, திறனுக்கு, ஆற்றலுக்கு, ஆக்க வழிக்கு உழைக்கும் உழைப்புக்கு முதலிடம் தருகிறார்கள். அங்கேயோ-தமிழ் நாட்டில் வேண்டியவர்களுக்கு, கையூட்டு தருபவர்களுக்கு தன் சொந்தக்காரனுக்கு-ஜாதிக்காரனுக்குத் தானே முதலிடம். அவர்களுக்கே பதவி உயர்வு, பிற எல்லாச் சலுகைகளும் தரப்பெறுகின்றன என்று நைந்து புலம்புகின்றனர். அவர்கள் திறனால் அங்கே எத்தகைய அற்புதகங்கள் நிகழ்கின்றன. அவர்கள் எல்லாம்-பொறியாளர்கள்-மருத்துவர்கள்-நோபல் பரிசு பெற்றவர்கள்-பேராசிரியர்கள்-பிற துறை வல்லுநர்கள்-இங்கே தமிழ்நாட்டில் இருந்தால் நாடு எவ்வளவு முன்னேறும் என எண்ணி நான் வருந்திய நாட்கள் பல. என் நூலில் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) இது பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டியுள்ளேன். இங்கும் பலர் உள்ளனர். அவர்கள் குமுறலோடு வேலை செய்வதையும் அறிவேன். அதனால் பல துறைகளில் வேலைகள் மந்தமாவதோடு முறையற்றதாகவும் அமைகின்றன. கல்வித் துறையிலேயே முறையாக மேலே வரவேண்டிய ஒருவரைத் தள்ளி வேறொருவரை உயர்த்தியதை அவர் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விடுகிறார் எனக் கேள்விப்படுகிறேன். இந்த நிலை, நாட்டில் நீங்கினால் ஒழிய, ஆயிரம் கோடி கோடியாக நாம் கல்விக்குச் செலவிடும் தொகை யாருக்கோ தான் பயன்படுவகையில் அமையும், இதை நம் நாட்டு அரசு நன்கு எண்ணி, தக்கதின்ன தகாதன இன்ன என்று ஆய்ந்து செயல்படல் நன்று.

நாற்பத்தைந்தாண்டுகளுக்குமுன் கல்வித் துறை மாவட்டக் கழகத்தின்கீழ் நன்கு செயல்பட்டு வந்தது. ‘District Board’ என்றும் ‘Taluk Board’ என்றும் மாவட்டங்கள், வட்டங்கள்தொறும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயல்புரிந்தன. கல்வி, சுகாதாரம், சாலை போன்ற முக்கிய துறைகள் அக்கழகத்தின் வசம் இருந்தன. அதன் உறுப்பினர் ஒவ்வொருவரும் நாற்பது அல்லது ஐம்பது கிராமத்திற்கு எனத் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் சிறு அளவில் உள்ள தம் எல்லையினை அடிக்கடி பார்வையிட்டு, மக்கள் தேவை அறிந்து திங்களுக்கு ஒரு முறை நடக்கும் கழகக் கூட்டத்தில் அத்தேவைகளை வற்புறுத்தி மக்களுக்கு வேண்டியவற்றைச் செய்துவந்தனர். அதிகாரம் இவ்வாறு பரவலாக இருந்ததோடு, உறுப்பினரும் தம் எல்லையைச் சார்ந்தவராக இருந்ததால் மக்களும் அவர்களிடம் விரும்பிச் சென்று தத்தம் குறைகளை முறையிடுவர். மற்றும் ஊர்தொறும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறக்கப் பணியாற்றுகின்றனரா என மேற்பார்வை பார்க்கவும் வசதியாக இருந்தது. வைத்திய வசதிகளும் சாலை வசதிகளும் அவ்வாறே போற்றப்பட்டன. கல்வித்துறை நெறியில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்ட ஆய்வாளர்களின் நேர்முகப் பார்வையோடு, அம்மாவட்டக் கழக உறுப்பினர் அடிக்கடி பள்ளிகளைப் பார்வையிட்டு வந்தமையின் பள்ளிகள் முறையாக நடைபெற்றன எனலாம். கல்லூரி தவிர்த்து மற்றைய எல்லாப் பள்ளிகளும் இவர்கள் மேற்பார்வையிலேயே இருந்தன.

இன்றோ இந்த நிலை இல்லை. பஞ்சாயத்து ஒன்றியங்கள் என்று பெயரளவில் இருப்பினும் அதன் எல்லை விரிந்துள்ளமையின் தனி உறுப்பினர் நேர்முகப் பார்வை அருகிவிட்டது. முன் இருந்தமை போன்று ஒன்றியத்துக்கென, கல்வியைக் கவனித்துப் போற்ற, தனிக் கல்வி அலுவலகமும் கிடையாது. அரசியல் சூழலால் அடிக்கடி இந்த ஒன்றியங்களும் கலைக்கப் பெறுகின்றன. எனவே ஊர்தோறும் கல்வியில் முன்னேற்றம் காண முடியவில்லை எங்கிருந்தோ ஆய்வாளர்-முன் அறிவிப்புடன் வரும்போது எப்படியோ வகுப்புகளைச் சரிகட்டிக் காட்டிவிட்டுப் பல நாள் மூடிக் கிடக்கும் பள்ளிகள் பல உள. தனியாசிரியர் பள்ளிகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. தக்க நல்லாசிரியர்களும் தற்காலத்தில் கிடைப்பதரிது. எனவே கிராமப் பள்ளிகளில் நல்ல முறையில் கல்வி அமைய வேண்டுமாயின் நெருங்கிய தொடர்புடைய நல்லவர் குழுக்கள் தேவை. இங்குள்ள பிற நிலைகளைப்பற்றிப் பின்பு தனியாகக் காணலாம்.

வயது வந்தோருக்கு எனக் கல்வி கற்பிக்கும் முறை நாட்டில் போற்றப்பெறுகின்றது. அதற்கெனக் கோடிக் கணக்கில் மத்திய அரசும் மாநில அரசும் போட்டியிட்டுக் கொண்டு செலவு செய்கின்றன. பல தனியார் நிறுவனங்களும்கூட ஓரளவு உதவுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் செலவுக்கு ஏற்ற பயன் விளைவதில்லை. ஏட்டுக் கணக்கினை நாட்டு நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்பின் உண்மை விளங்கும். தற்போது புதிய வேகத்தில் மாவட்டந்தோறும் இந்த முயற்சி செயலாக்கப்பெறுகின்றது. ‘எழுத்தறியார் இந்த மாவட்டத்தில் இல்லையாகச் செய்வோம்’ என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் அவரைச் சார்ந்தோர்களும் முயல்கின்றனர். எனினும் மக்கள் ஒத்துழைப்புத் தேவை. அதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும். எல்லாரும் கற்றோரே என்ற நிலை நாட்டில் மலரின் அந்தநாள் நன்னாளாகும் என்பது உண்மை! ஆனால் அந்நாள் என்று வருமோ!

இலவசக் கல்வி பற்றியும் சற்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஆரம்பப்பள்ளி வகுப்புகள் ஐந்தாம் வகுப்புவரை எங்கும் இலவசமாகவே இயங்கின. ஒருசில தனியார்-கிறித்தவர் பள்ளிகள் போன்றவை மிகக் குறைந்த அளவில் சம்பளம் பெற்றன. பள்ளியில் மத்திய வகுப்புகளிலும் (6, 7, 8) மேல் வகுப்புகளிலும் (9, 10, 11) மிகக் குறைவாகவே சம்பளம் பெற்றனர். கல்லூரிகளிலும் அப்படியே. இன்று மேநிலைப்பள்ளி வரையில் கல்வி இலவசமாக்கப்பெற்றுள்ளது. ‘இது தேவைதானா’ என்ற வினா பலர் உள்ளத்தில் எழுகின்றது. ஏழைகளுக்கு உதவ அன்றும் சென்னைக் கல்வி விதிகளில் 72இல் தனிவிதி இருந்தது. அக்குறைந்த சம்பளத்தையும் அவர்கள் கட்டவேண்டியதில்லை. அப்போது இருந்த தரம் இன்று கல்வியில் இல்லை. பல பெற்றோர் பணம் செலவில்லையாதலால் பிள்ளைகள் படிப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாடெங்கும் இலவசப் பள்ளிகள் இருக்கும்போது, நூறும் இருநூறும் மாதச்சம்பளமும் பெற்று, சேர்க்கும்போது சில ஆயிரங்களும் நன்கொடை வாங்கும் பிற பள்ளிகள் வளர்வதற்குரிய காரணத்தை எண்ணிப் பார்க்கவேண்டும். பல ஏழைகளும் கூட, பிற செலவுகளைக் குறைத்துக்கொண்டு சம்பளம் கட்டும் பள்ளிகளுக்கே பிள்ளைகளை அனுப்பக் காண்கிறோம். ‘எனவே இலவசக் கல்வி எனில் தரம் குறைந்தது’ என்று மக்கள் நினைக்கும் அளவுக்குத் தனியார் மானியம் பெறும் பள்ளிகளும் அரசாங்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. ஒரு வகுப்பிற்கு 40 அல்லது 45 என்பதுபோக 75 அல்லது 80 வரை மாணவரை அடைத்துவைக்கும் அவல நிலையினைச் சில பள்ளிகளில் காண்கிறோம். சூன் மாதம் தொடங்கிய பள்ளிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேவையான ஆசிரியரை அனுப்புகின்ற அரசாங்க விதிமுறைகளும் உள்ளன. ஆசிரியர்களும், முன்னைவிடப் பல மடங்கு-எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு-சம்பளம் வாங்குகிறார்கள். என்றாலும் பிள்ளைகள் கல்வியில் போதிய கருத்தினைச் செலுத்தவில்லை எனப் பெற்றோர்களும், தலைவர்களும், ஆளுநர், அமைச்சர் போன்றார்களும் சொல்லுகின்றனர். எனவே ஏழைகளுக்கு எனத் தனிச் சலுகை அளித்துச் சம்பளம் இல்லையாக்கி, இன்றைய நிலைக்குத் தேவையான சம்பளத்தை ஓராம் வகுப்பு முதல் வரையறுத்து வசூல் செய்தால் பணம் கட்டும் பெற்றோர்க்கும் அக்கறை உண்டாகும். அரசின் கண்காணிப்பும் அதிகமாக்கப்பெறல் வேண்டும். தொடக்கக் கல்வியும் அடுத்த உயர்நிலைக் கல்வியும் தரம் உயர்ந்து தக்க வகையில் மாணவருக்கு அளிக்கப்பெற்றால்தான் பின் கல்லூரிக் கல்வியில் தெளிவும் தரமும் காணமுடியும். எனவே அதிகக் கண்காணிப்பும் கண்டிப்பும் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளுக்குத் தேவையானவை. இலவசக் கல்வியுடன் அரசியலும் இணைக்கப் பெற்றிருப்பதால் என் கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எனினும் உள்ள நிலையினைத் தெள்ளத்தெளியக் காட்டவே இதைக் குறித்தேன்.

இப்படியே இலவச பஸ் பாஸ் வழங்கலும். இது வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை. பெரும்பாலும் பள்ளிப் பிள்ளைகள் தத்தம் வாழிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே இடம் பெறுகின்றனர். சம்பளம் வாங்கும் பள்ளிகளில் பெரும்பாலன உந்துவண்டிகள் கொண்டுள்ளன. எனவே இந்த நிலை தேவையற்றது. இதனால் தேவை இல்லாதவர்கள்கூட இரண்டொரு நிறுத்துமிடமாயினும் அதன் முற்றிய எல்லை வரையில் இலவசச்சீட்டு வாங்கி உந்து வண்டிகளில் நெரிசலை உண்டாக்குகின்றனர். மேலும் இதைத் தயாரிப்பதற்கும் தகவல்கள் சேர்த்து அனுப்புவதற்கும் போக்குவரத்து அலுவலகமும் ஒவ்வொரு பள்ளியும் பெறும் அல்லலும் அவதியும் எழுத முடியா! பல பள்ளிகளில் இதனால் முறையான வேலையும் தடைப்படுகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் உடன் வாங்கித் தரவில்லையே என வாதிடும் நிலையும் உண்டாகிறது. இப்படித் தேவையற்ற வகையில்-அரசியல் பின்னணியில் அமையும் சில செயல்களைப் பற்றி அதிகம் எழுதாமல் இருப்பதே நலமென எண்ணுகிறேன்.

இதுவரை கூறியவாற்றால் தமிழகக் கல்வியின் முந்திய ஏற்றம், இடைக்காலப் பின்னடைவு, இன்றைய குறைகள், பள்ளிகளின் வகைகள், பிறநாட்டு நிலையில் கல்வி அமைப்பு முதலியவற்றை ஓரளவு சுட்டிக் காட்டினேன். நீக்க வேண்டியவை பற்றியும் ஆக்க வேண்டியவை பற்றியும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தமிழகம் முன்போன்று முன் நின்று உயர்நிலை பெறுதற்கும் வழித்துறைகளை ஓரளவு சுட்டிக் காட்டினேன். இனி ஒவ்வொரு துறையினையும் தனித்தனியே கொண்டு அததில் உள்ள நலக்கேடுகளையும் தேவையான திருத்தங்களையும் பிறவற்றையும் பற்றி ஆராயலாம் என எண்ணுகிறேன்.

மேலும் ஆசிரியர் நிலை, மாணவர், பெற்றோர் நிலை, நாட்டு நடப்பு, அரசாங்கத்தின் கடமை போன்றவற்றையும் உடன் எண்ணிப் பார்த்தலும் ஏற்புடைத்தாகும் என நினைக்கின்றேன். தொடர்ந்து நாட்டுக் கல்வி நலம் பெற்று, உலக அரங்கில் நம் பாரதமும் சிறப்பாகத் தமிழகமும் உயர்வெய்தி உலகோர் போற்றும் நிலை எய்தவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இனி வருவனவற்றை எழுத நினைக்கிறேன். ஒருவரையும் குறைசொல்லுவதற்கென்றோ குற்றம் சாட்டுவதற்கென்றோ வேறு பழிபடர்நிலையிலோ நான் இவற்றை எழுதவில்லை. ‘ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்’ என்ற அடிப்படையில் நாட்டு நலன்-அதன் கண்ணாகிய கல்வி-அதை மக்களுக்கு அளிக்கும் மரபும் முறையும்-இவை பற்றியே என் எண்ணமும் எழுத்தும் பற்றிப் படரும் எனக்கூறி மேலே செல்லுகின்றேன்.

நம் நாட்டுக் கல்வி வளராமைக்கு இந்திய அரசாங்கம் அமைத்த கல்வி ஆய்வு பற்றியும் திருத்த வேண்டிய முறை பற்றியும் விளக்க அமைத்த குழுவின் அமைப்பாளர் திரு. இராமமூர்த்தி அவர்தம் முன்னுரையில் கூறியவற்றை அப்படியே உங்கள் முன்வைக்கிறேன்.

One fundamental reason for failure has been that while we go on making radical protestations, our education to this day continues to be governed by the same assumptions, goals and values that governed it in the days of the British Raj. The British believed in the ‘downward filtration theory’ under which education and culture would inevitably flow from the classes to the masses. They kept the common people away from education. and education away from life. But things have not much changed since they left. Even today the principal beneficiaries of our education are the upper and middle classes. To them also we give a wrong education. Our formal system remains confined to the four walls of a school or college. It is tied down to text books and examinations. Even then the books are unreadable and the examinations totally unreliable, The courses of study are so framed that the students are not equipped with any productive skills. Whatever education they receive cuts them off from their natural and social environment. They become aliens to their own community. They lose faith in life itself what Jayaprakashji wrote in 1978 still holds true. According to him ‘it also converts them into a parasitic class which perpetuates and even intensifies the poverty of the masses. The system has failed to promote individual growth. It also becomes more of a hindrance than a help to bring about an egalitarian transformation’. If this be true, can we say that we have basically departed from the Macaulay tradition? And, if this is what our education has done to us, one may well ask, is not no education better than bad education?

One may admit—that for this situation education alone is not responsible, During the last forty-three years we have pursued a model of economic development that has led to the creation of two Indias—one of the rich, the other of the poor. A new privileged class has come into being. It holds monopoly over political and economic power and sources. of wealth. It controls culture and education. It is firmly established every where. It is this class whose interests our education is made to serve. The result is that as in economy so in education, two parallel systems have come into being– one for the rich, the other for the poor. No wonder, a divided education finds itself totally devitalised, and incapable of meeting the challenges of independent India's national life. To the rise and growth of this class, holding sway over the whole range of national affairs, can be traced most of the ills we are faced with— the erosion of social and moral values, weakening of democracy, the partisan character of our development, corruption and a number of other elitist aberrations. It is responsible for the impoverishment of the nation's very soul. It is, therefore time the nation, most of all education, took serious note of this phenomenon, and guarded against further damage to national life.

Report of the committee for Review of

National Policy of Education—1986

— Pages - V & VI

உயர்ந்தோர் கருத்தறிந்து உற்றதைச் செய்யின் உய்தி உண்டு. தக்கவர்-அரசாங்க நெறியாளர் உடன் ஆம்வு செய்வார்களா

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது

கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ மிகஎளிது கல்வி என்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள்தேடி உமல்வதேனோ!

2. பல்கலைக் கழகங்கள்

நாட்டின் உயர்கல்வியின் செழிப்பையும் தரத்தையும் அவற்றின்வழி தெளிவாகும் பண்பாடு, அறிவியல் தெளிவு, ஆக்கநெறி ஆகியவற்றையும் உலகுக்கு உணர்த்துவன அவ்வந்நாட்டுப் பல்கலைக்கழகங்களே. அதனாலேயே அத்தகைய பல்கலைக்கழகங்களை நாடி நம்நாட்டு மக்களுள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவை, தமிழ்நாட்டை அவ்வாறு பலர் நாடிவந்தகாலமும் ஒன்று இருந்தது. பல்கலைக் கழகங்கள் நாட்டின் ஒளி விளக்கங்களாய் உலக அறிஞர்களைத் தம்மிடம் ஈர்க்கும் திறன் உடையனவாய்-என்றென்றும் உலகில் வாழும் சமுதாய அறிவியல், வாழ்வியல் நுட்பங்களை. ஆய்ந்து கண்டு உணர்த்துவனவாய் அமையவேண்டும். கல்வியெனும்:மாளிகையில் உயர்ந்த மேல்மாடியாக நின்று, படிப்படியாக ஏறிவரும் அறிஞரை-சான்றோரை முழுமைபெறச் செய்வன இவை. காய்தல் உவத்தல் அகற்றி நேர்மை உடையனவாய், காலம் கடவாக் கடப்பாட்டில் நின்று, நேர்மையில் நிலைத்துநின்று, வாழும் சமுதாயத்துக்கும் வருங்காலச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் திறனும் செழிப்பும் செயல்பாடும் திண்மையும் உடையனவாக அமையவேண்டும். வள்ளுவர் ‘கல்வி’ பற்றி வகுத்த கொள்கைக்கு நிலைக்களனாய், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வுடையோரை உலகுக்குத் தக்கவராக்கி ஆண்டுதோறும் அளித்து உதவுவனவே இவை. இங்கே காழ்ப்புக்கும் கசப்புக்கும் வேற்றுமைக்கும் வேறுபாட்டுக்கும் இடமில்லை. வஞ்சகத்துக்கும் வன்கண்மைக்கும் வழக்குக்கும் வாதத்துக்கும் இடம் இல்லை. ஆம்! இவ்விடம் துலாக்கோல் போன்று நேர்மை வழங்கும் கடவுள் சந்நிதானம் போன்ற ஒன்றாகும். மேனிலைப்பள்ளியின் கல்வி உலகப் பொதுவாழ்வுக்கு வேண்டிய வாழ்க்கைக் கல்வியைக் கற்று, பின் வாழ்வுக்கு வகைதேட அமையும் நிலையில், செலுத்தும் வகையில் அமைவதாகும். ஆனால் பல்கலைக்கழகக் கல்வியோ அதன் பெயருக்கு ஏற்றபடி உலகளாவியதாய் (Universaly) ஏன் பரந்த அண்ட கோள எல்லை வரையில் பார்த்து ஆய்ந்து நலன் காண்பதாய் தனக்கு மட்டுமன்றி, தன் காலத்துக்கு மட்டுமன்றி, என்றென்றும் வாழும் மனித சமுதாயத்துக்கும் உயிரினத்துக்கும் உறுதுணையாய் அமைவதாகும்.மேலும் பயில்பவருக்கு இம்மைக்கு மட்டுமன்றி வள்ளுவர் கூறிய எழுகின்ற பிறவிகள்தோறும் அவனுக்கு வழிகாட்டி அவனை நடத்திச்செல்வது. பல்கலைக்கழகம் என்ற சொல்லே பொருள் பொதிந்ததாகும். ‘University’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலக்கரு ‘Universe’ என்பதாகும். ஆம்! பரந்த அண்டகோள அமைப்பின் தொடர்புடையதாய்- ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள’ என அனைத்தையும் அடக்கியதாய்-என்றென்றும் பரந்த உலகில் மட்டுமின்றி விரிந்த அண்டகோளத்தில் வாழ்ந்த-வாழும்-வாழ இருக்கும் உயிர்த்தன்மைகளை உணர்ந்து, அவற்றின் விரிவாக்கம்-அவை கொண்ட தொடர்பு-அவற்றோடு அமைந்த பஞ்சபூத ஒடுக்கம் என எல்லாவற்றையும் கொண்டதாய்-அதில் பயில்வோர் தெளிந்த உள்ளமும் தெள்ளிய அறிவும் கூர்த்த மதியும் நலம் கொஞ்சும் நெஞ்சமும் உடையவர்களாய், எவ்வுயிரையும் ஒத்துநோக்கும் இயல்பினராய் இருக்கவேண்டும். மாந்தர்க்குக் கண் என அமைந்த இக்கல்வி இத்தகைய பரந்த -விரிந்த-தெளிந்த-நுண்ணிய-ஆய்ந்த தன்மையில் உள்ளதாக அமையவேண்டும். ஆனால் இன்றைய பல்கலைக் கழகங்கள்-நம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தப் பெருநிலையில் உள்ளனவா? எண்ணிப்பாருங்கள்!

உலகெங்கும் சுற்றி மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றையும் கீழைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றையும் கண்டவன் நான். அவற்றோடு நம் நாட்டுப் பல்கலைக் கழகங்களை ஒப்புநோக்கின் நாம் எங்கோ பின்நிலையில் இருக்கின்றோம் என்பதை அறியமுடியும். நம்நாட்டு அறிவியல் நுணுக்கங்களை விளக்கும் பண்டைய இலக்கியங்களுக்கு மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்கள் விளக்கம் தருகின்றன; போற்றுகின்றன. பாராட்டுகின்றன. அவைபற்றி, மேலும் மேலும் ஆராய்கிறார்கள். ஆனால் இங்கோ அவற்றைப் படிக்க வேண்டியவர்கள் கூடப் படிப்பதில்லை. அதன் பயன் என்ன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. நம் நாட்டு அறிவியல், பண்பாடு, கலை, நலத்துறை போன்ற பலவற்றை மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆராயும் போது, நாம் அவற்றைப் படிக்கவும் செய்யாது பாழாக நாட்களைக் கழிக்கின்றோம். இவற்றைத் தெளிவுபடுத்தி உலகுக்கு உணர்த்தவேண்டிய-வழங்கவேண்டிய பல்கலைக் கழகங்கள் எதை எதையோ எடுத்து ஆராய்கின்றன. தமிழ் நாட்டுப் பழமையான பல்கலைக்கழ்கத்தின் ஆய்வுப்பட்டங்களுக்கு எழுதப்பெற்ற கட்டுரைகளை ஒரு கண்ணோட்டம் கொண்டு நின்றால் அவற்றுள் எத்தனை சமுதாயத்துக்குப் பயன்படுவன என எண்ணத்தோன்றும். தமிழ்த்துறை ஒன்றினை மட்டும் நான் சுட்டிக்காட்டினேன். பிற துறைகளைப் பற்றி அவ்வத் துறையினர் நன்கு அறிவர். ஆனால் அதே வேளையில் வரலாற்றுப் பின்னணியில்-வாழ்வொடு தொடர்புடைய அறிவியல் ஆக்க அமைப்பில் நம் இலக்கியங்கள் எவ்வெவ்வாறு வளம்பெற்றுள்ளன என்பதுபற்றி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆராய்கின்றன. அவ்வந்நாட்டு அறிவியல் இலக்கியநெறி, சமுதாயநெறி, சமயநெறி போன்றவற்றோடு, பிறநாட்டு நல்லனவற்றை நாடி நலம் காணும் அப்பல்கலைக் கழகங்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியின் பாடலைப் பாடி அவருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடி அமைந்துவிடுகிறோமே அன்றி அவர் சொல்வழியே செயலாற்ற நம் பல்கலைக்கழகங்கள் முயல்கின்றனவா? நாம் அவர்

க–3 பெயரைமட்டும் வைத்து திருப்தி அடைகிறோம். அவ்வளவே!

தமிழ்நாட்டு மிகப் பழைய பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகந்தான். அது 1857ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றியது. அதற்குச் சற்று முன்பாக அதே ஆண்டில் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்கள் தோன்றின என அறிகிறோம். இத்தகைய பழம்பெரும் பல்கலைக்கழகம் பரந்த எல்லையினைக் கட்டி ஆண்டது. கேரளம், கன்னடம், ஆந்திரப் பகுதிகளையும் ஐதராபாத் எல்லையினையும் அன்று சென்னைப் பல்கலைக்கழகம் கொண்டிருந்தது. இன்று ஒரிசாவுடன் இருக்கும் ‘கஞ்சம் தொடங்கிக் குமரி வரையிலும் மேல் கீழ் கடல் எல்லையிலும் இது ஆட்சி செலுத்தியது. எத்தனையோ வல்லவர்கள். நல்லவர்கள் இதில் இருந்து நாட்டு மேனிலைக் கல்வியினை நன்கு வளர்த்து வந்தனர். இன்று மொழி வாரி மாநிலங்கள் பிரித்தபின், பிறமொழிப் பகுதிகள் நீங்கியதோடு அன்றி, தமிழ்நாட்டிலும் மேலும் பதின்மூன்று பல்கலைக் கழகங்கள் தோன்றி, இதன் எல்லையினை மிகச் சுருங்க வைத்துவிட்டன. எனினும் அன்று இதன் ஆணையின்கீழ் இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கையினைக் காட்டிலும் இன்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருத்துவம், விவசாயம், பொறியியல், கால்நடை போன்ற வகைக்கொரு பல்கலைக்கழகம் அமைந்து இ ன் அடிப்படைப் பகுதிகளையும் சுருங்கச் செய்துவிட்டன. இன்று தமிழகத்தில் தனிப்பட அண்ணாமலை, அழகப்பர், அவினாசிலிங்கம் போன்றோருடைய பல்கலைக்கழகங்கள். அம்பாத்துறை காந்தி கிராமம் பல்கலைக்கழகம் ஆகியவையும் தனி ஆணை செலுத்துகின்றன. தமிழுக்கும் மகளிருக்கும் என்றும் தனிப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. ஆகவே பாட அளவிலும் பரப்பளவிலும் எல்லை சுருங்கியதாகச் சென்னைப் பல்கலைக் கழகம் நின்றுவிட்டது. தனிப்பட்ட பல்கலைக் கழகங்கள் தவிர்த்து, கோவை, திருச்சி, மதுரை முதலிய இடங்களில் உள்ளவை தம்முடன் பல கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றன. சென்னை நகரிலேயே இன்று பல்கலைக் கழகங்கள் உள்ளன. எனினும் அவை தனிப்பட்டவை. சென்னைப் பல்கலைக் கழகம் மட்டுமே கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்துகின்றது. இங்கே எல்லாப் பல்கலைக் கழகங்களைப் பற்றியும் எண்ணிப் பார்த்து எழுத இடமில்லை. முற்றும் என்னால் அறிந்து கொள்ளவும் முடியர்து. எனவே சென்னைப் பல்கலைக் கழகத்தை மட்டும் எடுத்துக் காண நினைக்கின்றேன். இது அறிவு வளம் பெற்றவனாக்கி என்னை வளர்த்துப் பெயரிட்டு உலகில் உலவவிட்ட பல்கலைக் கழகம் அல்லவா! இது பற்றி நான் காட்டும் நல்லவையோ அல்லவையோ பிறவற்றிற்கும் பொருந்தும் என்றும் கூறமாட்டேன்.

நான் முன்பே சுட்டியபடி மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களின் செயல்திறனை ஒப்பு நோக்கும்போது நாம் எங்கோ பின்னிலையில்தான் உள்ளோம். அங்கெல்லாம் பயிற்று முறையும், பாட அமைப்பும், தேர்வு முறையும், பிற செயல்முறைகளும் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன. ஓர் ஆசிரியர்-அத்துறையில் தெளிந்த அறிவும் திறனும் உடையவர், தம் கீழ் ஒருசில மாணவரையே தெரிந்தெடுத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு பாடத்தில் தனித் திறமை காட்டும் வகையில் பயிற்றுவித்து, பாடம் போற்றி, தேவையானபோது வகுப்புகளமைத்து-நல்ல நூல் நிலையங்களில் ஆய்வு செய்யப் பணித்து, எடுத்த பொருளை நன்கு விளக்கி, உலகுக்கு உணர்த்தும் வகையில் தயாராக்கிப் பட்டமளிக்க வாய்ப்பு அளிக்கும் முறை உண்டு. இங்கோ யாரோ என்றோ வரையறுத்த பாடங்களைக் கூடிக் கூட்டமாக இருந்து, ஏதோ பேசி எப்படியோ எழுதிப் பட்டம் பெறும் நிலையினைக் காண்கிறோம். வகுப்பிற்கு வராமலேயே மாணவர் வந்ததாகக் காட்டியும், ஆசிரியர் கல்லூரிக்கு வாராமலேயே வந்ததாகக் காட்டியும் மாணவருக்கும் தமக்கும் தம்மை அறியாமலேயே பிழை புரிவோர் சிலர் உள்ளனர். என்று கூறக் கேட்கிறோம். ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் அமைத்து, பயனுள்ள முறையன்றி மாறுபடுவதைப் பலர் சுட்டிக் காட்டி வருகின்றனர். பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கங்களாகிய கல்லூரிகளிலும் இன்றைய நிலை வருந்தத்தக்கதாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தமும் உண்ணாவிரதமும் மேற்கொள்ளும் முறை இத்தூய தெய்வத்தலங்களில் நடைபெறுவது வருந்தத்தக்கது. அத்தகைய அவலநிலைக்கு அவர்களைத் தள்ளாத வகையில் ஆட்சியாளரும் செயல்படவேண்டும்.

ஒரு பாடத்துக்கு நான்கு அல்லது மூன்று ஆசிரியர் எனப் பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவர் தம் ஆற்றலும் உணர்வும் சிதறி நிற்கின்றன: பண்டைக் காலத்திய குருகுலம் இன்றேனும், ஒரு பாடத்தினை-அல்லது தேர்வுக்கு ஒரு தாளுக்குரிய பாடத்தினை ஒரே ஆசிரியர் நடத்தின் நல்ல பயன் விளையும். ஆனால் பாடத்திட்டமோ பயிற்று முறையோ அவ்வாறு அமைவதில்லை. ஆசிரியர்களும், முன்னரே நான் காட்டியபடி எந்தப் பயிற்சியும் பெறாமல் திடீரெனக் கற்பிக்க வந்து விடுகின்றனர். ஆசிரியர்களுக்குக் குறைந்தது இரண்டாண்டுகளாவது பயிற்சி அளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். அப்படிச் செய்யும் பொழுது, பிற தனிச் சிறப்புக் கல்லூரிகளுக்கு அமைக்கும் வகையில், குறைந்தது நூற்றுக்கு எழுபது எண்ணாவது பெற்றவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.* (சாதாரண் பட்ட வகுப்பில் ‘பி.பி.எ.’ என்ற வகுப்பிற்கும் நூற்றுக்கு அறுபதுக்குக் குறையாத மதிப்பெண் வேண்டுமென்று சென்னைப் பல்கலைக்கழகம் வற்புறுத்துகின்றது) அவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தினைத் திறம்பட நடத்தும் வகையில் ஏற்ற பயிற்சி அளிக்கப் பெறல் வேண்டும். இந்த வகையில் நல்லாசிரியர்கள் அமைவார்களாயின்-அவர்களும் தங்கள் கடமை உணர்ந்து திறம்படச் செயலாற்றுவார்களாயின் நல்ல மாணவமணிகள் நாட்டுக்கும் உலகுக்கும் கிடைக்குமே!

சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் மிகச் சிறந்ததாகப் போற்றப் பெற்று, உலக அரங்கில் அதன் மாணவர்களுக்கு உரியமதிப்பும் நல்இடங்களும் தரப்பெற்றின. அனைத்திந்தியத் தேர்வுகளிலும் முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது. இன்று பல்கலைக்கழகம் தன்னிலையினின்று தாழ்ந்தமையானும் கல்லூரிகளும் வெறும் வாணிப நிறுவனங்களாக மாறிவருகின்றமையானும் தரத்தினைக் காண முடிவதில்லை. மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பன விடுத்து பணத்தெண்ணைக் கணக்கிட்டுச் சேர்க்கும் கல்லூரிகளே அதிகமாகிவிட்டன. மருத்துவக் கல்லூரிக்கு ஐந்துலட்சம் ஆறுலட்சம் வரையிலும் பொறியியல் கல்லூரிக்கு இரண்டு லட்சம் வரையிலும் பேரங்கள் நடைபெறுகின்றன. சுயநிதிக் கல்லூரி அல்லது மானியம் பெறாத கல்லூரிகள் பலவும் பெருந்தொகை பெறுவது ஒருபுறம் இருக்க, எல்லா உதவிகளையும் அரசாங்கத்திடம் பெறும் கல்லூரிகளும் நாற்பது, ஐம்பது, ஆயிரம் வரையில் பாடத்துக்கு ஏற்ப வாங்குகின்றனவே! இவற்றைத் தடுக்க யார் நினைக்கிறார்கள்? சுயநிதிக் கல்லூரிகள் வசூலிக்கும் நிதிக்கு உச்ச வரம்பு தேவை என்று கல்வி மானியக் கோரிக்கையின்போது சட்ட மன்றத்தில் ஒருவர் சுட்டி இருக்கிறார். (தினமணி15-9-91-பக் 60 எனவே இது நாடறிந்த ஒன்றானதோடு, அரசும் அறிந்த ஒன்றாகி விட்டதல்லவா! பல்கலைக் கழகங்கள் இவற்றைக் கண்டிப்பதற்குப் பதிலாக ஊக்குவிக்கின்றன என்ற பேச்சே எங்கும் அடிபடுகிறது. கல்லூரிகளில் தேர்வு நடத்தும் முறையிலும் சீர்கேடுகள் உள்ளன என்பர்.

பல்கலைக் கழகச் செயற்பாடுகளிலும் மிகுந்த குறைபாடுகள் இருக்கக் காண்கிறோம். ‘ஊனினைச் சுருக்கின் உள்ளோளி பெருகும்’ என்பார் ஆன்றோர். ஆனால் இங்கே ஊன் சுருங்க, உள்ளமுமன்றோ சுருங்கிவிட்டது. நான் சுமார் 50 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்பு உடையவன். ஆட்சிக்குழு ஒன்று தவிர்த்து பிற அனைத்திலும் பங்குகொண்டவன். சிலவற்றில் உறுப்பினனாகவும் சிலவற்றில் தலைவனாகவும் இருந்து பணியாற்றி வந்துள்ளேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் சில குழுக்களில் இடம் பெற்றவன் தமிழ்நாட்டுப் பிற பல்கலைக் கழகங்களிலும் வடநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பல குழுக்களில் இடம் பெற்றவன்: அக்காலத்தில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஆற்றிய செயல்முறைகளுக்கும் இன்றைய செயல்முறைகளுக்கும் எத்தனையோ வேறுபாடுகளைஅவை தாழ்வுறும் வகையில்-இருக்கக் காண்கிறேன். எடுத்துக்காட்டுக்கு இரண்டொன்று காட்ட நினைக்கிறேன். தவறாயின் பொறுத்திட வேண்டும்!

கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டிற்குப் புதிய பாடங்கள் வேண்டின் அதற்கு முந்திய ஆண்டு அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி. முன்பெல்லாம் அவ்வாறு வந்த விண்ணப்பங்களை ஆய்ந்து, தகுதி அறிந்து, அவற்றை ஆய்வதற்கென ஆய்வுக்குழுக்களை (Inspection. Commission) சனவரி 31க்குள் அனுப்பப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்யும். அவற்றின் பரிந்துரைகளை ஆய்ந்து, பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடைபெறும் ஆட்சிக் குழுவின் கூட்டம் முடிவெடுத்து, மார்ச்சு முடிவுக்குள் அவ்வக் கல்லூரிகளுக்கு முடிவினைத் தெரிவிக்கும். கல்லூரி நடத்துபவர்களும் அவற்றின் அடிப்படையில் ஏப்பிரல், அல்லது மே திங்களில் விளம்பரங்கள் செய்து கல்லூரி திறக்கும்போது, சூன் மாதத்தில் மாணவர்களைச் சேர்ப்பர். இந்த முறை மாணவர்கள் சேரவும் ஆசிரியர்களை நியமிக்கவும் பிற ஏற்பாடுகளைச் செய்யவும் சிறந்த முறையாக அமைந்தது. ஆனால் தற்போதோ, ஒட்டு மொத்தமாக எல்லாக்கல்லூரிகளையும் இணைத்து ஏதாவது ஒரு காரணம்காட்டி, ஒரு பாடமும் தரமுடியாது என்று ஐந்து அல்லது ஆறு மாதங்கள், சில வேளை கல்லூரி திறந்த பிறகும் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு அத்தகைய பொதுஅறிக்கை ஒன்று 13-8-91இல்-ஆகஸ்டில்கல்லூரிகள் திறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்தது. இந்த விதிக்கு விலக்களித்தும் சில கல்லூரிகளுக்குச் சில பாடங்கள் தரப் பெறுகின்றன என்பர். இந்த ஆண்டு அறிஞர் குழு அறிக்கை வந்தபிறகும் செப்டம்பர் இடையில் ஒரு கல்லூரிக்குப் புதிய பாடம்-அதுவும் நவம்பர் டிசம்பரில் தேர்வு எழுத வேண்டிய பருவமுறைப் பாடம் தரப்பெற்றதாம் என்னே கொடுமை. எவ்வாறு மாணவர் தெளிவு பெறுவர்? சென்ற ஆண்டும் ஒரு கல்லூரிக்கு ஆகஸ்டு கடைசியில் பாடங்கள் அளித்து, செப்டம்பர் 15 வரையில் சேர்க்கவும் இசைவும் தந்தனர். அதுவும் பருவத்தேர்வாயின் எவ்வளவு தொல்லையுற வேண்டியிருக்கும் என எண்ணிப் பார்ப்பதில்லை. எப்படியும் இந்தக் கூட்டு முறையின்றி, தனித் தனியே ஒவ்வொரு கல்லூரிக்கும் (அதுவே உரிய செலவுத் தொகையினையும் உறுப்பினர்களுக்கு உரிய தொகையினையும் தந்து விடுகின்றது) தனித்தனிக் குழு அனுப்பி நேரில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஒரு கல்லூரி கணிப்பொறி உயர் வகுப்பு வரும் என்ற நிலையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு கணிப்பொறி, குளிர் சாதனப் பெட்டி மேசை நாற்காலி போன்றவற்றிற்குச் செலவு செய்தது. ஆயினும் செப்டம்பர் முடியும் வரையில் அதற்கென ஒரு பதிலும் பல்கலைக் கழகம் அனுப்பவில்லை. இந்த நிலை நீடித்தால் கல்லூரிகள் நிலை என்னவாகும்?

பெயர் மாற்றத்துக்கும் பிறவற்றிற்கும் கல்லூரி தொடங்குவதற்கும் அரசு முன் ஆணை தந்தால்தான் பல்கலைக் கழகம் செயலாற்றமுடியும். ஆனால் தமிழக அரசு பாடங்களைத்தர ஒருமுறைக்கு இருமுறை கடிதம் எழுதியும் தர மறுத்துப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குகிறது. அரசாங்கச் சார்பாக அதன் கல்விச் செயலரும் கல்லூரிக் கல்வி இயக்குநரும் நியமன உறுப்பினரும் இருந்தும் இப்படிப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குவது வருந்துதற்குரியதாகும். வருந்தத்தக்க மற்றொன்றையும் கூறவேண்டும். சென்ற ஆண்டு 1990 மார்ச்சு ஏப்பிரலில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு இந்த ஆண்டு மே வரையில் (1991-மே) உரிய பட்டச் சான்றிதழ் வழங்கவில்லை எனின் அப்பிள்ளைகளின் நிலை என்னாவது ‘Indian Express’ என்ற நாளிதழில் (11-9-91) K.K. ரங்கன் என்ற மாணவர் (Varsity Lapses) அத்தகைய அவல நிலையில் தான் மட்டுமன்றி இன்னும் பலர் நிலையினையும் சுட்டி எழுதியுள்ள கடிதம் பல்கலைக்கழக அவல நிலையினை விளக்குகின்றது.

பல்கலைக்கழக அறிஞர் கூட்டமும் பேரவையும் பிறவும் நடைபெறும்போது ஒருவர் காண நேரிட்டால் அது ஒரு போர்க்களமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும் என்பர். ஆசிரியர் குழுவினர் எழுப்பும் வினாக்களுக்குப்பதில் சொல்ல முடியாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லல் உறுவது பரிதாபமாக இருக்கும். பல கல்லூரிகள் தவறு இழைக்கின்றன. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பல்கலைக் கழகமும் கல்லூரி இயக்ககமும் வாளா இருப்பதோடு, அவற்றை ஆதரிக்கவும் செய்கின்றன. அவற்றின் தலைவர்களே ஆட்சிக் குழுவில் இருப்பதாலோ, அன்றி வேறு உயர்மட்ட நிலையில் ஆணை செலுத்துவதாலோ அன்றி லட்சக்கணக்கில் வாங்கும் பணத்தை வாரி இறைப்பதாலோ விசாரித்துத் தண்டனை வழங்க வேண்டியவர்கள் வாய்மூடி மெளனியாகிக் கிடக்கிறார்கள். நாட்டுக் கல்வி நலமுற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் தத்தம் பதவியால் தம் வளனைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். அவரவர்கள் தற்போதுள்ள பதவிக்கு வருமுன் எந்தெந்த வழியால்- யார் யாரை மிதித்தும் துவைத்தும் வந்தோம் என்பதைத் திரும்பிப் பார்க்கவேண்டும். அப்போது பல உண்மைகள் அவர்களுக்கே விளங்கும். அரசாங்கமும் இத்தகைய களைகளை உடன் களைய ஏற்பாடு செய்யவேண்டும். இல்லையானால் புரையோடி, கல்வி எனும் காரிகைக்கே இறுதி யாத்திரைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள். உள்புகுந்து ஆராயின் களைய வேண்டியவை பல என அறியமுடியும். புகுவார் புகவில்லை, எனவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற வகையில் பல்கலைக்கழகம் இயங்குகிறது.

இங்கே இரண்டொன்றையே சுட்டினேன். இன்னும் பல உள. இந்த அளவே அமையும் என்று கருதி மேலே செல்கிறேன். தமிழ் நாட்டில் மற்றைய பல்கலைக் கழகங்களோ இந்திய நாட்டுப் பிற பல்கலைக் கழகங்களோ எப்படி, இயங்குகின்றன என்பதை நானறியேன். எனினும் இந்திய நாட்டுத் தொன்மையான ஒரு பல்கலைக் கழகம் இத்தகைய அவல நிலைக்குத் தள்ளப்பட்டமை அறிந்து அனைவரும் கவலைப்படுவதோடு, அரசாங்கத்தோடு இணைத்து இதனை முன்னைப் பெருமை பெறக் கூடிய நெறியில் ஆற்றுப்படுத்தி ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆம்! அதன் மகன் என்ற முறையில் அல்லல்பட்டு ஆற்றாது வேண்டுகிறேன்.

தன்னாட்சிக் கல்லூரிகள்

பல்கலைக்கழக எல்லையிலேயே சில கல்லூரிகளுக்குத் தனி உரிமை வழங்கப் பெற்றுள்ளது. அவை தமக்கெனவே தனியாகப் பாடங்களை அமைத்துக் கொண்டு தேர்வு நடத்திப் பட்டம் பெறப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வழி உண்டு. இந்த நிலையில் தரம் உயரும் எனச் சிலரும் தரம் தாழும் எனச் சிலரும் கூறுகின்றனர். பரந்த அளவில் தேர்வு நிலை இருந்து முன்பின் அறியாதார் நேரிய வகையில் விடைத் தாள்களைத் திருத்தினால்தான் மாணவர் உண்மையான நிலை தெரியும். அறிந்த ஆசிரியரோ-அன்றிப் பயிற்றிய ஆசிரியரோ வினாத்தாள் அமைத்து விடையும் திருத்தும் முறை, நேர்மையுடன் அமையுமாயின் சாலச் சிறந்ததுதான். ஆனால் அந்த நிலை பலவிடங்களில் மாறுபடுகின்றதே! எனவேதான் பலர் அத்தகைய கல்லூரிகளை ஆய்ந்து தெளிவு காண ஒரு தனிக்குழு அமைக்க வேண்டும் என வேண்டுகின்றனர். அப்படியே ஆட்சிக்குழுவில் உள்ளவர்தம் கல்லூரிகளும் சரிவர இயங்கவில்லை என்ற குறைபாட்டு ஒலியும் காதில் விழுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தாவிடின் நாட்டின் கல்வி நலிவுறும். நாடு நாடாக இராது. நாம் மனிதராக இரோம்! உடன் ஆவன காண வேண்டும்.

தன் நிதிக் கல்லூரிகள்

நாட்டை உலகுக்கு உண்ர்த்தும் உயர்கல்வி நிலை நன்கு பேணப் பெறல் வேண்டும். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்றவற்றிற்கென அமைந்த பல்கலைக்கழகங்களும் அதனைச் சார்ந்த கல்லூரிகளும் கூடத் தரம் உயர்த்தப் பெறவேண்டிய நிலையில் உள்ளன. தனியார் கல்லூரிகள்-சுயநிதிக் கல்லூரிகளாக முளைத்து இலட்சக்கணக்கில் பொருள் பெற்றும் தக்க வசதிகள் இன்றிச் செயல்படுவதாகச் சில செய்திகள் வருகின்றன. நாட்டில் அத்தகைய கல்லூரிகள் நாள்தொறும் பெருகிக்கொண்டே வருகின்றன. எனவே அவற்றின் தரம்-நிலை காக்கப் பெறல் வேண்டும்.

அனைத்து இந்தியாவுக்கும் ஒரே வகையான கல்வி முறை அமைய வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். பள்ளிகளிலே வேண்டுமானால் மாநிலங்கள் தொறும் மொழி, வாழ்வு நெறி முதலியன மாறுபடுதல் போன்று கல்விமுறையும் மாறுபடலாம். ஆனால் கல்லூரிகளில்-பல்கலைக் கழகங்களில்-ஒருமை நெறி இயங்க வேண்டாமா? தமிழகம் தவிர, பிற மாநிலங்களில் பட்ட வகுப்பில் மூன்று பாடங்கள் முக்கிய பாடங்களாக (Main) உள்ளன. தமிழகத்தில் ஒரு பாடம் முக்கியமானதாகவும் அதன் தொடர்பான மற்றொன்று சார்புநிலை பெற்றதாகவும் உள்ளன. ஆழ்ந்து சிந்திப்பின் தமிழகக் கல்லூரிப் பாட முறையே சிறந்தது எனத்

தோன்றும்-உண்மையும் அதுவே. ஏதேனும் ஒன்றில் திறம் பெறின், அவன் பின், ஆசிரியனாகவோ வேறு வகையிலோ வாழ்க்கையில் புகும்போது அதில் தெளிந்த அறிவுடையவனாய்ப் பிறரை ஆற்றுப்படுத்தித் தானும் செயல்பட முடியும். மூன்று என்றால் மூன்றில் ஒன்றிலும் முழுமை பெறா நிலையில் ஒருவன் வாழ்வு எப்படிச் சிறக்கும்? அதனாலேயே பிற மாநிலங்களில் பயின்று பட்ட்ம் பெற்றவர் ஆசிரியர் பயிற்சி பெற்ற போதிலும் அவர்களைத் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க அஞ்ச வேண்டி உள்ளது. பல பள்ளிகள் நியமிப்பதும் இல்லை. இந்த நிலையில் இந்திய அரசாங்கம்-கல்வியைத் தன்னொடு கட்டிப்பிடித்துள்ள அரசாங்கம். ஒரு பொது விதியை அமைக்க வேண்டும். அப்படியே எந்த முறைக் கல்வி, இருப்பினும் பள்ளிகளில் அவை இயங்கும் மாநிலத்தின் மொழி மூன்றில் ஒன்றோ-இரண்டில் ஒன்றோ கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் விதி செய்ய வேண்டும். இத்தகைய பொது விதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதோடு மொழி அறிவினையும் கல்வித் தெளிவினையும் தரும் என்பது உறுதி.

பொதுவாக அரசாங்கக் கல்வி நிலையங்களைக் காட்டிலும் தனியார் நிலையங்கள்-ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரையில்-செம்மையாகச் செயல்படுவதைக் காண்கின்றோம். அரசாங்கக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்களை உரிய காலத்தில் நியமிக்கா நிலை உள்ளது. அடிக்கடி ஆசிரியர்களை மாற்றும் நிலையும் உள்ளது. இவை பெரும்பாலும் மாணவர் நலனைப் பாதிக்காது இருக்குமோ!

மாணவர்களிடம் பெருந்தொகை-எந்தப் பெயரிலே வாங்கினாலும் அதற்கேற்ற வகையில் மாணவர் தேவைகளை நிறைவுசெய்யின்-தக்க ஆசிரியர்களை நியமித்து-இடையறா வகையில் கல்வி அளித்து, செயல்முறைகளைச் செம்மைப் படுத்தி, வெறும் ஏட்டுக் கல்வியொடு நாட்டுப் பற்றும்

நல்லொழுக்கமும் மாணவர் உள்ளத்தில் பதியும்படிச் செய்யின் நன்கு பயன் விளையும். ஒருசிலவாயினும் இவ்வாறு செயல்படுவதால்தான், அத்தகைய கல்வி நிலையங்கள் நாட்டில் வளர்ச்சியுறுகின்றன. மக்களும் பணத்தை வாரி இறைக்கின்றனர். சுடர்விளக்காயினும் நன்றாய் விளக்கிடத் தூண்டுகோல் ஒன்று வேண்டும்' என்பதால், இவையெலாம் செம்மையாக நடைபெறுகின்றனவா எனக் கண்டு, தவறின் நல்லாற்றின் வழி திருப்பி நடத்தும் வகையில் உயர்நிலைக்குழு-நல்ல பண்பாளர் அடங்கிய குழு ஒன்றோ பலவோ நியமிக்கப் பெறல் வேண்டும். அவை வழிகாட்ட நாட்டின் கல்வி நிலையங்கள் நேரிய பாதையில் அடி எடுத்து வைக்குமானால் தமிழகம் பாரத நாட்டில் மட்டுமின்றி உலகிலேயே உயர்ந்து விளங்கும் என்பது உறுதி. விரைந்து செயலாற்ற வேண்டும்.

கால் நூற்றாண்டுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்தது. அப்போதிருந்த சில குறைபாடுகளைப் பற்றிப் ‘பல்கலைக் கழகப் பார்வைக்கு' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வரும் அன்பர் திரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவர் தம் தென்றல் இதழுக்கு என்னைக் கட்டுரை எழுதச் சொல்லுவார் ஒரு சில வெளியிட்டுள்ளார் என நினைக்கிறேன். இக் கட்டுரையும் அவர் கண்ணில் பட்டு, அவர் இதழிலோ வேறு இதழிலோ வெளிவந்தது, அதை அப்படியே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அன்பர் அன்றைய துணைவேந்தர் திரு. இலட்சுமணசாமி முதலியார் அவர்களிடம் காட்டி விளக்கினாராம்.

உடனே திரு. முதலியார் அவர்கள் என்னை வரச் சொன்னார். காலையில் அவர் வீட்டிற்குச் சென்றேன். என்னை உட்கார வைத்து நான் எழுதியதைப் பற்றிக் கூறி, பல்கலைக்கழகம் போன்ற பெரிய நிறுவனங்களில்,இத்தகைய தவறுகள் வருவது இயற்கை. அவற்றைச் சுட்டிக் காட்டிய உங்களைப் பாராட்டுகிறேன். இத்தகைய சுட்டிக் காட்டல்கள்

தான் நட்புக்கு அடையாளம். உங்களுக்கு நன்றி என்று கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தார். எனக்கு ‘நகுதற் பொருட் டன்று நட்டல்' என்ற குறள் நினைவுக்கு வந்தது. அவரை வாழ்த்தினேன்.

ஆனால் இன்று நான் எழுதியுள்ளதை பல்கலைக் கழகத்தில் உள்ளவர்கள் எப்படிக் கொள்வார்களோ! நல்ல உள்ளங்கள் நகுதற்பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என்ற குறள் வழி இவற்றை ஏற்றுக் கொள்வர் என நம்புகிறேன். எப்படியாவது என்னை ஆளாக்கிய பல்கலைக்கழகம் பழைய நிலையை அடைய வேண்டும் என்பதே என் ஆசை. அதை இன்றுள்ளவர்கள் நிறைவேற்றுவார்கள் எனவும் நம்புகிறேன்.

பல்கலைக் கழகங்களிலோ கல்லூரிகளிலோ மாணவர்களைச் சேர்க்கும்போது, தரம் எண்ணப் பெற வேண்டும். பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவற்றிற்கு 90, 95 எனக் காணும் நிலையில் பிற கல்லூரிகளுக்குக் குறைந்தது அறுபதாவது 60 இருக்க வேண்டாமா? ‘பி. பி. ஏ.’ வகுப்பில் சேர்வதற்கு மட்டும் சென்னைப் பல்கலைக் கழகம் அத்தகைய விதியினை அமைத்துள்ளது. அதேபோன்று பிற பாடங்களுக்கும் அமைத்தால் எவ்வளவு ஏற்றம் பெறும்.‘ Eligible for College Course’ என்று முற்காலத்திய பள்ளி இறுதி வகுப்பின் சான்றிதழ்களில் அச்சிடப் பெற்றிருக்கும் நல்லவேளை தற்போதைய சான்றிதழ்களில் அத்தகைய தொடர் இல்லாதது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் முப்பத்தைந்து வாங்கித் தேறினான் என்றால் அம்மாணவன் கல்லூரியில் சேரத் தகுதி பெற்றவனாகின்றான். பெரிய இடத்து சிபாரிசு இருந்தாலோ அல்லது பெரும் பணம் கொடுத்தாலோ அவனுக்கும் கல்லூரியில் இடம் கிடைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பெற்றோருக்கும் பிற தொழிற் கல்லூரிகளுக்கு இருப்பது போன்று ஓரளவு சலுகை தருவதில் தவறில்லை. மேலும் எத்தனை முறை படையெடுத்து, ஒவ்வொரு பாடமாகத் தேறினாலும்

அவனுக்கும் இடம் தர வேண்டிய நிலை கல்லூரிக்கு உண்டாகின்றது. இந்த நிலையில் கல்லூரியின் தரம் எங்கே நாட்டப் பெறும்? மேலும் அதுவரையில் தமிழில் எல்லாப் பாடங்களையும் பயின்ற மாணவர் பலர், ஆங்கிலம் பயிற்சி மொழியாக உள்ள கல்லூரிகளில் இடம் வேண்டுகின்றனர். ஆனால் அரசாங்கமே நடத்தும் ஒருசில கல்லூரிகள் தவிர்த்து, பெரும்பாலான கல்லூரிகள் ஆங்கிலத்தையே பயிற்சி மொழியாகக் கொண்டுள்ளன. அவற்றுள் பணிபுரியும் ஆசிரியர்களுள் சிலர் தமிழ் வாடையே அறியாதவர்கள்; சிலர் தமிழே புரியாதவர்கள். சிலர் தமிழில் சொல்லித்தருவதைத் தாழ்வாக எண்ணுபவர்கள். இந்த நிலையினால் ஆங்கிலமே பயிற்று மொழியாகிறது. அரசாங்கம் இந்த வகையில் கருத்திருத்தி, தம் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளை எல்லாப் பாடங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். தமிழில் பள்ளியில் பயின்றோம் அதே மரபினைத்தான் கல்லூரியில் பின்பற்ற வேண்டும் என மரபு ஏற்படுத்த வேண்டும். இன்றேல் பல மாணவர் மொழியறியாது தடுமாறித் தேர்வுகளில் பொருள் விளங்க மாட்டாது இடர்ப்பட்டு தோல்வியுறுகின்றனர். இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசாங்கம் உடன் தக்க ஆக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மற்றொன்றும் காணல் வேண்டும். பாடத்தில் ‘10+2+3' என மாற்றிய போது அரசாங்கப் பணி புரிபவர்க்கென்றே (Vocational Course) ஆசிரியப் பயிற்சி முதலியன புகுத்தப் பெற்றன. ஆசிரியப் பயிற்சி தற்போது கைவிடப் பெற்றது. தொழில் கலந்த கல்வி பயின்றவர் அரசாங்க எழுத்தர், தட்டச்சாளர் போன்ற பதவிகளுக்குச் செல்லவென்றே அது அமைக்கப்பெற்றது. ஆனால் தற்போது, அதில் பயின்றவருக்கும் பத்தில் ஒரு பகுதி இடம் தரும் நிலை உண்டாகியுள்ளது. இதை உண்டாக்கியவர் யார் என்று தெரியவில்லை. எனினும் இந்த முறை நீக்கப் பெறல் வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணையம் இத்தகைய மாணவர்களுக்கு

முதலிடம் அளித்து, அரசாங்க உத்தியோகங்கள் தரவழி காணவேண்டும். அதற்கும் சில திருத்தங்கள் தேவை. அந்த இருவகுப்புகளைப் பற்றி எழுதும் போது அதுபற்றி விரிவாகக் காணலாம்.

கல்வியினை மாநில, மத்திய அரசுகளோடு ஒன்றி இணைத்தமையின் பல மத்திய பள்ளிகள் தமிழ்நாட்டில் வளர்ந்தன. அப்படியே சில பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் ஆணை வழியே இயங்குகின்றன. புதுவைப் பல்கலைக்கழகம் அத்தகைய பல்கலைக் கழகமே. இந்த நிலை வேண்டத்தகாத ஒன்று. அண்மையில் அசாம் மாநிலத்தில் இரு புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் தொடங்கத் தில்லி அரசு முயன்றும் எதிர்ப்பின் காரணத்தால் கைவிடப்பட்டது என்பது பத்திரிகைச் செய்திகளால் அறியப்படுவதொன்று. அது மட்டுமின்றி அத்தகைய பல்கலைக் கழகங்களுக்குத் தனிச் சலுகையும் தனித்த உயர்நிலையும் தருவது வேண்டப் பெறுவதன்று. தேவையற்ற ஒன்றைத் தோற்றுவித்து, அதற்கெனத் தனிச் சலுகை தந்து உயர்த்துவது மாநில மக்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வேண்டுமாயின் மாநிலங்கள் அமைத்த பல்கலைக் கழகங்களுக்கு அதிக மானியம் கொடுத்து, அங்கங்கே உள்ள களைகளைக் களைந்து, காவல் துறையில் தேவையானபோது மத்திய காவல் படையினை அனுப்புவது போன்று, மத்திய உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம். அப்போது பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றி, மாநில அரசுகளும்கூட அஞ்சிச் செயல்படும். அதனால் நாட்டில் கல்வி நன்கு வளர்ச்சியுறும்.

மேலை நாடுகளில் ஒரே பல்கலைக்கழகத்தே பலவகைப் பயிற்சி வகுப்புகள்- பட்ட வகுப்புகள் உள்ளன. வேறு பல கல்லூரிகள் இணைக்கப்பெறவில்லை. அந்த நிலையில் நம் நாட்டிலும் சில பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆயினும் அவற்றின் தரம், மேலை நாடுகளில் காண்பது போன்று அத்துணை வகையில் சிறந்ததாக இல்லை. தமிழ் நாட்டில் அத்தகைய பல்கலைக் கழகத்தில் பயின்று உயர்ந்த நிலையில் சிறப்புநிலை-முதல் நிலையில் பட்டம் பெற்றவராயினும் அவர்களைக் கல்லூரி ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது என்று, தமிழ் நாட்டிலேயே மற்றொரு பல்கலைக் கழகம் ஆணையிடுகிறது. இது எவ்வளவு கேவலம் என எண்ணிப் பார்ப்பதில்லை: ஒரே மானியக் குழுவின் கீழ், ஒரே அரசரின் .(Chancellor – Governor) கீழ் இயங்கும் ஒரு பல்கலைக் கழகத்தை மற்றொரு கழகம் மதிப்பதில்லை என்பது வெட்கக் கேடு அல்லவா! அதே வேளையில் அவ்வாறு மதிக்காத பல்கலைக் கழகத்தே கடலனைய குறைகள் மலிந்துள்ளதை அவர்கள் உணர்வதில்லை. இயேசுநாதர் கூறிய ‘உன் கண்ணி லிருக்கிற உத்தரத்தை எடுத்துப் போட்டு மற்றவன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பற்றிக் கருது’ என்று கூறிய நீதி இங்கு என் நினைவுக்கு வருகிறது.

அதே வேளையில் தன் கீழ் உள்ள தனக்கு வேண்டிய சில கல்லூரிகளுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கி, அவற்றுள் பல மனம் போனபோக்கில் செயல் இயற்றுவதையும் தேர்வு நடத்துவதையும் கண்டு கொள்ளாமல் பட்டம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தைப் பற்றி அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை. அண்மையில் அத்தகைய தன்னாட்சிக் கல்லூரிகளைப் பற்றி ஆராயவும், தேவையாயின் அவற்றைப் பழைய முறையில் பல்கலைக் கழகத்தோடு இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் போவ்தாக அறிகிறேன். இன்று தமிழ்நாட்டில் அத்தகைய கல்லூரி ஒன்றின் செயல்பாட்டினால் பல இன்னல்கள் உண்டானதை நாளேடுகள் காட்டுகின்றன. அரசாங்கம் விரைந்து இத்தகைய செயல்களைத்திருத்த நலன் காணச் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது; அதற்கும் நல்லது:

தேர்வு முறை பற்றியும் முன்பே சில குறிப்பிட்டேன். இங்கே ஒன்றை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். தேர்வுகளை நடத்தும் பொறுப்பினைப் பல்கலைக் கழகமே கொண்டிருந்தாலும், அதை நடத்தத் தனி நிறுவனம் ஒன்றை:அமைத்து அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அது. பதிவாளர் அடியின் கீழோ வேறு வகையிலோ அடக்கமாகாது தனி நிலையில் இயங்கவேண்டும். தேர்வுக்குரியோரை- வினாத்தாள் தயாரிப்போர்- திருத்துவோர் பட்டியலைப் பல்கலைக் கழகம் தரலாம். தேர்வுகளும் நான் முன்னமே குறித்தபடி மாணவர் படித்த கல்லூரியிலேயே நடைபெறுவது தவறு.• உண்மையான அறிவுடையாரைக் கண்டறிய அது உதவாது. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேன். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற தேர்வுக் குழுவே தனி ஆதிக்கம் பெற்ற கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளுக்கும் உரிய தேர்வை நடத்தவேண்டும்.

நாளிதழ் வழியே (8.11.91-இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஒரு மாணவர் முறையாகப் பணம் கட்டித் தேர்வு எழுதியும் பதினான்கு மாதங்களுக்கு மேலாக அவர் தேர்வு முடிவினைத் தராத காரணத்தால், அவர் வழக்கிட, உண்மை கண்ட நீதிமன்றம் அவருக்குப் பல்கலைக்கழகம் இருபத்தெட்டாயிரம் (28,000) நட்டஈடாகத் தரவேண்டும் என ஆணையிட்டதென்பதை அறிய வருந்த வேண்டியுள்ளதல்லவா! இத்தகைய குறைகள் தவிர்க்கப் பெறவேண்டும். முறையான கவனிப்பும் மேற்பார்வையும் இருப்பின் இவை நிகழ வழி இல்லையே!.

நாட்டுப்புற அல்லது கிராமப்புறப் பல்கலைக் கழகங்களும் நாட்டில் சில உள்ளன. அவையும் மாநில அரசின் எல்லைக்குள்ளாகவே வரவேண்டும். கிராமங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு மாநில அரசுக்கே உண்டு. அங்கு வாழும் மக்களுக்கு உரிய தேவையான முறையில் கல்வி அளிக்கும் நெறி அறிந்து ஆற்றுப்படுத்தி இப்பல்கலைக் கழகங்களுக்கு வழிகாட்டும் முறை மாநில அரசுக்குத்தான் புரியும். கூடுமாயின் அத்தகைய பல்கலைக் கழகங்கள் இயங்கும் மாவட்ட ஆட்சியாளரைத் தலைவராகக்கொண்டு கற்றறிந்த நல்லவர்கள் அமைந்த ஒரு குழுவினையும் அதன் மேற்பார்வைக்கு என அமைக்கலாம். வெறும் பாடங்கள் மட்டுமன்றி. அம் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் அங்கே நிறைவு செய்யப் பெறல் வேண்டும். இன்றேல் வெறும் பெயரளவில் தான் அவை இயங்கும். இந்த நிலை முக்கியமாகக் கண்டு போற்றப்பெறல் வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் தாம் இயங்கும் அந்தந்தச் சமுதாய அமைப்பிற்கு ஏற்ப இயங்கவேண்டும். எங்கோ யாரோ வகுத்த பாடங்கள்-தேவையற்ற தெளிவற்ற எடுத்துக் காட்டுகள்-என்றோ எவரோ வகுத்த பாடமுறைகள் என்ற வகையில் இயங்காது அவ்வப்போது அதைச் சார்ந்த சமுதாயத்துக்கு ஏற்ற பாடங்களைத் திறன்றிந்து-முறை அறிந்து-சிலவற்றைத் தெளிவிக்கும் வகையறிந்து போற்றி அமைக்கவேண்டும்.

எனவே பல்கலைக்கழகங்கள் அவைஅவை வாழும் சூழலுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்றவகையில் பயன்படல் நலம் பயப்பதாகும். அதுவே நாடு வளர வழிகாட்டியாகவும் அமையவேண்டும்.

ஆரம்பக் கல்வி முதல் உயரிய 'டாக்டர்' பட்டம்பெறும் கல்விவரை ஒன்றற்கொன்று தொடர்பு கொண்டதாகவே அமையவேண்டும். பள்ளியில் எதையோ படித்து, மேநிலையில் தேவையற்றதைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு, வேறு எதுவும் கிடைக்காததால் கிடைத்த எதிலோ சேர்ந்து எப்படியோ பட்டம்பெறும்நிலை படிப்பவருக்கும் நல்லதன்று; நாட்டுக்கும் நல்லதன்று. கோடி கோடியாகப் பணம்தான் வீணாகும். இவ்வாறு பயின்று, பட்டம் பெறுதல் உத்தியோகம் பெறுவதற்காகவே என்ற எண்ணமும் மக்கள் மனத்தில் உண்டாகக்கூடாது. உத்தியோகத்தைப் பட்டப்படிப்புடன் இணைத்துப் பார்க்கலாகாது என முன்னரே சுட்டியுள்ளேன். நான் மேநிலைப் பள்ளியில் சுட்டிக்காட்ட இருப்பதுபோன்று அங்கே தனியே அமைந்துள்ள கல்வி முறையில் பயின்றோரே அரசாங்க, பிற உத்தியோகப் படிப்பினைக் கற்றவரே அரசாங்கத்தும் பிறவிடத்தும் உத்தியோகம் பெறத்தக்கவர். பின் அவரவர் பணியாற்றும் நிலைக்கேற்ப வேறு தேர்வுகளில் (Departmental test) வெற்றிபெற்றுமேலே உயரலாம். இந்த நிலையில் கல்லூரியின் கனம் குறையும். அரசின் பணமும் மிச்சமாகும். சமுதாயமும் வீண்பொழுதில் காலம் கழித்தோம் எனக் கவலைப்படவேண்டி இருக்காது. இந்த வகையில் பல்கலைக்கழகங்களை உடனே திருத்தி அமைத்தல் அவற்றை உருவாக்கும் மாநில அரசுகளின் கடமையாகும் என உணர்ந்து அவை செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

* * *

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு (குறள்)

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து (நாலடியார்)

* * *

⁠3. மேநிலை வகுப்பு (+2)

* * *

தமிழகக் கல்வித்துறையிலே, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய இருவகுப்புகளடங்கிய (+2) மேநிலைக் கல்வியே சிறப்பாக அமையவேண்டியதாகும். பத்தாம் வகுப்பு வரை எல்லாரும் பெரும்பாலும் அந்தந்த ஊரிலிருந்தே படிக்க வசதிகள் பெருகிவருகின்றன. அந்த வகுப்புகளில் பெரும்பாலும் தாய்மொழி மூலமே கல்வி கற்பிக்கப்பெறுகின்றது. பெருநகரங்களில் பல பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பினும் பல பள்ளிகளில் தமிழே பயிற்றுமொழியாக உள்ளது. பிள்ளைகள் தாய்மொழி வழியே எளிதில் கற்று முன்னேற வழி ஏற்படுகின்றது. மேலும் அதுவரை பயிற்று மொழி எதுவாயினும்-இலவசக் கல்வியாகவே உள்ளது. ஆயினும் அந்தப் பத்தாம் வகுப்பிலேயே நூற்றுக்கு 60 அல்லது 70க்குமேல் தேர்ச்சி பெறுவது அரிதாக உள்ளது. அதற்குக் காரணம் ஆசிரியர்கள் சிலர் திறம்ப்ட் இயங்காமையும் மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களோடு கரும்பலகை உட்பட நல்ல கட்டடங்களோ சூழ்நிலையோ இல்லாமையுமாகும். எப்படியோ அந்தப் பத்தாம் வகுப்பினைத் தாண்டியபின், ஒருசிலர் தவிர்த்துப் பெரும்பாலோர்-பாதிக்குமேல் பதினோராம் வகுப்பில் சேர்கின்றனர். அப்படிச் சேரும்போது பெரும்பாலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக அமையும் பள்ளிகளே அதிகம் உள்ளன. சில வகுப்புகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருப்பினும் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உள்ளது. அத்தகைய வகுப்புகளுக்குப் பள்ளிக் கட்டணமும் உண்டு (சிறுதொகையே). அரசாங்க முறையில் மானியம்பெறும் பள்ளிகள்போக, மானியம்பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை, மத்தியபள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பத்தாம்

வகுப்பு வரையில் ஆங்கிலமே பயிற்றுமொழியாகக் கொள்வதால் அவர் மேல் வகுப்பில் சேர்ந்து படிப்பதில் அதிகத்தொல்லை இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பு வரை தமிழில் பயின்றவர்கள் படிக்க இடர்ப்படுகின்றனர். மேலும் மத்திய கல்விக்கூடங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள பிற எல்லாவகைக் கல்விமுறைகளும் - பத்தாம் வகுப்பு வரையில் வேறாக இருப்பினும்-பதினோராம் வகுப்பில் ஒரேவகையான பாடம்-தேர்வு. பிறமுறைகள் ஒன்றி அமைகின்றன. பயிற்றுமொழி எதுவாயினும் பாடச்சுமையும், ஆய்வுக் களநிலைகளும் இந்த இருமேல் வகுப்புகளிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளமையின் பெரும்பாலான மாணவர் அல்லல் உறுவர். எனவேதான் இந்தத் தேர்விலும் பெரும்பாலோர் தோல்வியுற நேர்கிறது.

தமிழ்நாட்டுப் பாடமுறை இந்த இருவகுப்புகளிலும் சற்றே குறைவாகவே தொடக்கநாளில் இருந்தது. எனினும் 1986-87 முதல் தரம் உயர்த்தப்பெற்றது. மத்திய பள்ளிகளில் தரம் உயர்ந்திருந்ததோடு, திருத்தும்முறை, நாடுதழுவிய நிலையில் அன்று இருந்ததால் மாணவர்கள் அதிக எண் பெறஇயலவில்லை என்றும் அதனால் பொறியியல், மருத்துவம் முதலிய கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை இழக்கிறார்கள் என்றும் கருதிய காரணத்தால் அந்தப் பாடத்திட்டம் எளிமையாக்கப் பெற்றதோடு, திருத்தங்களும் சென்னையிலேயே நடைபெற ஏற்பாடாயிற்று. ஆயினும் அதே வேளையில் எம்.ஜி.ஆர். காலத்திய தமிழக அரசு, நன்கு ஆய்ந்து மாணவர் தரம் உயரவேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றமும் ஏற்றமும் கண்டது ஆசிரியர்தம் முயற்சியினாலும் மாணவர் ஆர்வத்தாலும் அவர்கள் அதிக எண் பெற்றுப் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளில் உரிய இடங்களைப் பெறுகின்றனர்.

இத்தகைய இரு ஆண்டுக் கல்வியினைப் பற்றிச் சற்றே ஆழ்ந்து காணல் நலமாகும். இது ஒரு பேரேரியாக இயங்குவது, இதில் பயின்றவர் பின் பலதுறைகளில் பிரிந்துசெல்ல வாய்ப்பு உண்டாகிறது. எனவே இப்பாடத் திட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட பிரிவுகள் தேவை. இவ்வகுப்புகள் தொடங்கப்பெற்றபோது இத்தேவை அறிந்தே தொழில்துறை (Vocation) வகுப்பு பிரிக்கப் பெற்றது. அதில் பயின்றவர்களுக்கே அரசாங்கத் தேர்வு எழுத முதல் உரிமை தந்து, அவர்களையே பணியாற்ற அழைக்க வேண்டும் என்பதே திட்டம். (நான் அப்போது அக்குழுவில் இருந்தமையின் இதன். அவசியத்தை அறிய வாய்ப்பு இருந்தது). அரசாங்கம் அந்த நிலையிலிருந்து தவறிவிட்டது எனலாம்.

ஆண்டுதோறும் தேர்வாணையம் எழுத்தர்களுக்குத் தனித்தேர்வு (Group IV) நடத்துகிறது. இதில் மேநிலையில், இத்தகைய பாடங்களை எடுத்தவர் மட்டுமே எழுதவேண்டும் என்ற விதி அமைக்கப்பெறும் என எதிர்பார்த்தனர் பொது மக்கள். மாணவரும் இதில் சேர்ந்தால் உடன் அரசாங்கப் பணியில் சேரலாம் என்ற ஆர்வத்தில் முதலில் சேர ஆரம்பித்தனர். ஆனால் நடப்புநெறி வேறாகிவிட்டது. நான்காம் பிரிவில் தேர்வு அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. பழையபடியே இந்தத் தேர்வுக்கு எம்.ஏ., எம்.எஸ்சி, போன்ற உயர் பட்டங்கள் பெற்றவர்களும் பி.ஏ., பி. எஸ்.சி., பி.காம். போன்ற பட்டங்களைப் பெற்றவர்களும் எழுத வருகின்றனர். இவர்களோடு, பன்னிரண்டாம் வகுப்பில் வேலை வாய்ப்புக்கெனவே பயின்ற மாணவர் எப்படிப் போட்டியிட்டு வெற்றி காண இயலும்? இந்த நிலை இனியாகிலும் மாற வேண்டும். அரசாங்கப் பணிக்கு ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெற்றவரே தேர்ந்தெடுக்கப்படுவர்; மற்றவர் அத்தேர்வு எழுத முடியாது என்று விதி வகுத்தால் பல நன்மைகள் உண்டாகும்.

ஏதோ பொழுது போகவில்லை, சம்பளமும், இல்லை; சாப்பாடும் இலவசம் என்று பலர் கல்லூரியில் சேர்கின்றனர் (ஏழைகளுக்கு உதவுவது தவறு எனக் கூறமாட்டேன்.) ஆனால் அவ்வாறு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயின்ற பின் பட்டம் பெறுகின்றவர்கள் ‘+2’ படித்த மாணவரோடு போட்டியிட வரலாமா? அவர்கள் வேறு வாணிப முறையிலோ பிற வகைகளிலோ செயலாற்றி வெற்றி பெற வேண்டுமேயன்றி, இதில் போட்டியிட்டுத் தாழ்நிலையிலுள்ள இளஞ்செல்வங்களின் எதிர்காலத்தைத் தடுக்கலாமா? எண்ணிப் பாருங்கள்.

பயில்பவருள் பலர்-கல்லூரியில் உயர் பட்டங்கள் பெறுபவர் வரை-பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்திலேதான் கண்ணாக உள்ளனர். அதற்காக, ஒவ்வொருவரும் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்வதோடு, அரசாங்கப் பணத்தையும் வீணாக்குகின்றனர். அறிவியல் மேல்படிப்பிற்கு (M. Sc) ஒருவருக்கு ஓர் ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரத்துக்கு மேல் செலவாகும் எனக் கணக்கிடுவர். கட்டடம், ஆய்வுக்கள அமைப்பு போன்றவற்றைக் கணக்கிட்டால் இன்னும் அதிகமாகலாம். இவ்வளவு செலவும் ஆன பிறகு சாதாரண எழுத்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது நாட்டுப் பொருளாதாரத்தை நலிவு செய்வதாகாதா! அரசாங்கம் ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெறுபவர்தான் அரசாங்க அடிப்படை ஊழியர் ஆகலாம் என்றும், பின் பதவி உயர்வு வேண்டின், அவர்கள் மட்டுமே தனித் தேர்வு எழுதி உயர்வு பெறலாம் என்றும் விதி அமைப்பின் நாட்டுப் பொருளாதாரம் எவ்வளவு சீர்படும்! எத்தனையோ கல்லூரிகள் தேவையற்றனவாகும். பலர் இந்தப் பணிப் பயிற்சியினைப் பெற்று, அரசாங்கப் பதவி கொள்வர். இதற்கெனத் தேவையாயின் அரசியல் சாசனத்தையே (உரிமை பற்றி) திருத்தி அமைத்து வழி காணல் நலம் பயப்பதாகும்.

மேலும் பயின்று ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுக்குச் செல்லுகின்றவர்களுக்கு ஏற்ற வகையில் ‘+2’ வகுப்பில் தனி வகைப் பாடங்க்ள் அமைய வேண்டும். எப்போதோ ஆங்கிலேயன் அமைத்த பாடத் திட்டத்தை, அவன் சென்று ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையிலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேய்ந்து அழிவது நியாயமாகுமா? நான் மேலே காட்டியபடி பாரதியார் வருந்திச் சொல்லிய-ஆரியர்க்கிங்கு அருவருப்பாவதை-இன்றும் நாம் எதற்குக் கொள்ள வேண்டும் இக்கல்வி கற்கத் தன்னைத் தந்தையார் அனுப்பிய நிலையினை அவர் மிகுந்த கவலையோடு உதாரணம் காட்டி விளக்குகிறார். .

‘புல்லை உண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும் ஊன்விலை வாணிபம்

நல்லதென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடுவிப்பது போலவும்’

அது அமைந்தது என்கிறார். இன்று மனிதன் நிலை மாறிவிட்டாலும், முதலில் காட்டிய உவமை இன்னும் உண்மை யாகத்தானே உள்ளது. எனவே கல்வியில், அதுவும் பேரேரி யாகிய இந்தப் பிரிவில் பெரும் மாற்றம் தேவை.

பொறியியல், மருத்துவமும் முதலியன பயில விரும்புபவருக்கும், பிற விவசாயம், கால்நடை மருத்துவம் போன்ற துறைகளுக்கும் வாணிபம், பொருளாதாரம் போன்றவற்றிற்கும் வானிலை ஆய்வு போன்ற அறிவியல் காண்பதற்கும் கலை, இலக்கிய நலம் காண்பதற்கும் எனப் பல வகையில் இந்த இரண்டாண்டுக் கல்வி பிரிக்கப் பெறல் வேண்டும். அரசாங்கப் பணி ஏற்போர், ஆசிரியராக விரும்புவோர் போன்றோருக்குத் தனி வகைக் கல்வி அமைந்தமை போன்று (இன்று ஆசிரியப் பயிற்சி எடுக்கப் பெற்றது. இடைநிலை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் அனைத்தையும் மூடி, முன்போன்று இந்த வகுப்புகளிலே அப்பயிற்சி அமைக்க வேண்டும்.) இந்த விரிவாக்கங்கள் செயல்பட உடன் வழி வகைகள் காண வேண்டும். இத்தகைய பிரிவுகள் ஏற்பட்டால், கல்லூரியில் தேவையற்ற பாடங்களைப் படித்து, பின் “ஏன் படித்தோம்- அட், கெடுவா பல தொழிலும் இருக்கக் கல்வி அதிகமெனக் கற்றுவிட்டோம் அறிவிலாமல். என்று ஒரு புலவர் பாடியதை மறந்து விட்டோமே” என வருந்த வேண்டிய நிலை சமுதாயத்தில் உண்டாகாது.

சில ஆண்டுகளுக்குமுன் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஒருவருடன் அவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கிராமத்தில் இருந்து வந்த ஒருவர் அவர் பாதங்களில் நெடுங்கிடையாக வீழ்ந்து புலம்பினார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரைச் சமாதானம் செய்து, எழச் செய்து, என்ன வேண்டுமென்று கேட்போம். அவர் ஐயா, என் மகன் பி.ஏ வெற்றி பெற்றுவிட்டான். அதற்கு மேல் ஏதோ இரண்டு வருடப் படிப்பு இருகிறதாமே (அதன் பெயர் கூடத் தெரியவில்லை) அதை என் மகனுக்குத் தரவேண்டும் எனக் கூறி மறுபடியும் தண்டனிட்டார். நான் அவரைத் தடுத்து நிறுத்த, அவர் 'உன் பையனை எங்காவது வேலைக்கு அனுப்பக் கூடாதா? நீ தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் காண்கின்றாய். மிகவும் முயன்றால் வேலை கிடைக்குமே என்றார். (அக்காலத்தில் எம். ஏ. எம். எஸ்சி. போன்ற முதுநிலைப் பட்டங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பல்கலைக் கழகத்தினிடமிருந்தது. எனவேதான் அவர் துணை வேந்தரையே பிடித்தார்) உடனே அவர் சற்றும் தாமதியாமல் ‘ஐயா! வேறு ஒன்றுமில்லை. இரண்டு வருடங்களுக்கு அவனுக்குச் சம்பளமும் இல்லை. நூல்களும் பிறவும் கூட அரசாங்கமே தந்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என் மகன் இரண்டு வருடம் பசியில்லாமல் அரசாங்க இலவச விடுதியில் நல்ல சாப்பாடு பெறுவானே! இதற்காகத்தான் கேட்கிறேன்’ என்றார் அவர் வேண்டுகோளைப் பற்றி சிரிப்பதா! சிந்திப்பதா! இவ்வாறுதான் நாட்டிலே கற்பவர் பலர் உள்ள னர். (பின் அப்பையனுக்கு அவர் ஒரு கல்லூரியில் இடமளித்தார்). இந்த நிலையில் எத்தனை ஆயிரம் கோடி கல்விக்குச் செலவு செய்தால்தான் என்ன பயன்? எனவே இப்பேரேரியிலிருந்து பிரியும் பல கால்வாய்களைச்-சிற்றாறுகளைச் செம்மைப்படுத்தி, வழி வகுத்து, அவை வற்றாவகையில் பாதுகாத்தால் நாட்டுக்கு வேண்டிய நல்ல பயன்-வாழ்வுக்குத் தேவையான பயிர்-சமுதாயத்தை வாழ வைக்கும் தகுதியான பயிர் விளையுமே. எனவே இந்தப் பேரேரியை முதலில் தூறு எடுத்துத் தூய்மையாக்கி, அதனைப் பகுத்து உரிய ஆறுகளையும் கால்வாய்களையும் செம்மைப்படுத்தி, மதகினை ஒழுங்குற அமைத்து, தேவையறிந்து திறந்துவிட்டு, பயிரின் களையைப் போக்கி, எருவிட்டுக் காத்தால் நாடு நாடாகும். நம் தமிழ் நாடே பாரதத்தில்-பரந்த உலகில் உயரிய முதல் நாடாகத் திகழும்.

எனவே இந்த அடிப்படையிலே ‘+2’ வகுப்புகளுக்கு உரிய பாடத்திட்டங்களை அமைக்க வழிகண்டு, அதற்கேற்ற வகையில் நல்ல வல்லவர் குழுக்களை அமைத்து உடன் அரசாங்கம் ஆவன காணவேண்டும். 1992 சூனில் தொடங்கும் வகுப்புகளுக்கே இத்தகைய முறையினைச் செயலாக்க வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கம் உடன் செயலாற்ற வேண்டும்.

இதற்கென நல்லாசிரியர்கள்-தம்மை மறந்து உழைக்கின்ற-அவரவர் பாடங்களின் திறன் பெற்ற வல்லாசிரியர்கள் தேவை. யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை மாறி, பிள்ளைகளை-வளரும் சமுதாயத்தை வாழவைக்கும் வகையில் செயலாற்றும் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நன்னூலில் பவணந்தியார் காட்டிய ஆசிரியர் இலக்கண அமைதி பெற்றவராய், ஆங்கிலத்தில் கோல்டு ஸ்மித் (Goldsmith) காட்டிய ஆசிரிய மரபினைப் பெற்றவராய் உள்ளவர்கள் ஆசிரியர்களாய் அமைந்தாலன்றி எந்தச் சீர்திருத்தமும் சிறக்காது. எனவே இப்பேரேரியாகிய ‘+2’ எனும் கல்வியை நல்லவர் துணைக் கொண்டு உடன் செயலாற்ற முனையின் நாட்டின் பல பிரச்சினைகள்.உடனே தீரும். அரசாங்கம் செயலாற்ற வேண்டும்.

இதன் தேர்வு நிலைபற்றிச் சிறிதே எண்ணவேண்டும். 10+2+3 என்ற நிலையினைக் கல்வியில் வரையறுத்தபோது அத்தனை ஆண்டுகள் கட்டாயம் பயிலவேண்டும் என்ற விதியினை வற்புறுத்தினர். அப்போதுதான் கல்வி நிறைவு பெற்றதாகும். எனவே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இரண்டாண்டுகள் கழித்தே மேநிலையாகிய ‘+2’ தேர்வு எழுதவேண்டும். அதன் பிறகே கல்லூரிகளில் இடம் தேடும் நிலை, ஆனால் தேர்வு விதிகள் அந்த வகையில் இல்லை என்கின்றனர். மார்ச்சில் பத்தாம் வகுப்பு அல்லது. மெட்ரிகுலேஷன் தேறினால் உடன் அடுத்த செப்டம்பரிலேயே (ஆறு மாதத்தில்) தனியாகச் செல்பவர் மேநிலைத் தேர்வு எழுதலாம். பெரும்பாலான மாணவர்கள் பெருந்தொகை செலவு செய்து பள்ளிகளில் இரண்டாண்டுகள் பயின்ற பின்பே தேர்வு எழுதும் முறை இருக்க, இப்படிக் குறுக்கே ஆறே மாதத்தில் அத்தேர்வினை முடிக்க விதி உள்ளது பொருத்தமாகுமா? அத்துறையில் விதி உள்ளமையின் தாங்கள் தடுக்க முடியாதே என அஞ்சுகின்றனர். அவ்வாறு தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்களைப் பொறியியல் கல்லூரி போன்றவை ஏற்றுக்கொள்ளா. இவ்வாண்டுமுதல் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என விதி செய்துள்ளது. ஆக அவர்கள் அவ்வாறு சுருங்கிய எல்லையில் தேர்வில் வெற்றி பெற்றும் மேலே பயில வாய்ப்பு இல்லையே. (பல்கலைக் கழகங்கள் அஞ்சல்வழிக் கல்விக்கு இவர்களை ஏற்றுக்கொள்ளும் போலும்).

முறையாக இரண்டாண்டு பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றவர்களுக்கு மாறாக, இந்தக் குறுக்குவழி இருத்தல் ஏற்புடைத்தாகாது. இது மற்ற மாநிலங்களில் ஒரு வேளை இருந்தாலும் தவறே. எனவே நம் தமிழக அரசு உடன் இந்தக் குறுக்கு வழித் தேர்வினை நிறுத்த ஏற்பாடு செய்ய

வேண்டும். பத்தாம் வகுப்பில் வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகே +2 எழுதவேண்டும் என்ற விதி கட்டாயம் ஆராயப் பெறவேண்டும்.

சென்ற ஆண்டு கல்லூரிகளில் இத்தகைய மாணவர்கள் சேர்க்கப்பெற, பின் பல்கலைக் கழகம் அவர்களை விலக்க அவர்கள் நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றுத் தொடர்ந்து பயிலும் வாய்ப்பினைப் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு சேர்க்கக்கூடாது என்ற விதியினைத் திட்டமாக முன்அறிவித்து விட்டமையின், எந்தக் கல்லூரியும் அவர்களைச் சேர்த்திருக்காது. எனவே உடன் இத்தகைய குறுக்குத் தேர்வினை - முறைக்கு மாறான ஒன்றினை - நிறுத்த வேண்டும்.

* * *

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு (குறள்)

தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந்தார் (குறள்)

வைப்புழிக் கோட்படா வாய்த் தீயில் கேடில்லை

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்

எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற் றல்ல பிற (நாலடியார்)

* * *

4. இடைநிலை-உயர்நிலைப் பள்ளிகள்

* * *

இந்தப் பள்ளிகளைப் பற்றி எழுதத் தொடங்க நினைக்கையில் என் நினைவு அறுபது ஆண்டுகளைத் தாண்டிப் பின் செல்கிறது. 1926இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து பெரியார் பிரிந்தார்-வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம்-பள்ளி, கல்லூரி-உத்தியோகம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடம் தருதல் என்ற கொள்கை உருவாகிய காலம் அது. பிராமணர் அல்லாதார் இயக்கம் செயல்படத் தொடங்கி, நீதிக்கட்சி (Justice Party) எனப் பெயர் பெற்று நாட்டில் வளரத் தொடங்கிய காலமது. அதே வேளையில் அன்றைய ஆங்கில அரசும் இந்தியருக்குச் சில வகையில் ஆளும் உரிமைகளை விட்டுக் கொடுக்கத் திட்டமிட்டது. 1927-28இல் தில்லி, சென்னை சட்டசபைகளுக்குத் தேர்தல் என அமைக்க நினைத்த காலமும் அது. அன்றைய சென்னை மாகாணத்தில் (ஒரியா பேசும் கஞ்சம் முதல்-வட கன்னடம் வரையில்-ஒரியா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகள் பயிலும் மாகாணம்) சர்.பி.தியாகராயர், பனகல் அரசர் தமிழகத்தைச் சேர்ந்த P.T. இராசன், முத்தையா முதலியார் ஆகியோர் முக்கிய இடம் பெற்ற நீதிக் கட்சி ஆட்சி அமைத்த காலமும் அது. அந்தக் காலத்தில் இருந்த கல்வி முறைதான்-ஆண்டுகள் பெரும் அளவில் மாற்றம் பெற்ற போதிலும்-அடுக்கடுக்காக குறிப்பேடுகளும் நூல்களும் தூக்க முடியாத அளவில் பிள்ளைகள் தூக்கிச் சென்ற போதிலும்-நல்ல நெறிக்கு மாறாமல், எங்கோ வேறு திசையில் சென்று கொண்டு இருக்கிறது.

1930க்குப்பின் காந்தி அடிகள் உப்புச்சத்தியாக்கிரகம், போன்ற பெரும் கிளர்ச்சியினால் காங்கிரஸ் செல்வாக்குப்

பெறத் தொடங்க, தமிழ்நாட்டில் அந்த அலையும் வீசத் தொடங்கியது. மேலும் அன்று தொட்டு அடிக்கடி அரசுகள் மாறும் நிலை உண்டாயின. அந்த மாற்ற நிலையில் ஒவ்வோர் அரசும் தாம் தாம் ஏதேனும் கல்வியில் மாற்றம் காணவேண்டும் எனக் கருதித் தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரும் மாற்றங்கள் செய்து வந்தன.

ஆங்கிலேயர் 1931 வரையில் வகுத்த பாடத்திட்டத்தில் ஆரம்பக்கல்வி ஐந்து ஆண்டுகளும் (1-5), இடைநிலைக்கல்வி மூன்று ஆண்டுகளும் (6-8), உயர்நிலைக்கல்வி மூன்று ஆண்டுகளும் (9-11) அமைய, பள்ளிகளும் அதற்கேற்ப அமைந்தன. இடையில் உள்ள மூன்று வகுப்புகளையும் ஆரம்பப் பள்ளியோடு இணைத்து, உயர்தர ஆரம்பப் பள்ளியாகவும், உயர்நிலைப் பள்ளியாக அமைத்து இடைநிலைப் பள்ளி அல்லது இடைநிலை வகுப்பு எனவும் இயங்க வைத்தனர். தனியாக இடைநிலைப்பள்ளிகளும் (Middle schools) இருந்தன. இரண்டிற்கும் சற்றே பாடத்திட்டத்தில் மாற்றம் இருந்த போதிலும் யாவரும் மேலே கல்வியைத் தொடர வாய்ப்பு இருந்தது. பெருநகரங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இயங்க, பேரூர்களில் உயர்தர ஆரம்பப் பள்ளிகள் அமைய, நாட்டுக்கல்வி வேறு யாதொரு மாறுபாடுமின்றி, நல்ல பாடமுறையில், சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் கீழும் அரசாங்க அரவணைப்பிலும் சிறக்க விளங்கின.

ஆங்கிலேயர் வகுத்த கல்வி முறை மாறவேண்டும் என்று நான் மேலே குறித்துள்ளேன். அந்தக் காலத்தில் இந்த முறை இருப்பினும், அன்றிருந்த இந்நாட்டு ஆசிரியர்களும் மேதைகளும் சில நல்லாய்வுகளை வகுத்துப் பாடங்களையும் பயிற்றுகிறவர்களையும் நல்ல முறையில் தேர்ந்தெடுத்தனர் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

1991 வரையில் 6 முதல் 11 வகுப்புகள் ‘பாரம்’ (Form) என்ற பெயரோடு உயர்நிலைப்பள்ளிகளில் இயங்கின. (உயர்தர ஆரம்புப் பள்ளிகளில் வகுப்பு என்ற பெயரிலேயே இருந்தன) அக்காலத்திய பாடத்திட்டம் மாணவர் உளம் கொள்ளும் வகையில் அமைய எளிய வகையில் அமைந்து இருந்தது. (இன்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பெறலாம் என எண்ணுகிறேன்.) ஆயினும் அடுத்தடுத்து வந்த அமைச்சரவகைளும் பிறமாறுதல்களும் கட்சி அடிப்படையில் அமைந்த பிறவும் கல்வித்துறையில் மாற்றம் காணவிரும்பின. அன்றைய இந்தியா ஒன்றாகவே இருந்தாலும் கல்வியைப் பொறுத்த வரையில் மாநிலங்களில் மத்திய அரசு தலையிட்டது கிடையாது. அப்படியே நான் மேலே காட்டியபடி மாவட்டக் கழகங்களின் கீழே கல்விக் கூடங்கள் இருந்தமையின் மாநில அரசின் இடையீடும் அதிகமாக இருந்ததில்லை. பாடநூல்களும் வகுப்பின் தரத்துக்கு ஏற்ப, நல்ல ஆசிரியர்களால் எழுதப் பெற, பல வெளியீட்டகங்கள் வெளியிட, சிறந்த முறையில் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்தன. பள்ளியில் பயிலும் மாணவர்கள் தத்தம் ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு, பிறநாடுகள், உலகம் ஆகியவற்றை வகுப்புதோறும் முறையாக அறியவும் வாய்ப்பு இருந்தது. அப்படியே தமிழ் இலக்கியங்களும் உரைநடைகளும் வகுப்புக்கு ஏற்ப அமைய, 2-3ஆம் வகுப்பில் ஆத்திசூடி தொடங்கி, பதினோராம் (Vl Form) வகுப்பில் கம்பர், சேக்கிழார் போன்றோர்தம் பேரிலக்கியங்களைப் பயில வாய்ப்பு அளித்தனர். கணக்கும் அந்த வகையிலேயே படிப்படியாக உயர இறுதி வகுப்பில் சிறந்த வகையில் அமைந்தது. ஆங்கிலம், வரலாறு போன்றவையும் அப்படியே.

இன்றுபோல் எல்லாவற்றையும் இளைஞர் தலையில் சுமத்தி, சுமக்க முடியாத பளுவில் நூல்களையும் குறிப்பேடுகளையும் சுமக்கவைத்து, எதிலும் தேர்ச்சிபெறாத ஒரு நிலை அன்றுகாண முடியாதது. பள்ளி இறுதி வகுப்பில் பயின்றார் தம் தெளிந்த அறிவு இன்றைய முதுகலைப் பட்டம் பெற்றவர் அறிவைக் காட்டிலும் எத்தனையோ வகையில் மேம்பட்டது என இருபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று அந்தப் பழைய கல்வியை ஒப்பிட்டுக் காணத்தக்க பள்ளி, கல்லூரிகளில் கற்ற பெரியவர்கள் இன்மையின் அத்தகைய பேச்சுக்கு இடமில்லை. அக்காலத்தில் மாணவர்கள் கல்வி ஒன்றிலேயே கருத்திருத்தி, தாம் கற்றவற்றைப் பற்றி மேலும் மேலும் அறிய அவாவினர், ஆசிரியர்களும் பெற்றோரும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் வேண்டிய உதவிகளைச் செய்து அறிவு வளர ஆக்கப்பணி புரிந்தனர். இன்று இரு நிலையும் அருகிவிட்டனவே! ஆயினும் பாரதியார் அத்தகைய கல்வியினையே பழித்து உரைத்தார். நம் நாட்டு வரலாறு அறியாத குழந்தைகள். எந்நாட்டு வரலாறுகளையோ அறிகிறார்களே என வருந்தினார். இன்னும் அந்நிலைதானே.

சேரன்தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வவள்ளுவன் வான்மறை கண்டதும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்

பேரருட் சுடர்வாள் கொண் டசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

வீரர்வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்

..................

அன்னயாவும் அறிந்திலர் பாரதர்

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

என்று ஏங்கிப் பாடுகின்றார். அவர் இருந்த அந்த நாளில் ஆங்கிலப் பாடத்திற்கு முக்கியத்துவமும் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் பயிற்றியதும் இந்தியப் பண்பாடு பற்றி அறிய வாய்ப்பு இல்லாத நிலையும் அவரை அப்படிப் பாட வைத்தன. ஆனால் உரிமை பெற்று நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்பும் அதனினும் கேடாய் ஆங்கில மோகம் அனைவரையும் ஆட்டிப் படைக்க, தமிழ்நாட்டில் தமிழ் பயிலாமலே உயரிய டாக்டர் பட்டம் பெறும் நிலை இருக்க 'இந்திய ஒருமைப்பாடு’ என்று வானொலி, தொலைக்காட்சிகள் தினம் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய நெறியில் இளநெஞ்சங்களை ஈர்க்கும் பாடத்திட்டம் இல்லாமையும், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற அடியே இல்லாது ஒளவையாரைக் கொலை செய்யும் தமிழ் வளர்ச்சியும், தமிழில் எம்.ஏ., படித்தும் நான்கு வரிகள் தவறின்றித் தமிழ் எழுத முடியாத நிலையும், இவைபோன்ற பிறவும் பாரதி காணின் "ஐயோ! இதற்கா நான் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பள்ளுப் பாடினேன்' என்று அவதியுற்றுக் கலங்குவார். அதுமட்டுமல்ல. பாடத் திட்டத்தில் தன் ஊர், தன் மாவட்டம் பற்றி அறியவிடாமல் உலக நாடுகளைப் பற்றியும் பிற வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றியும் இளஞ்சிறுவர் படிக்க இருக்கும் இன்றைய நிலையினைக் கண்டு நல்லவர் உள்ளம் வருந்தாதிருக்க முடியுமோ!

அன்று ஆங்கில மோகமும் ஒருமைப்பாட்டு உணர்வு இன்மையும் இருந்த போதிலும், பிற வரலாறு, நிலநூல், கணிதம் போன்ற பாடங்களிலும் ஊர் ஆட்சி போன்ற பாடங்களிலும் (civics) மாணவர் தரத்துக்கும் வகுப்பிற்கும் ஏற்ப மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை நன்கு அமைந்திருந்தன. தெய்வநெறி போற்றும் மரபும் அக்காலத்தில் போற்றப்பட்டது. கல்லூரி, பள்ளிகளில் தமிழ்ப் பாடநூல்களில் முதலில் கட்வுள் வாழ்த்து அமைந்தே பிறகு அறம், இலக்கியம் போன்றவை இடம் பெற்றன. இன்றோ நாட்டுணர்வு மட்டுமின்றி இறைஉணர்வும் சமுதாய உணர்வும் தன் ஊர் உணர்வும் நாட்டு உணர்வும் இல்லா வகையிலேயே பாடநூல்க்ள் அமைகின்றன. ஆளும் கட்சிகள் தத்தம் தலைவரைப் பற்றிய பாடங்களுக்கு முதலிடம் தருகின்றனவே ஒழிய, சமுதாய வாழ்க்கை நெறி விளக்கத்துக்கு இடம் தருவதில்லையே. இப்படி எவ்வளவோ சொல்லலாம். நிற்க,

அடிக்கடி ஆட்சிமாறும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ஏதாவது கல்வியில் மாற்றம் செய்ய விரும்புவதாலேயே

மாணவர்கள் ஆரம்பப் பள்ளிமுதல்-கல்லுரி வரையில் இடர்ப்பட வேண்டியுள்ளது. 5+8+3 என்ற பள்ளிநிலை மாறி) 5+5 என அமைக்கப்பெற்றது. 11+2+2 என்ற கல்வி நிலைமாறி 11+1 + 3 என மாற்றம்பெற்று, இன்று 10+2+3 என அமைகின்றது. கல்லூரியிலும் இடைநிலை வகுப்பு என்ற பேரேரியிலும் (இன்றைய +2 போன்றது) இரண்டாண்டுகள் அமைய, அடுத்து, பட்ட வகுப்பு (B.A., B.Sc., B.Com.) பட்டச் சிறப்பு வகுப்பு, (B.A.Hons etc), மேல் பட்ட வகுப்பு என்ற நிலையிலும் இருந்தன. மாணவர் தரம், தம் திறன், தகுதி கருதி அந்தந்த வகையில் கல்வி பயின்றனர். ஆனால் இந்த நிலையெல்லாம் இன்று இல்லை. ஒரே முறையான 10+2+3+2 என்ற வகையிலேதான் முதல் வகுப்பு தொடங்கி முதுநிலைவரை அமைகின்றது. ‘Hons’ என்ற சிறப்புநிலைக் கல்வியில் மாணவர் மூவாண்டுகள் தொடர்ந்து ஒரே பாடத்தினைத் திறம்படப் பயின்ற உயர்ந்த நிலை மாறிவிட்டது. பட்ட வகுப்பில் ஒரு பாடம், மேநிலையில் வேறு ஒரு பாடம் படிக்கவும் இன்று வகை உண்டு. இப்படிப் பயில்கின்றவர் எப்படித் தெளிந்த அறிவுடையவராக முடியும்? கடைக்கால் இல்லாமல் கட்டும் வீடாக அன்றோ அது இடிவுறும். நான் பச்சையப்பரில் தமிழ்த்துறைத் தலைவனாகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகளிலும் பட்ட வகுப்பில் சிறப்புத் தமிழ்ப் பாடம் பயின்றவரையன்றி வேறு யாரையும் எடுப்பதில்லை-பல்கலைக்கழகம் பரித்துரைத்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பலருடைய கோபத்துக்கு ஆளானதும் உண்டு. ஆயினும் நான் இருந்த வரையில் என் கொள்கையில் வழாமலேயே மாணவர்களைச் சேர்த்துவந்தேன். மேலே காட்டியபடி எத்தனையோ வகையில் ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரிவரையில் புதுப்புது மாற்றங்களால் கல்வியின் தரமே மங்கிவிட்டது. மறுபடியும் எங்கோ சென்றுவிட்டேன்; மன்னிக்கவும்.

உயர்நிலைப் பள்ளியின் கல்வி நிலை பற்றி மறுபடியும் காணலாம். ஆறாம் வகுப்பு முதல் பள்ளி. இறுதிவரை ஐந்து பாடங்களே பயிற்றுவிக்கப் பெற்றன. தமிழ், ஆங்கிலம், கணக்கு, வரலாறு, புவிஇயல் ஆகியவையே அவை. அவை அனைத்தும் வகுப்பின் தரத்துக்கு ஏற்ப, படிப்படியாக உயர்ந்து வந்து பயிலும் மாணவர்களுக்குத் தெளிவினை உண்டாக்கும். உதாரணமாக நிலநூலை எடுத்துக் கொள்வோம். கீழே ஐந்தாம் வகுப்புவரை ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம் இவைபற்றி இரண்டாம் வகுப்பிலிருந்து பயின்று வந்த மாணவன் ஆறாம் வகுப்பு வந்ததும் இந்தியாவைப்பற்றி முற்றும் தெளிவுறப் பயில்வான். பின் ஏழாம் வகுப்பில் ஆசியாவைப்பற்றித் தெளிவாகவும் அதைச் சார்ந்த சில ஐரோப்பிய நாடுகள் பற்றிச் சுருக்கமாகவும் அறிவான். பின் 8ஆம் வகுப்பு வரும்போது பிற கண்டங்கள் கடல்கள் பற்றி அறியும் வகையில் பாடநூல்கள் அமையும். ஒன்பதாம் வகுப்பில் (IV Form) உலக முழுவதும் பற்றிய நில வரலாற்றை அறிந்து அத்துறையில் மனநிறைவு பெற்றுத் தெளிவு காண்பான். பள்ளியில் இரு மேல் வகுப்புகளிலும் இந்தப் பாடம் கிடையாது. ஒன்பதாம் வகுப்புவரை (W Form) வரலாற்றிலும் அப்படியே. எனினும் தமிழக மாணவனுக்கு எங்கோ இராசராசன் போன்ற ஓரிரு அரசர்களைப் பற்றி மட்டுமே அறிய முடியும். ஆனால் வடநாட்டு வரலாறு, ஆங்கில நாட்டு வரலாறு பற்றி அதிகமாக அறிய வாய்ப்பு இருந்தது. அதனாலேயே பாரதி நைந்து பாடினார். கணக்கிலும் அப்படியே, வகுப்பின் தரத்தினுக்கு ஏற்ப, பள்ளி இறுதி வகுப்புவரை திட்டமான பாடத்திட்டம் வகுக்கப் பெற்றிருக்கும். இம் மூன்றில் முன்னவை இரண்டும் IV பாரத்தோடு நிற்க, கணிதம் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை தொடர்ந்து (VI Form) நடைபெறும். அந்த இரு பாடங்களுக்குப் பதிலாக மாணவர் விருப்பப்படி வேறு இரு பாடங்களை விருப்பப்பாடங்களாக (Optionals) எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமும் தமிழும் வகுப்பு நிலைக்கு ஏற்ப, சிறு சிறு இலக்கியங்கள், தெளிந்த உரைநடைகள் தொடங்கி, உயர்ந்த இராமாயணம் போன்ற இலக்கியங்கள், அறிஞர் எழுதிய கட்டுரைகள் என அமைய நிற்கும். சென்ற பிரசோற்தியில் (1931) மாறுபட்ட பாதை அறுபது ஆண்டுகள் கழித்து இந்தப் பிரசோற்பத்தியில் (1991) நேரிய பாதையில் திரும்புமா?

1981ஆம் ஆண்டு வரை அந்த நிலை இருந்தது. இரு விருப்பப்பாடங்கள் அந்தப் பள்ளி வகுப்பிலேயே அக்காலத்திய மாணவர்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் மேல் இடை நிலை வகுப்புக்கு வரும்போது, தாம் பயின்ற விருப்பப் பாடங்களுக்கு ஏற்ப, மூன்று பாடங்களை-வருங்கால வாழ்வுக்கு வழி அமைக்கும் வகையில்-தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அத்தகைய பாடங்களைப் பயில்வதால், மேல் தாம் சேர இருக்கும் பொறியியல் போன்ற வகுப்புகளுக்கு அம் மாணவர் முற்றும்தகுதி உடையவராய்-நன்கு பயின்று வெற்றிபெற வாய்ப்பு உள்ளவராய்-தம் வாழ்வினை அறுதியிட்டு அமைத்துக் கொள்ளும் திறன் உடையவராய் விளங்கினார்கள்.

1931-க்குப் பிறகு அப்போது வந்த புதிய அரசு மாற்றங்களைச் செய்தது. விருப்பப் பாடம் ஒன்றாயிற்று. வேறு பல மாற்றங்களும் நிகழ்ந்தன. அன்றுதொட்டு இன்று வரையில் தமிழகக் கல்வி எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏங்கும் வகையில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. பழைய முறையில் மாநில மேற்பார்வை வகுத்து, மாவட்ட, வட்ட அளவில் கல்வியைக் கருத்துடன் கவனிக்கும் வகையில் நேரிய முறையில் ஆக்க நெறிக்கு வழிவகுப்பின் நலம் உண்டாகும் என நம்புகிறேன். விருப்பப்பாடமாக இன்று +2 எனும் இரு வகுப்பிலும் இருப்பதற்கு முன், கீழே ஒன்பதாம் வகுப்பிலேயே இந்தப் பாடங்களை மாணவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிப்பின் பயன் விளையும் எனவும் நம்புகிறேன்.

இன்று மாணவர்களுக்குத் தேவையற்ற பாடங்களும் அதற்கெனப் பாடநூல்களும் குறிப்பேடுகளும் (Work book) என்று செயலுக்கெனத் தனி நூல்களும் அதிகமாகத் திணிக்கப் பெறுகின்றன. அவற்றைச் சுமப்பதற்கும்கூட மாணவர் இயலாது வருந்துவர். மாணவர்களுக்கு முறைப்படி பாடங்களை நடத்தி, தக்க கேள்விகளுக்குப் பதில் காட்டி, அவர்களையும் காணுமாறு செய்யும் முறை அமையின் சிறந்த பயன் விளையும்.

பழங்காலத்தில் மனப்பாடம் செய்யும் மரபு இருந்தது. இது பற்றி முன்னமே நான் குறிப்பட்டேன். கீழ்வாய் இலக்கமும் வாய்பாடும் மனப்பாடம் செய்தவர்கள் எத்தகைய கணக்கினையும் மனத்திலே கணக்கிட்டு விரைந்து விடை காண்பர். அப்படியே பல்வேறு இலக்கியங்களை மனப்பாட்ம் செய்வதால் அவர்தம் பேச்சும் எழுத்தும் சிறக்க அமையும். ஆயினும் வெறும் மனப்பாடம் செய்வதில் மனித ஆற்றல் வீணாகக் கழியவேண்டுமா எனக் கற்றவரும் கருதுகின்ற ஒரு காலத்தில் நாம் நிற்கிறோம். நம்மிலும் பலகோடி மடங்கு நினைவாற்றல் உடைய கணிப்பொறிமுன் மனிதனுடைய நினைவாற்றல் தேவையற்றது என்பர். பெருக்கல் கூட்டல் போன்றவற்றிற்கு மின் அணுக் கருவிகள் வந்துள்ளமையின் வாய்பாடு மனப்பாடமும் தேவை இல்லை என்பர். இந்த வாதங்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும், இந்தப் புதிய சாதனங்களும் பொறிகலங்கி மயங்கிவிழும் நிலையில் தவறு நடப்பது போன்று மனிதனுடைய நினைவாற்றலில் தவறு உண்டாகாது என்றும் அதனாலேயே பல சாத்திரங்களும் தோத்திரங்களும் காலத்தை வென்று வாழ்கின்றன என்றும் கூறுவர். காலம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.

இன்று உயர்தர ஆரம்பப்பள்ளிகள் இல்லை என எண்ணுகிறேன். 6ஆம் வகுப்பிலிருந்தே உயர்நிலைப் பள்ளிகள் நடைபெறுகின்றன. இந்தப் பள்ளிகள் நான் மேலே கூறியபடி, தமிழ்நாட்டில் பல வகையில், பல பாட முறைகளில் நடைபெறுகின்றன. இவை நிறுத்தப்பெறல் வேண்டும். மாநிலத்தொடு இருந்த கல்வியினை மத்திய அரசும் பங்கு போட்டுக்கொண்டு, அதன் பள்ளிகளை ஊர்தொறும் நிறுவி அவற்றின் ஆசிரியர்களுக்கு நிறையச் சம்பளமும் சலுகைகளும் தந்து, மாநிலப் பள்ளி ஆசிரியர்களையும் தூண்டிவிடுகிறது. தமிழக அரசும் மெட்ரிகுலேஷன் என்ற அமைப்பில் முழுக்க ஆங்கிலப்பள்ளி அமைத்து, அதில் பயில்வாரைத் தனிச் சாதியாக வளர்த்து வருகிறது. எப்போதோ வாழ்ந்தி ஆங்கிலேயர் காலத்திய ஆங்கிலோ இந்தியருக்கென் அமைந்த பள்ளிகள், இன்றும் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் நின்றதோடு, பொதுக் கல்வியில் சார அவர்கள் வந்துவிட்டனர்; ஆனாலும், நடைபெறுகின்றன. அதன் பாடத்திட்டமும் குறைவு-தமிழன் தரம் மிகத் தாழ்வு, அப்படியே கீழ்த்திசைப் (Oriental) பள்ளிகள் உள்ளன. இவ்வாறு ஒரே நாட்டில் பலவகையான ஆரம்பப் பள்ளிகள் இயங்குமானால் எப்படி நாட்டு ஒற்றுமை உண்டாகும்? இவர்கள் அனைவரும் மேல் வகுப்பிற்கு வந்து ஒரே முறைக் கல்வியைக் கற்கத் தொடங்குவார்களானால் எப்படி ஒரே சீராக அவர்கள் பயிலமுடியும் இதுபற்றி முன்னமே வேறு கூறியுள்ளமையால் ஈண்டு அதிகம் எழுதத் தேவை இல்லை என இத்துடன் அமைகின்றேன்.

இன்றைய அரசாங்கத்தின் வழியே தமிழ், தமிழ்நாட்டில் விரைவில் கட்டாயமாக்கப்பெறும் என அறிய மகிழ்ச்சி பிறக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ், தமிழ்நாட்டில் கட்டாயமாக இருந்ததை மேலே முன்னரே காட்டியுள்ளேன். இங்கே மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது. மாராத்திய நாட்டில் வாழும் தமிழர் தமிழைக் கட்டாயம் படிக்கு நிலையில்-ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியினைக் கட்டாயம் பயிலும் நிலையில் ஒரு திட்டம் இருந்தது. நான் தமிழின் சிறப்பு நிலைத் தேர்வாளனாகப் பதினைந்தாண்டுகள் அங்கே பணிபுரிந்தேன். (தற்போதும் அதே நிலை நீடிக்கிறது என எண்ணுகிறேன்) தமிழை மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினையும் மேல்மட்டம் (Higher level) கீழ்மட்டம் (Lower leevl) என இரண்டாகப் பிரித்துள்ளனர். தாய்மொழியை மேல்மட்டமாகக் கொண்டவர் மற்றொன்றினைக் கீழ்மட்ட நிலையில் கொள்ளலாம். இரண்டிற்கும் பாட அமைப்பில் வேறுபாடு உள்ளது. கீழ்மட்டம் சற்றே எளிதாகப் பயிலும் வாய்ப்பு உடையது. இந்த முறையினால் மராத்தியர் மராத்தியினைக் கட்டாயமாக மேல்மட்ட்த்தில் படிப்பதுடன் மற்றொரு மொழியினைக் கீழ்மட்டத்தில் கட்டாயம் படிக்கவேண்டும். அங்கே உள்ள தமிழர்கள் தமிழை மேல்மட்டத்தில் கற்றால் மராத்தியினைக் கீழ்மட்டத்தில் பயிலலாம். அன்றி வேறு மொழியினை மேல்மட்டமாகக் கொண்டாலும் தமிழைக் கீழ்மட்டத்திலாவது பயிலவேண்டும். இவ்வாறு அங்குள்ள தமிழர் தமிழைக் கட்டாயம் பயில வகை இருக்கும்போது, தமிழநாட்டில் தமிழ் வாசனை இல்லாமலேயே எல்லாப் படிப்பினையும் படிக்கலாம் என்பது நாட்டார் நகை செய்யத் தக்கதன்றோ! தமிழ் மட்டுமன்றி மராத்தி நாட்டிலுள்ள தெலுங்கர்,கன்னடியர், குஜராத்தியர் ஆகியோருக்கும் இந்த நிலை உண்டு. கூடவே ஆங்கிலமும், இந்தியும் இவ்வாறே பகுக்கப்பெற்று உள்ளன என எண்ணுகிறேன். (திட்டமாக நினைவில்லை) எனவே தமிழக அரசு இந்த வகுப்புகள் (6-10) ஏதேனும் மூன்று வகுப்புகளிலோ அன்றி ஐந்து வகுப்புகளிலோ தமிழைக் கட்டாயமாக்கி விரைவில் செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இன்னும் பல மாற்றங்கள் இந்த வகுப்புகளில் செய்ய வேண்டியுள்ளன. அவற்றை அவ்வத்துறையினர் ஆராய்ந்து, தெளிந்து அரசுடன் கலந்து முடிவெடுத்து ஆவன காணலாம். என் சில நூல்களில் இவை பற்றி முன்னரே குறித்துள்ளேன். நான் அங்கம்வகித்த சில குழுக்களிடையேயும் அவை பற்றிக் கூறியிருக்கிறேன். இன்று அத்துறையினைப் போற்றும் கல்வி அமைச்சர், செயலர் போன்றவர்களும் முதல்வர், நிதி அமைச்சர் போன்றவர்களும் என்னைக் காட்டிலும் கல்வித் துறையில்-ஆரம்ப முதல் பல்கலைக்கழகம் வரையில் பலப்பல சீர்திருத்தங்களை-மாற்றங்களைச் செய்யத் தீவிரமாகச் செயல்திட்டங்கள் தீட்டி வருகின்றனர் என நாளிதழ்கள் வழி அறிகிறேன். எனவே தற்போது இந்த அளவோடு இது பற்றி அமையும் என எண்ணி நிற்கின்றேன்.

கல்வியில் மொழி பற்றிய சர்ச்சையே வளாந்துகொண்டு இருக்கிறது. பல மொழி பேசும் நாட்டில் ஒரு மொழியினைக் கட்டாய்மாகத் திணிப்பது தவறுதான் என எல்லாரும் உணருகின்றனர். அரசியல் சாசனத்திலே தலைவர் தம் தனிவாக்கினால்-ஒருவாக்கு அதிகமாகப் பெற்றமையால் இந்தி நாட்டு மொழியாக இடம்பெற்றது. ஆயினும் அதைப் பரப்ப வடநாட்டு இந்தி பேசும் மக்களினமும் அவரைச் சார்ந்த மத்திய அரசும் பெருமுயற்சிகளை அன்று முதல் மேற்கொண்டு வருகின்றன.

நாட்டில், மும்மொழித்திட்டம் 1956இல் புகுத்தப் பெற்றது. ஆனால் மும்மொழித் திட்டத்தில் வடமொழியாகிய சமஸ்கிருதம் இடம் பெறவில்லை என்பர். மத்தியப் பள்ளிகளிலும் பிறவிடங்களிலும் மும்மொழியில் ஒருமொழியாக இது அமைகிறது. வடமொழியை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை. ஆயினும் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயம் இல்லாதபோது வேறு எந்த மொழியும் கட்டாயம் ஆக்கப் பெறுவது தவறு என்பதை இன்னும் சிலர் உணராமையினையே எண்ண வேண்டியுள்ளது. நாட்டு ஒற்றுமைக்காக அமைய வேண்டிய மொழி நாட்டையே துண்டாக்குமோ என்று அஞ்ச வேண்டிய் நிலையில் நாடும் நாமும் சென்றுகொண்டிருக்கிறோம். மும்மொழித் திட்டம் கொண்டுவந்தபோது தென்னாட்டில் உள்ளவர்கள், வடநாட்டு இந்தியினைப் பயில, வடநாட்டில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு தென் இந்திய மொழியினைப் பயில்வார்கள் என்ற ஏற்பாடு இருந்தது. ஆனால் தமிழ்நாடு நீங்க, எல்லாத் தென்மாநிலங்களும் இந்தியைக் கட்டாயமாக வளர்த்துவர, வடமாநிலங்களில் தென்னாட்டு மொழி ஒன்று கட்டாயமாக்கப் பெறவில்லையே வடமாநிலங்களில் அரசாங்க அலுவலகங்களில் அவரவர் தாய்மொழி-இந்திதான் உபயோகிக்கப்படும் என்று சட்டம் செய்ய அதை ஏற்றுக்கொள்ளும் சிலர் தமிழ்நாட்டில் தமிழ் அரசாங்க மொழியாகும் என்றால் முகம் சுளிக்கின்றனர். தாம் வாழும் நாட்டு மொழி கற்கவில்லை என்றால் அவ்ர்களை என்னவென்பது. ‘தாய்க் கொலைச் சால்புடைத் தென்பாரும் உண்டு’ என்று இவர்களைப் பற்றித்தான் தமிழ்ப் புலவன் கூறினானோ என எண்ண வேண்டியுள்ளது. வேலை வாய்ப்புக்கு வெளியே செல்லத் தமிழ் பயன்படாது எனத் தமிழைக் கட்டாயமாக்கும் நிலையில் சிலர் பேசுவதும் கேட்கிறது. அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை விட்டே போகப்போகிறார்களா? அன்றி, பிறமாநிலங்களிலெல்லாம் தமிழர்களை ‘வருக’ என வரவேற்று நிற்கின்றனரா? மத்திய அரசிலும் பிறமாநிலங்களிலும் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்த தமிழர்களில், இன்று நான்கில் ஒரு பகுதிகூட இல்லை என்று சொல்லலாம். 'மண்ணின் மைந்தருக்கே வாழ்வு’ என்ற சொல்லே நாள்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகமாக வளர்கின்றதே. ஒரே நாடு இந்தியா என்ற கொள்கைக்கே மூடு விழாவினைச் செய்வது போல் சில மாநிலங்கள் செயல்படுவதையும் அச்செயல்களை மத்திய அரசாங்கம் ஆதரிப்பதையும் அநேகத் தலைவர்களே கூறி வருகிறார்களே: இந்த நிலையில் இந்தியைக் கற்று எந்த மாநிலத்தில் வாழப் போகிறார்கள்: ‘செல் விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருக்கும்’ தமிழர்களைப் போன்று வேறு யாரும் ஏமாளிகளல்லர். எனவே அந்தந்த மாநிலத்தில் அவ்வம்மொழி முதன்மொழியாகக் கட்டாயம் கற்க வழிசெய்து, பிறகு மூன்று என்ன நான்கு மொழிகளைக்கூடக் கற்கட்டுமே. கன்னட நாட்டிலே தமிழர் தமிழை நான்காவது மொழியாகத் தான் கற்கின்றனர்-கன்னடம் முதல் மொழி பின் இந்தி, ஆங்கிலம். அந்த மாநிலத்தில் இந்த நிலையினை ஏற்றுக் கொள்பவர் தமிழ்நாட்டில் மட்டும் தடை சொல்லுவானேன்? எண்ணிப் பார்க்க வேண்டும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பெற்றபோது பெருநகரங்களிலோ எல்லைகளிலோ உள்ள வேற்றுமொழி பேசும் சிறுபான்மையோருக்கு வழி செய்யப்பெற்றுள்ளது. நான் முன்னமே இது பற்றியும் அவர்கள் தாய்மொழி கற்று திரு. அவினாசிலிங்கம் காலத்தில் இருந்த வகையினையும் விளக்கியுள்ளேன். இரு மொழித்திட்டத்திலேயும் அந்தச் சிறுபான்மையோருக்குத் தாய் மொழி கற்க வழி உண்டே, நூற்றுக்குப் பத்துப் பேருக்கு மேலிருந்தால் அவர்தம் தாய் மொழி கற்றுத்தர வேண்டுமெனவும் உயர்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பில் பத்துப் பேர் அல்லது பள்ளியில் 40 பேர் இருந்தால் அவர்தம் தாய் மொழி கற்றுத் தரவேண்டும் என்றும் சாசனம் உள்ளதே. இதைச் சில மாநிலங்கள் பின்பற்றவில்லை. தமிழகம் இதை அதிகமாகவே பின்பற்றுகின்றதே. சிறுபான்மையோர் மொழி மூன்றாவது மொழி. ஆனால் இங்கு வடமொழியோ, பிரஞ்சோ, லத்தினோ தானே இந்தி ஆங்கிலத்தோடுதானே மூன்றாவது மொழியாகிறது. தமிழ் இம்மொழித் திட்டத்திலும் இடம் பெறவில்லை. இதை எந்தச் சமூகமாவது ஏற்றுக்கொள்ளுமா. ‘எதுவரினும் வருக அல்லது எது போயினும் போக’ என உறங்கும்.தமிழகம் தான் ஒருவேளை ஏற்றுக்கொள்ளும். எனவே மொழிக் கொள்கையினை அரசியல் சாசனப்படி-மேலே காட்டிய வரையில் இரு மொழிக் கொள்கையாயினும் -மும்மொழிக் கொள்கையாயினும் ஏற்றுக்கொண்டு எல்லா மாநிலங்களும் பின்பற்றினால் நாட்டில் ஒற்றுமை வளரும். நாடு நாடாகும். அவ்வம் மாநில மொழி மூன்றில் ஒன்றோ இரண்டில் ஒன்றோ கட்டாயம் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் அண்மையில் எடுத்த மக்கள்தொகை கண்க்குப்படி வேற்று மொழியினர் 14.65 % உள்ளனர் என அறிகிறோம். ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கு, மொழி அடிப்படையில் எடுக்கப் பெறவில்லை. 1931க்குப் பிறகு எந்த மக்கள் தொகை கணக்கும் சரி வர மொழி அடிப்படையில் எடுக்கப் பெறவில்லை என்பதற்கு அதன் படிகளே சான்று பகரும் என்பர். அப்படியே 14.65 % வேற்று மொழியாளர் என்றாலும் இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, இந்தி, உருது ஆகிய மொழிகள் அனைத்தும் அடங்குமல்லவா. அப்படி இருந்தும் தமிழக அரசு இத்தனை மொழிக்கும் (10% மேல் இருக்கும்நிலையில்) சிறுபான்மையோர் நிலையில் வைத்து இடம் தருகின்றதல்லவா? மராத்தி நாட்டிலும் இந்த வகைபோற்றபட்டுத் தமிழுக்கு இடம் தந்துள்ளது. பல்கலைக் கழக நிலையில் பம்பாய் பல்கலைக் கழகத்தில் தமிழ் இன்றேனும் பூனா, நாகபுரி ஆகிய பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது. ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா, வங்காளம், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள சில பல்கலைக் கழகங்களிலும் தமிழ் உள்ளமை போற்றக் கூடியது. அவற்றுக்கெனத் தமிழக அரசு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மானியம் தந்து வருகிறதென அறிகிறேன். தற்போதும் அந்த நிலை நீடிக்கும் என நம்புகிறேன்.

ஒரு சமயம் நாட்டு ஒருமை மாநாட்டிற்குத் தலைமை வகிக்க (1967-68 என எண்ணுகிறேன்) நான் நாகபுரிக்குச் சென்றிருந்தேன். அம்மாநாட்டைத் திறந்து வைக்க மராட் டிய நாட்டுக் கல்வி அமைச்சர் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘தங்கள் மாநிலத்தில் பூனா, நாகபுரி முதலிய இடங்களில் தமிழ் உள்ளது. ஆனால் பம்பாயில் இல்லையே. அதை வைக்க ஏற்பாடு செய்யலாகாதா’ எனக் கேட்டேன். அவர் உடனே உண்மைதான்; செய்கிறேன்; ஆனால் ஒன்று, எங்கள் மராட்டியர் உங்கள் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டு, உங்கள் நலம் போற்றினார்கள். தஞ்சை நூல் நிலையத்தில் இன்றும் பல மராட்டிய ஏடுகள் உள்ளன. பல மராட்டியர் வாழ்கின்றனர். அப்படி இருந்தும் உங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மராத்தி மொழி பாடமாக வைக்கப் பெறவில்லையே. அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்வீர்களாயின் நான் உடனே பம்பாய்ப் பல்கலைக் கழகத்தில் தமிழை வைக்க ஏற்பாடு செய்கிறேன், என்றார். அவர் கூற்றும் உண்மையாகப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் அண்ணா முதல் அமைச்சராக இருந்தார். நான் சென்னை வந்தபோது அவர் உதகையில் இருந்தார். 'கோடையில் நானும் சில நாட்கள் அங்கே செல்வது வழக்கமாதலால் அங்கே சென்று, அண்ணா தங்கியிருந்த மாளிகையில் அவரைக் கண்டு பேசினேன். (அண்ணாவுக்கும் எனக்கும் இளமை முதல் இருந்த தொடர்பினை என் நூல் ‘ஓங்குக உலகம்’ என்பதில் விளக்கமாக எழுதியிருக்கிறேன்) அவர்களும் ‘பம்பாய் அமைச்சர் சொன்னது சரியே’ என்றும் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின்போது (Budget) நினைவூட்டுங்கள்: மராத்திக்கு ஏற்பர்டு செய்துவிடலாம் என்றும் சொன்னார்கள். நானும் பம்பாய் பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம் பெறும் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த அமைச்சருக்குக் கடிதமும் எழுதினேன். ஆனால் நாட்டின் துர்அதிர்ஷ்டம் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டுக்கு முன் அவர் நோய்வாய்ப்பட்டார். பின் எழுந்திருக்கவே இல்லை. அவர்கள் இருந்திருந்தால் இன்னும் பல வட இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இடம் பெற்றிருக்கும். தமிழ் தமிழ்நாட்டிலும் தனக்கு உரிய இடத்தை பெற்றிருக்கும். நாடு கொடுத்து வைக்கவில்லை. இன்று மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் காலத்தில் தந்த மான்யங்களுடனேயே பல பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது என எண்ணுகிறேன். பிறகு புதிதாக வடநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு மானியம் தந்து தமிழுக்கு இடம் தேடினார்களா என்பது எனக்குக் தெரியவில்லை.

மொழி பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஆனால் இந்நூல் கல்வி பற்றியது. மொழி, கல்விக்கு முக்கியம் என்றாலும் இந்த அளவோடு இதை விடுத்துக் கல்வியின் பிற துறைகளைப் பற்றி எண்ணிக் காண்போம்.



5. ஆரம்பக் கல்வி

* * *

இந்தியா விடுதலை பெற்றபின் ஆய்ந்து எழுதப்பெற்ற அரசியல் சாசனத்தே சாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வு எதையும் கருதாது எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையில் கட்டாயக் கல்வி தருதல் வேண்டும் எனவும், இச்செயல், சாசனம் செயலுக்கு வந்த ஆண்டிலிருந்து (1950) பத்து ஆண்டுகளுக்குள் நிறைவேற வேண்டும் எனவும் குறிக்கப்பெற்றுள்ளது (விதிகள் 89, 45, 46, 47). ஆயினும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் எந்த அளவு இது நிறைவேற்றப் பெற்றுள்ளது என்பதை நாடும் உலகமும் நன்கு அறியும். 1981ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 6 வயதுக்கு உட்பட்டோர் 14 கோடி (17%) எனவும் அதில் வ்றுமை நிலையில் உள்ளவர் 5.6 கோடி (40 %) எனவும் அறிகிறோம். இதில் பல குழந்தைகள் பள்ளியினைப் பார்த்ததும் கிடையாது. இக்குழந்தைகளுள் பள்ளியில் சேர்பவர்களும் இடையில் 8, 10 வயதுகளில் பள்ளியினை விட்டு வெளியேறுகின்றனர்-நின்று விடுகின்றனர். 1964-66இல் கல்வி வளர்ச்சிக்காக அமைத்த குழு இளங்குழந்தைகள் கல்வியை நன்கு கவனிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் அதுவும் போற்றப் பெறவில்லை. 1986ஆம் ஆண்டின் கணக்குப்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (20%) நூற்றுக்கு இருபது பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. 11.7 கோடி குழந்தைகளுக்கு 1 கி. மீ. நடந்து சென்று படிக்க விரும்பினாலும் அந்த வகையில் பள்ளிகள் இல்லை. பாதிக்கு மேற்பட்ட (50%) பெண்கள் சேர்ந்து இடையில் விட்டு விடுகின்றனர். சென்ற ஆண்டில் எடுத்த கணக்கின்படி கீழே கண்ட வகையில் இளம் பெண்கள் பள்ளியில் சேர்கின்றனர். இந்திய அளவில் ⁠ I-V

41.16%

⁠ VI-VIII

35.45%

கிராம அளவில் 39.89% 32.05% இவையாவும் இந்திய அரசாங்கம் தந்த கணக்குகளேயாகும்.

நம் நாட்டில் இந்த அவல நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் இன்றும் பல ஊர்களில் பள்ளிக் கூடங்கள் இல்லை. இருக்கும் பள்ளிகளுக்கும் கட்டடம் இல்லை. நமக்கு ஒன்றும், இன்று மேடைமேலோ-சட்டமன்றத்திலோ பேசுவதுபோன்று, பெரிய வானளாவிய கட்டடங்கள் தேவை இல்லை. கடந்த அறுபது ஆண்டுகளுக்குமுன் (20-10-1931) அண்ணல் காந்தி அடிகளார். இலண்டன், சாதம் மாளிகையில் (Chatham House) இக்கருத்தினை நன்கு வெளியிட்டுக் காட்டியுள்ளார். இந்திய நாட்டுக் குழத்தைகள் அத்தகைய ஆடம்பரமான கல்வியை விரும்பார் என்றும் அந்தமுறை, கல்வியை வளர்ப்பதைக் காட்டிலும் குறைத்தேவிடும் என்றும் கூறி, எளிய முறையில் பழங்காலக் குருகுல வாசமே நம் நாட்டுக்கு ஏற்றதெனக் காட்டியுள்ளார். (பக். 133.-Towards an Emlightend and Humane Society) இந்திய அரசாங்கம் சென்ற ஆண்டு அமைத்த இராமமூர்த்தி குழுவினர் தொடக்கக் கல்வி மட்டுமின்றி எல்லா நிலையிலும் கல்வி எப்படி அமையவேண்டும்-வளர வேண்டும்-எந்த நிலையில் இன்று கல்வி நாட்டில் இருக்கிறது. இதைக் களைந்து நலம்காண வழிகள் யாவை என்பனவற்றை நன்கு ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதையாவது நாட்டு அரசு செயல்படுத்துமா என்பதை இனி தான் காணவேண்டும்.

மத்திய அரசும் மாநில அரசும மக்கள் மன்றத்திலும் சட்டசபையிலும் அரசாங்கம் கல்விக்காக ஆண்டுதோறும் ஆண்டுக்கு ஆண்டு பலகோடிகள் அதிகமாகச் செலவு செய்தும், கல்வி வளரவில்லையே எனக் கனன்று அறிக்கை வெளியிடுகின்றன. ஆயினும் செயல்பாட்டில் அந்த .வளர்ச்சிக்கு உரிய முயற்சி இல்லையே என வருந்த வேண்டி உள்ளது.

எல்லா ஊர்களிலும் பள்ளியும் நல்லாசிரியரும் இருக்க வேண்டுமல்லவா! அண்ணல் காந்தி அடிகளார் அன்று அதைத்தானே வலியுறுத்தினார். சுதந்திரம் பெற்றபின் எத்தனையோ வகையில் முன்னேற்றம் கண்டுள்ளோம் எனப் பேசுபவர்கள் மாந்தர் தம் ‘கண்’ நிலைகெடுவதைக் காணவில்லையே! ஒரு நாட்டின் எல்லா வளமும் கல்வியில்தான் உள்ளது என்பதை, அதைக் கண் எனக் காட்டியே வள்ளுவரும் ஒளவையும் பிறரும் கூறியுள்ளனரே! அத்தகைய கண் போன்ற கல்வி நாட்டில் நன்கு வளர்ச்சி பெறவில்லை. எங்கோ தென்கோடியில் ஒரு மாநிலம்-கேரளம் நூற்றுக்கு நூறு படித்தவர்கள் உளர் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளுகிறது. (அதில் ஒருவேளை 100க்கு 5 வீதம் கல்வி இல்லாமல் இருக்கலாம்) ஆனால் ஒவ்வொரு மாநிலமும் அந்த வகையில் முன்னேற வேண்டாமா? முன்னேறுகிறதா? நாட்டைத் தொழில் மயமாக்குவோம் என்பதைக் காட்டிலும் கல்வி மயமாக்குவோம் என்று கூறவேண்டாமா? உடன் தக்க நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முனைகிறது என நம்பிக்கை எழுகிறது

ஊர்தோறும் பள்ளிகள் இன்றேனும் உள்ள பள்ளிகளாவது ஒழுங்காக நடைபெறுகிறதா? இல்லையே. பல ஓராசிரியர் பள்ளிகள்-அந்த ஆசிரியர் வந்தால் உண்டு - இன்றேல் பள்ளி இல்லை. இரண்டாசிரியர் பள்ளிகளும் பல, ஐந்து வகுப்புகளை ஓர் ஆசிரியரோ இரு ஆசிரியர்களோ எப்படி நடத்த முடியும்? அவர்களும் தவறாது வருவதில்லை. பின், பிள்ளைகள் எவ்வாறு கல்வி கற்று முன்னேறுவர்? 1986ஆம் ஆண்டில் இந்தியாவில் ஓராசிரியர் பள்ளி, நாட்டுப்புறம் 31.27% நகர்ப்புறம் 6.29- இரண்டாசிரியர் பள்ளி, நாட்டுப் புறம் 34.07%. நகர்ப்புறம் 11.92- கிராமப்புறத்தில் மூன்றில் ஒரு பகுதி ஒரே ஆசிரியர் பள்ளிகளே என்று அரசாங்கக் கணக்கே சொல்லுகிறது. இந்த நிலையில் கல்வி வளருவ

தெங்கே? மேலும் ஓர் ஆசிரியருக்கு 50, அல்லது 55 மாணவர். அதிலும் இரண்டு, மூன்று, ஐந்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பின் எந்த வகையில் அவர்கள் கற்றுத் தர முடியும்?

இப்போது 1995க்குள் பதினான்கு வயதுக்கு உட்பட்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி தரப்பெறும் என்கின்றனர். நம் சட்ட சபையில்கூட இந்த ஆண்டு இத்தகைய நல்ல கொள்கை பேசப்பெற்றது. ஆனால் கீழ் உள்ளவர்கள் செயலாற்ற வேண்டுமே அந்தந்த ஊரில் படித்த பெரியவர்களைக் கொண்டு, குறைந்த செலவில் பள்ளிகள் அமைத்து, பிள்ளைகளை வகுப்பு வாரியாகப் பிரித்துப் படிக்க வைத்தால் பயன் விளையும். வீதிதோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி பாடினான். இன்று நகரங்கள்-பெரும் கிராமங்களில் வீதிதோறும் இரண்டொரு பள்ளி வந்துள்ள நிலை காண்கிறோம். ஆனால் அங்கே தமிழுக்கு இடமில்லை. ஆணை செலுத்துவது ஆங்கிலம். அப்பள்ளிகளும் வாணிப வகையில் செயல்படுகின்றன. இந்த அவல நிலையை அரசாங்கம் போக்க வேண்ட்ாமா! இதற்குக் காரணம் நாமே, ஆம் பாரதி

'மெல்லத் தமிழ் இனிச்சாகும்-அந்த

மேற்கு மொழிகள் புவியிசை ஓங்கும்’

என்று 'கூறத் தகாதவன் கூறியதாகத்' தமிழன்னை வாய்மொழியாகவே காட்டுவர். இன்று:இந்த நிலையினைத் தானே காண்கிறோம். மேலே ஆறாம் வகுப்பிலோ வேறு வகுப்பிலோ ஆங்கிலம் ஒரு மொழியாக ஆங்கிலேயர் காலத்திலே இருந்த நிலைமாறி-இன்று சுதந்திரம் பெற்ற நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து, அந்த ஆங்கிலமே வீட்டு மொழியாக-வீதியில் பேசும் மொழியாக-விதி தோறும் உள்ள பள்ளி மொழியாக இயங்குகிறது. இதில் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது என்பர். வெளி நாட்டார் ஒருவர் இந்தியாவைக் காண வந்தால், 'இங்கே

தெற்கே ஒருமாநிலம் ஆங்கிலத்தினைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளது எனக் கேலி செய்ய மாட்டாரா! பாரதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினோம். ஆனால் அவன் சொல்லை ஏற்காது, இளங்குழந்தைகளை-மழலைகளை மாற்று மொழி வழியே வாழ வழிவகுக்கலாமா!

கடந்த இருபது ஆண்டுகளில் இந்நிலை மிகவும் கேவலமாகி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதிலும் பிள்ளைகள் திறம் பெற்றார்களா என்றால் இல்லை. பழைய காலத்தில் வெள்ளையர் வீட்டில் வேலை செய்பவர்-பட்லர் இங்கிலிஷ் பேசுவார் என்பர் அதுபோல வெறும் பேச்சிலே மட்டும்தான் அந்த ஆங்கிலமொழி. ஆழ்ந்த அறிவிலோ எழுத்திலோ-படிப்பிலோ அந்தப் படிப்பின் நிலை இல்லை. ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவரிடம் கார்லைல் (Carlyle) என்பாரைப் பற்றித் தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் தெரியாது என்று தலை ஆட்டினர். சரி கிரே (Gray) என்பாரைப் பற்றித் தெரியுமா என்றேன், பதில் இல்லை. ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்டுஸ்மித் போன்ற பழம்பெரும் ஆசிரியர்களைப் பற்றியோ H. G. வெல்ஸ் அல்லது பர்னாட்ஷா என்னும் அண்மையில் வாழ்ந்து வாழ்விலக்கியம் பாடியவரைப் பற்றியோ அறியா நிலைதான் காண்கிறது. அவர்கள் எழுதும் எழுத்திலோ ஒரு வரிக்கு இருபிழைகள் காணலாம். இப்படித் தான் பலர் உள்ளனர். சிலர் உண்மையிலே வல்லவராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலார் கற்றும் கல்வாதார். அவர்களிடம்தானே மாணவர்கள் பயில்கின்றார்கள். பெரும்பாலும் அத்தகையவர்தாமே இங்கே ஆசிரியர் பதவிக்கு வருகிறார்கள். சிலர் உழைப்பின் பயனால் சிறிதளவு முன்னேறுகிறார்கள் என்றாலும் பலர் எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர். எனவே தமிழ்க் கல்வியோ-பிற பாடங்களோ அன்றி ஆங்கிலக் கல்வியும். இத்தன்ை ஆரவாரங்களுக்கிடையில் நன்கு வளரவில்லை.

க.-6

⁠மன்னிக்கவும் எங்கோ சென்றுவிட்டேன். ஊர்தோறும் -தெரு தோறும் அந்தந்தக் கிராமத்தில் கற்றவர்களைக் கொண்டு-அவர்களுக்குச் சிறிதளவு ஊக்கத்தொகை கொடுத்து பிள்ளைகளுக்குக் கல்வி தரச் சொன்னால் பயன் விளையும் என நம்புகிறேன். நான் என் சிறுவயதில்-ஊர் பெரியதாக இருந்தாலும், அந்தக் காலத்தில் 1920-க்கு முன் அரசாங்கப் பள்ளி இல்லாத காரணத்தால் தனிப்பட்ட ஒர் ஆசிரியரிடம் தான் பயின்றேன். பின் மூன்றாவது வகுப்பு வந்தபோது பள்ளிக்கூடம் வந்தது. அதுவும் காந்தி அடிகள் கூறியது போன்று, எளிய ஒலைவேய்ந்த கூரைக் கட்டடம்-மண்சுவர் -மரச்சன்னல்தான். எனினும் அன்று ஆசிரியர்கள் நன்கு பிள்ளைகளுக்குக் கல்வி மட்டுமின்றி, கலை, சமூகவியல் போன்றவற்றையும் கற்றுத்தந்தனர். என் ஊரில் ஐந்தாம் வகுப்பு பயின்றபோது அல்லி அர்ச்சுனா என்ற நாடகத்தில் நான் கிருஷ்ணனாக நடித்தது மட்டுமின்றி, அன்று பாடிய பாடல்களும் அப்படியே இன்றும் நினைவில் உள்ளன. எனவே ஊர்தொறும் பள்ளி அமைப்பதில்-அதிலும் குறைந்த செலவில் அமைப்பதில் அதிக கடினம் இல்லை. பழங்காலத்தில் இதைத் திண்ணைப் பள்ளிக்கூடம் என்பார்கள். ஆம்! அப்பள்ளிகளில் அவ்வூர்ப் பிள்ளைகள் அனைவருமே ஐந்தாம் வகுப்பு வரையில் நன்கு படிப்பார்கள். பின் சிலர் மேல் வகுப்பில் சேரப் பேரூர்களுக்கும் நகரங்களுக்கும் செல்ல, சிலர், ஊரில் பெற்றோருடன் தொழில் செய்வர். எப்படியும் ஐந்தாம் வகுப்பு வரை அனைவரும்-பெரும்பாலும் 100-க்கு 80 பேரவது படித்திருப்பர். வேலைக்குப் போகும் பிள்ளைகளுக்கும் நான் முன்னரே சுட்டியபடி விடியற்காலை 5மணிக்கு முறையம் சொல்லும் வகையில் ஆத்திசூடி தொடங்கி சதகங்கள் வரையிலும் வாய்பாடுகளில் கீழ்வாய் இலக்கம் வரையிலும் கற்றுக்கொடுப்பார்கள். அதனால்தான் அந்த நாளில் எங்கோ ஓரிரு இட்ங்கள் தவிர்த்து, எல்லா இடங்களிலும் ஊரில் ஒற்றுமையும் எந்த வகையிலும் வேறுபாடு காண முடியாத ஒருமைப்பாடும் நிலவிய தன்மையினைக் காண முடிந்தது. வரலாற்று. அடிப்படையில் நெடுங்காலத்துக்கு

முன் சென்றாலும்-சங்க காலத்திலோ பல்லவர் காலத்திலோ இத்தகைய ஊர் ஒற்றுமையினைக் காணமுடிகிறது. பின்னால் யார் யாரோ இங்கே வர, பிற்காலச் சோழர்காலத்துச் சாதிப் பிரிவுகள்-சமயப் பேர்ராட்டங்கள் பல தோன்றின. இன்றோ பாரதிதாசன் கூறியப்படி வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்' என்றால்-சூழ்கின்ற பேதம் அந்தத் தொகை இருக்கும். இந்த அவல நிலையை இன்றைய அரசாங்கம் எப்படியும் போக்கித்தான் ஆகவேண்டும்.

பல நாடுகளைச் சுற்றிவந்த நான் இந்தக் கல்வி முறையினைப் போற்றும் அமெரிக்க நாட்டினைக் கண்டு வியந்தேன். மேலே நாம் கண்ட வகையில் இன்றேனும் ஊரின் ஒவ்வொரு பகுதியும்-வாஷிங்டன், சிகாகோ உட்பட்ட பெரிய நகரங்களிலும் அந்தந்த எல்லையில் வாழ்கின்றவர்களே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுகின்றனர். தெரு அமைப்பு, சுற்றுப்புறத் தூய்மை, கல்வி, நலத்துறை ஆகியவற்றை அவர்களே ஒரு குழு அமைத்து நன்கு பாராமரித்துக் கொள்ளுகின்றனர். அந்தந்த எல்லையில் அமைந்த வீட்டுவரி முதலிய விஷயங்களையும் அவர்களே வசூலித்துக் கொள்ளுகின்றனர். இந்த முறையினால் அங்கங்கே கல்வி நிலையங்கள் தக்க வகையில் செயல்படுகின்றன. இதுபற்றி என்னுடைய நூலில் (ஏழு - நாடுகளில் எழுபது நாட்கள்) குறித்துள்ளேன். இந்த நிலை, தமிழ்நாட்டில் இருந்த பழைய வட்ட, மாவட்டக் கழகங்களை எனக்கு நினைவூட்டின. ஒரு சிறு எல்லைக்கு ஒர் உறுப்பினர் அமைய-சுமார் 20 அல்லது 40 ஊர்களுக்கு -20 அல்லது 30 கிலோ மீட்டர். விட்டத்தில் அமைந்த ஊர்களுக்கு அவர் அடிக்கடி சென்று, ஆவன காண, ஊர்மக்களும் அவருடன் கூடித் தமக்கு வேண்டிய நலன்களைப் பெற்றனர். பின் பஞ்சாயத்து ஆட்சி என்ற பெயரில் பல மாற்றங்கள்.உண்டானபோதிலும் போதிய வளர்ச்சி இல்ல்ை. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேனாதலின் இங்கே அதிகம் எழுதத்தேவை இல்லை.

⁠இனி ஆரம்பப் பள்ளிகளில் அமையும் பாடங்களைப் பற்றிச் சிறிது காண்போம். தற்போது மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிக அதிக மன சுமைகள் ஏற்றப்பெறுகின்றன. அரசாங்கப் பள்ளிகளிலும் பாடத்திட்டம் தேவையான அளவுக்கு அதிகமாகவே உள்ளது. நான் இதுபற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். முதல் இரண்டு வகுப்புகளில் தாய்மொழியில் எழுத்து, பதம், இருசொல், முச்சொல் வாக்கியங்கள் போன்றவற்றை மொழியிலும், எண்கள் ஒருவரிசை-இருவரிசை கூட்டல், கழித்தல், சிறு அளவு பெருக்கல் போன்றவற்றையும் கற்றுத் தருதல் வேண்டும். இவற்றுடன் அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப, சுற்றுப் புறச் சூழலுக்கு அமைய, சிறு வரலாறுகள், நில அமைப்பு முறை, அங்குள்ள தொழில் முக்கிய தலைவர்கள் வாழ்ந்த நிலை, பிறவற்றைச் சொல்லித் தருதல் வேண்டும். ஆத்திசூடி போன்ற சிறு சிறு . தொடர்களாலான அறநெறி பற்றிய வாக்கியங்கள் பயிற்றப்பெறல் வேண்டும். விளையாட்டு வகையிலே பலவற்றைச் சொல்லித்தரலாம். பள்ளிநேரம் காலை 8 மணி பிற்பகல் 2 மணி என்ற அளவில் 30 மாணவர் களுக்கு (ஒரே வகுப்பு) ஒர் ஆசிரியர் அளவில் அமைந்து செயல்படவேண்டும், ஆசிரியர் குழந்தைகளோடு குழந்தையாகி விடவேண்டும். ஆசிரியர் என்ற அச்சம் எழாத வகையில் அவ்ர்கள் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பள்ளியில் இருப்பதே மகிழ்ச்சிக்குரியதென அந்த இளம் பிஞ்சு உள்ளங்கள் நினைக்கவேண்டும். பள்ளிக்கூடம் ஏதோ சட்டதிட்டம், அடி உதை என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.

1958இல் நான் ம்துரைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்னோடியாக, அங்கே தியாகராஜா கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்புத் தொடங்க, அன்றைய துணை வேந்தர் ஏ. எல். முதலியாரால் அனுப்பப்பெற்றேன். ஒரு முறை நான் இரயிலில் சென்றபோது அதே பெட்டியில் பம்பா

யிலிருந்து மதுரைக்கு (தன் தாய் வீட்டிற்கு) வந்து கொண்டிருந்த ஒரு தாயும் 7.8 வயது மதிக்கத்தக்க பெண்ணும் உடன் பயணம் செய்தனர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது நான் அங்குள்ள கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுவதைச் சொன்னேன். அக் குழந்தையுடனும் சிரித்துப் பேசினேன். ஆயினும் அன்னையார் என்னை தன் மகளுக்கு 'இவர் ஒரு வாத்தியார்' என அறிமுகப்படுத்திய உடன் அக் குழந்தையின் முகம் மாறுபட்டது. எனக்குப் புரியவில்லை. அன்னையார் என்னவென்று கேட்டார்கள். அந்தக் குழந்தை 'வாத்தியார் சிரிப்பாரோ, நீ பொய் சொல்லுகிறாய்” என்று பதில் சொல்லிற்று. பிறகு அவர்கள் பம்பாய் மாதுங்காவில் அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியில் அதன் வகுப்பில் உள்ள ஆசிரியர் சிடு சிடுப்பாக இருந்து குழந்தைகளை எப்போதும் அடித்தும் வைதும் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்றார்கள். நான் உண்மையில் வருந்தினேன். இது பற்றி என் 'வையைத் தமிழ்' என்ற முதல் நூலில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளேன், இளம் பிஞ்சு உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றி அத்தகைய எண்ணம் உண்டானால்-பயம் ஏற்பட்டால்-அது எப்படிப் படிக்க முடியும்? எனவே ஆசிரியர்கள் -சிறப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அன்பு கலந்த தயுளத்தோடு இன்முகத்தோடு குழந்தைகளுக்குப் பாடம் கற்பி கவேண்டும். இன்று சென்னையில் பல தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வகையில் பெண்களே ஆசிரியராக உள்ளனர். தமிழக அரசும் இனி ஆரம்பப்பள்ளிகளில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்கப் போவதாகக் கூறியது ஆறுதல் அளிக்கின்றது. பெண்கள் தாயுள்ளம் கொண்டவர்களாதலின் அவர்தம் பண்பும் பழக்கமும் குழந்தைகளுக்கு ஆதரவாக அமையும் என்ற அடிப்படையிலே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பெறுகின்றன.

முதல் இரண்டாம் வகுப்புகளில் இந்த வகையில் ஆரம்பக் கல்வி அவரவர் வாழும் ஊர், சுற்றுச் சூழல், தொடக்கப்பாடம், பாட்டு, கணக்கு என அமைய, மூன்றாம் .

வகுப்பு முடிய முறையான பாடத்திட்டங்கள் அமையலாம். வரலாறு, நிலநூல், கணக்கு, அறிவியல் துளிகள், நல்வாழ்வு, மொழிகள் இரண்டு (தாய்மொழியும் மற்றொன்றும்) எனப் பகுத்து அவற்றிற்கெனப் பாடநூல்கள் அமைக்கலாம். முதல் இரண்டு வகுப்புகளுக்கும் நான் மேலே காட்டியபடி பாடல்நூல்கள் ஆரம்பத்தில் தடையில்லை. ஆயினும் கணிதம். மொழி இரண்டினைத் தவிர, மற்றவற்றிற்குப் பாடநூல்கள் அமையவழியில்லை; அவை பெரும்பாலும் அந்தந்தச் சூழலை ஒட்டி அமைவதால் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு ஏற்றவகையில் பாடங்களை உருவாக்க, தக்கவர் அமைந்த குழு அமைத்து, குழந்தைகள் உளங்கொளும் வகையில் மொழிப்பாடங்களும் பிறவும் எழுதச் சொல்லவேண்டும் பழங் காலத்தில் இரண்டாம் வகுப்புவரை ஊர், அதன் பக்கச் சூழலை அறிந்த குழந்தை, மூன்றாம் வகுப்பில் அந்த வட்டத்தைச் சேர்ந்த நிலநூல் பயிற்சி பெறும். அப்படியே வரலாற்றில் சிலவற்றை-இராசராசன், சிவாஜி, காந்திஅடிக்ள் போன்றவர் வரலாறு முதலியன, சிறுசிறு கதைகளாக. பிள்ளைகள் விரும்பும் வகையில் இடம்பெறச் செய்யலாம். மற்றைய கணக்கு இரு மொழிகள் ஆகியவற்றிற்கு வகுப்புக்கு ஏற்ற பாடங்கள் அமைந்த நூல்கள் அச்சிடலாம். நான்காம் வகுப்பில் மாவட்டம், ஐந்தாம் வகுப்பில் மாநிலம் என்ற அளவில் பாடங்களும் மொழிகளில், வகுப்பின் வளர்ச்சிக்கு ஏற்ற சில சிறு இலக்கியங்களும் இடம் பெறலாம். கணக்கு முறை படிப்படியாக வகுப்புக்கு ஏற்ப வளர்ச்சி பெறும்வகையில் பாடத்திட்டம் அமையலாம். இவ்வாறு எல்லாப் பாடங்களும் முறையாக அமைய, நல்லாசிரியர்கள் முறைப்படி நடத்தினால் ஐந்தாம் வகுப்புவரையில் பயிலும் ஒரு மாணவன் கல்வியின் தெளிந்த அறிவு பெறுவான் என்பது உறுதி.

நான் முன்னமே குறித்தபடி பள்ளிக்கூடத் திட்டங்களைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். திண்ணைப் பள்ளிக்

கூடங்கள் இன்று நடத்த முடியாது. எனினும் கட்டடம் இல்லாத பள்ளிகளே இல்லை என்னுமாறு செய்ய வேண்டும், அந்தந்த ஊர்மக்களிடமே இதைவிட்டால் அவர்கள் எளிதில் ஒவ்வோர் ஊரிலும் பள்ளி அமைத்துவிடுவர். தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில், கிராமங்களில் பள்ளிகள் அமைக்க ஊக்கமுடன், ஊரில் உள்ளவர்கட்கும் பணிவழியோ சாமான்கள் (மரம்-கல் முதலியன) வழியோ பாதி தர, அரசாங்கம் பாதிதரும் வகையில் செயல்படின் எல்லா ஊர்களும் பள்ளிகளைப் பெறும். முன்பு தமிழ் நாட்டில் இந்த வகையில் எத்தனையோ ஊர்களில் சாலைகள் அமைத்தனர். ஏரிகளைத் துப்புறவு செய்தனர். கால்வாய்கள் வெட்டினர். பள்ளிகளும் கட்டினர். இன்று பலகோடி செலவு செய்வதாகக் கூறும் அரசாங்கம், ஊர்தோறும் தக்கவகையில் இந்த முறையினை ஏற்பாடு செய்யின் பயன் விளையும் என நம்புகிறேன். ஆனால் அவ்வாறு தரும் தொகை யார் யார் கையிலோ சென்று சேராமல் அதற்கெனவே செலவிடப் பெறுகிறதா என்பதை அரசாங்கம் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ள் வேண்டும். எனவே எல்லாவகையிலும் ஆரம்பக் கல்வி-பத்தாம் வகுப்பு வரை (எல்லாக் குழந்தை களுக்கும் 5-14) அமைய அரசு ஏற்பாடு செய்யின், நாட்டின் பிற வளங்கள் யாவும் தாமாகவே அமையும்.

இன்று பல தனியார் நிறுவனங்களும் மாணவர் கூட்டங்களும் எழுத்தறியா நிலையினைப் போக்க, ஒய்வு நேரத்தில் உதவுவதாக மாவட்டம் தோறும் அறிக்கை வருகின்றது. இளைஞருக்கு மட்டுமன்றி வயது வந்தோருக்கும் கல்வி கற்பிக்கும் இயக்கம் நாட்டில் வலுப்பெற்று வருகின்றது. எனினும் அதற்கென வகுக்கும் வழிமுறைகள் காரணமாகவோ, வேறு எதன் அடிப்படையிலோ அந்த முறை நன்கு நடைபெறவில்லை எனப் பலரும் கூறுகின்றனர். சமூகசேவை செய்வதாகக் கூறிக்கொண்டு, பட்டுடுத்து, படம் எடுத்துக் கொண்டு தம் சமூக சேவையைக் காட்டுவோரும் உண்டு. உண்மையில் தம்மைமறந்து சமூகசேவையில் பாடுபடுவோரும்

உண்டு வேண்டியவர்-வேண்டாதவர் என்று காணாது உண்மையில் தொண்டு செய்பவர்களை ஊக்குவித்து அரசாங்கம் கல்வியை வளர்க்க வேண்டும் ஊர்தோறும் முதியோர் கல்லிக்காக ஆரம்பப் பள்ளியினை ஒத்து, எழுத்தும் எண்ணும் சொல்லிக்கொடுத்து வயதுவந்தோரை ஓரளவாவது கற்றவராக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தும் அச்செலவுக்கு ஏற்ற பயன் விளையவில்லை என அரசாங்கத்தாரே சொல்லுகின்றனர். எல்லாவற்றிற்கும் கையூட்டு இல்லாத திட்டமான மேற்பார்வை முறை அமையின் கல்விமட்டுமன்றி, நாட்டில் எல்லாத்துறைகளும் நன்கு அமையும். அந்த ஆக்கநெறிக்கு இன்று நாடாளும் நல்லவர்க்ள் வழிவகுத்து முயலவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளுகிறேன். -

அண்மையில் தில்லியில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் (25-9-91-28-9.91) நாடுகளில் ஆரம்பப் பள்ளியில் கல்வியின் தரம் மிகக் கீழ்நோக்கிச் சென்றுள்ளது எனக் காட்டியுள்ளது. (The Hindu 29.9.91 P. 20) இந்தியாவும் ஒரு காமன்வெல்த் நாடுதானே! பள்ளியில் சேரும் மாணவர் எண்ணிக்கை வளர்ந்துவிட்டது என்றாலும் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தரம் மிகத் தாழ்ந்துள்ளதைக் குறித்துள்ளனர். இது பிற மேல் படிப்புகளையும் பாதித்துள்ளதையும் சுட்டிக்காட்ட அவர்கள் தவறவில்லை. 10க்கு 8 பேர் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தாலும் அவருள் பாதிபேர் உயர்நிலைப்பள்ளியை எட்டிப் பார்ப்பதில்லை என்பதைச் சுட்டி, சமுதாய வளர்ச்சி அங்கே தடைப்படுவதையும் நினைவு படுத்தியுள்ளனர். -

ஆரம்பப் பள்ளிகளின் சீர்கேடுகளை - இடமின்மை, கட்டடம் இன்மை, பாடநூல்கள் இன்மை, தகுதி வாய்ந்த ஆசிரியர் இன்மை போன்றவற்றையும் அவர்கள் குறித்துள்ளனர். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் பள்ளிகள் வளர்ச்சி அடைய, அதை நிறைவேற்ற நிதி இல்லாநிலை உடைய நாடுகளும் எண்ணப்பெறுகின்றன. இந்த

நிலையில் சில் நாடுகள் மேநிலைக் கல்வியினை-பல்கலைக் கழகக் கல்வியினை-ஒரு சிலருக்கே உதவும் கல்வியினை வளர்க்கக் கோடி கோடியாக மேலும் மேலும், செலவிடுவதையும் சிந்தை செய்துள்ளனர். உலகவங்கி உதவ வந்த நிலையிலும் சில நாடுகள் ஏற்காது. எங்கோ பின்னடைந்த நிலையில் உள்ளதும் எண்ணப்பட்டது வளமான் காமன் வெல்த் நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதி உதவ வேண்டிய நிலையினையும் அவர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை. காமன்வெல்த் உயர்கல்வி வளர்ச்சித் திட்டமும் (Commen Wealth Higher Education Support Scheme) ஆரம்பிக் கல்வித் திட்டமும் சேர்ந்து வளரும் நாடுகளில் கல்வி வளர்க்க வாய்ப்பளிக்கும் நிலையினையும் எண்ணியுள்ளனர்.

நம் பாரதமும் இதை எண்ண வேண்டும். ஆரம்பக்கல்வி திருந்தினால்தான் பிற அனைத்து மட்டத்து உயர்கல்விகளும் உயர்ச்சியுறும். இந்த நிலை இன்றேல் என்னாகும் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆளும் நல்ல அமைச்சர்கள் ஆழ்ந்து எண்ணி ஆவன காண்பார்களாக.

இந்தத் தலைப்பு அச்சாகிக் கொண்டிருக்கையில் தினமணியில் (17-11-91-பக். 4) திரு. த. பரசுராமன் என்பவர் எழுதிய ‘தொடக்கப்பள்ளிகளில் தடுமாறும் தமிழ்’ என்ற கட்டுரை வெளிவந்ததைக் கண்டேன். அதில் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ்மொழி போற்றப்பெறாத அவல நிலையினை நன்கு விளக்கியுள்ளனர். தொடக்க நிலையில் மொழிக்கே முக்கியத்துவம் தரவேண்டும்’ எனச் சுட்டி, மொழிப்பாடம் ஆரம்பப் பள்ளிகளில் பெற்றுள்ள இழிநிலையினைச் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் நாட்டினைத் தவிர்த்து இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு தாய்மொழி-நாட்டுமொழி தாழ்த்தப்பெறும் அவலநிலை கிடையாது இதில் வேறு ‘நம்மை நாமே ஆளுகிறோம்’ என்று நாம் பெருமையாகப் பேசிக் கொள்ளுகிறோம். இனியாகிலும் தமிழ்நாட்டில் விழிப்புணர்ச்சி அரும்புமா? தமிழக அரசு தக்கன செய்யுமா? பொறுத்திருந்து காணவேண்டும்.

மழலையர் கல்வி

* * *

இளங்குழந்தைகள் கல்வியும் போற்றப்பட வேண்டிய ஒன்று. 5 வயதில் முதல்வகுப்பில் சேர்வதற்கு முன் ஓரிரு வகுப்புகளைத் தற்போது பலர் தெருவுதோறும் நடத்தி வருகின்றனர். ‘L.K.G.’, ‘U.K.G.’ என்ற பெயரில் இளங்குழந்தைகள் வகுப்பினை இரண்டாகப் பகுத்து, படிப்பினைத் தருகின்றனர். 3 வயதுக்கு முன்பும் பணியிடை உழலும் மகளிர் தங்கள் குழந்தைகளைக் காப்பகங்களில் (Creches) விட்டுச் செல்லுகின்றனர். இந்த இளங்குழந்தைகளுக்குப் படிப்புடன், தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவும் தேவைப்படுகிறது. பள்ளிகளில் சத்துணவுக் கூடங்கள் அமைத்து அரசாங்கம் உதவி புரிவதைப் போன்று. இந்த மழலைகள் பள்ளிகளையும் நன்கு பராமரிக்க வேண்டும். இளம் மழலைகளைப் பாதுகாக்கும் இல்லங்கள் அவ்வளவாகப் பயிற்று நிலையங்களாக அமைவதில்லை. பெரும்பாலும் பணிமேற்செல்லும் தாயர் பிள்ளைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்லும் இடங்களாகவே அவை உள்ளன. குழந்தைகள் அழாமலும் வாடாமலும் பார்த்துக்கொள்வதும் வேண்டும்போது பால், சிற்றுணவு போன்றவை அளிப்பதும் தூங்கும்போது தாயைப்போல பக்கத்தில் இருந்து உறங்க வைப்பதும்தாம் அவை செய்கின்றன. எங்கோ ஓரிரு இடங்களில் பாட்டுகள் கற்றுத் தருவதாகக் கூறுகின்றனர். சிறுசிறு அடிகளில் அமைந்த பாடல்களை மூன்று வயது நிரம்பாத மழலைகள் வாய்மொழியாகக் கேட்க இனிமையாக இருக்குமல்லவா! ஆனால் இன்று அப்பாடல்கள் எல்லாம் ஆங்கிலப் பாடல்களாகவே உள்ள்ன. அப்பிஞ்சு உள்ளங்களில் தாய்மொழி உணர்வும் பற்றும் அற்றுப்போக இந்த முறை வழிசெய்கின்றது. ஒருசில தவிர்த்துப் பெருபாலானவை வெறும் பால் உண்பிக்கும்-தூங்கவைக்கும் நிலையங்களாகவே உள்ளன. எனினும் தெருவுதோறும் இத்தகைய காப்பகங்கள் வளர்ந்து வருவதால், அவற்றை முறைப்படுத்தி, உரிமம் வழங்க வகைகண்டு, தாய்மொழியிலேயே அக்குழத்தைகளைப் பழக்க வழிவகை காணவேண்டும். அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ ஆங்கில மொழி உணர்வு மழலை உள்ளங்களில் நிழலிடுகின்றன. பிரான்சில் பிரஞ்சு மொழி பிள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுகின்றது. ஏன் நம் வடநாட்டிலும் அவரவர் தாய்மொழியே வாய்மொழியாக இளம் பிள்ளைகள் பயில வழி செய்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில்தான் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’, என்று பாரதி கண்ட கனவு வெறும் பாட்டினிலோ அன்றி வருங்கால வரலாற்றிலோ இருக்கவே இந்த மழலையர் பள்ளிகள் வழிவகுக்கின்றன. அரசு அன்றி வேறு யாரே இதைத் தடுத்து நிறுத்த வல்லார்!

மூன்று வயது முடிந்ததும் முறையான வகையில் தொடக்க வகுப்பில் (L.K.G.) பிள்ளைகள் சேர்க்கப் பெறுகின்றனர். இளம் பிள்ளைகள் (0-6 வயதில்) நம் மக்கள் தொகையில் நூற்றுக்குப் பதினேழு என்ற வகையில் உள்ளனர் என அரசாங்கக் கணக்கு எழுதப்பெற்றுள்ளது (Page 114 Towards an Enlightened and Humane Society) அவற்றுள் பெரும்பாலான வறுமை நிலையில் வாடுகின்றன. அக்குழந்தைகள் 100க்கு 10 சதவீதமே மேலே கண்டவகையில் மழலையர் காப்பகத்திலும் மழலையர் பள்ளிகளிலும் இடம் பெறுகின்றனர். பெரும்பாலான பிள்ளைகள் வழிவகை இன்றி வாடுகின்ற்னர். அந்த 100க்கு 10இல் பெரும்பாலானவர் நகரங்களில் உள்ளவர்களே. இந்த நிலையில் இளம் பிள்ளைகள் வளர்ந்தால் கல்வியிலும் பதவிகளிலும் எத்தனை மண்டல கமிஷன் வந்தாலும் 100க்கு 27 அல்லது 37என ஒதுக்கினாலும் என்ன பயன்? இந்த மழலையர் பள்ளிகளில் பெருந்தொகை செலவிட்டுச் சேர்ந்து பயிலும் பிள்ளை களோடு மற்றைய 90 சதவிகிதம் பிள்ளைகள் எவ்வாறு போட்டியிட முடியும்? அப்படியே முதற் வகுப்பில் சேர்ந்தாலும் இடையில் 2, 3, 4, 5 இல் வருகின்ற பிள்ளைகள் எத்துணையர்? கிராமங்கள்தோறும் - நகரில் குடிசைப் பகுதிகள் தோறும் இந்த அவலநிலையில் உள்ள குழந்தைகளைக் காணமுடிகின்றதே! அதற்கு ஒரு வழிவகை காண வேண்டாமா! 14 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி தரவேண்டும் என்ற அரசியல் சாசன 45வது பகுதிப்படி இந்த இளங்குழந்தைகள் அனைத்தும் ஒரே வகையான கல்வியினைக் கற்க வழிகாண வேண்டாமா? இராமமூர்த்திக் குழு இதை ஆராய்ந்த வகையில் இதற்கு விமோசனம் கண்டதாகத் தாம் காணவில்லை என்றும் மகளிர், குழந்தை வளர்ச்சித் துறைக்கும் கல்வித் துறைக்கும் ஓர் இணைப்பு இருக்கவேண்டுமென்றும் அதன் வழியே இளம் குழந்தைகள் உள்ளம் கற்பன கற்று, தாய்மொழிப் பற்றும் பெற வழி உண்டு என்றும் சுட்டிக் காட்டி, ஆனால் அது செயல்முறையில் இல்லை என்பதையும் குறிக்கிறது (பக். 115). அதன் பரிந்துரையில் (116) மகளிர், பிள்ளைகள் வளர்ச்சித்துறை, இளங்குழந்தைகள் கல்வியில் பங்குகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது. கல்வித்துறையும், அரசியல் சாசன 45வது விதிப்படி, இக்குழந்தைகள் கல்வியைக் கண்ணெனக் காக்க வேண்டிய கடமையினையும் சுட்டிக்காட்டி உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த வகையில் ஒத்துழைத்துச் செயல்பட் வேண்டும் எனவும் சுட்டியுள்ளது, இளம் குழந்தைகள் தாயன்புக்கு ஏங்கும் அளவிற்கு வரக்கூடாது என்பதையும் எண்ணி, தாயினையே அறியாத நிலையில் எப்படி அதன் வாழ்வு அமையும் என்பதையும் கருதிப் பார்க்கவேண்டியுள்ளது. மழலையர் பாதுகாப்பு இல்லங்களில் விடப்பெறும் குழந்தைகள் யார் கையிலோ இருந்து, எப்படியோ உண்டு, உறங்கிப் பொழுதைக் கழிக்க, மாலையில் அன்னையர் வரினும் அவர்கள் வேலைகளுக்கு இடையில் அவர்தம் பாசத்தையும் பரிவினையும் பெறாமல் வருகின்றன. பின், சென்ற தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் பெருத்த மாறுபாடு உண்டாகிறதே என்று வருந்துவதால் என்ன பயன்? அண்மையில் தொலைக்காட்சியில் இத்தகைய ஒரு கதை (24.9.91) காட்டப்பெற்று சொந்த ஒரே மகள் வேறொருவனோடு சென்று மறைந்ததையும் பொருட்படுத்தாது, வாணிப வேலையிலே தந்தையும் உயர் சமுதாயச் சூழலிலே தாயும் சென்றதைக் காட்டியுள்ளது. இந்த நிலையில் தாய்ப்பாசமே அகன்றுவிட, அந்தப் பெண் இறுதியில் தாய் தந்தையைக் கண்டபோதும் களிப்பெய்தாது புதிய மனிதரைக் காண்பது போலவே நின்றாள். இது பெரும்பாலும் பெரும் செல்வர் வீடுகளிலும் தாய் தந்தையர் இருவரும் பணிபுரியும் வீடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சி தானே. தாயன்பே இவ்வாறு இல்லையாகும்போது தாய் மொழிப்பற்றும் தாய்நாட்டுப் பற்றும் எப்படி அமையும்? இந்த நிலை நாட்டில் வளரின் ‘இந்திய நாட்டின் தென் கோடியில் தமிழ் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்தது’ என வரலாற்றில் படிக்கும் வகையிலும் தாய்நாடு பல வகையில் சிதறுண்டு போகும் வழியிலும் வருங்காலம் அமையுமே என்று யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த அவலநிலையை நீக்கினாலன்றி நாடு உய்யுமாறு இல்லை என்பது உறுதி.

இக்குறை நீக்க இராமமூர்த்திக் குழு சில விதிகளைக் காட்டியுள்ளது. (பக். 119) ஆனால் அரசாங்கம் அவற்றைப் பின்பற்ற வேண்டுமே. எத்தனையோ குழுக்கள் மத்திய மாநில அரசாங்கங்கள் விடுதலை பெற்றபின் நாள்தோறும் நியமிக்கின்றன. அவற்றின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுச்செயல்படுத்தியுள்ளனவா? இல்லையே பேருக்குக் குழு அமைத்து ஊருக்கு உபதேசித்துச் செயலில் பின்னடையும் நிலை நாட்டில் இருக்கும் வரையில் நாடு நாடாகவா இருக்கும். எறும்புகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து நேரிய வழியில் செல்லுகின்றன. பறவைகள் மாலைப்பொழுதில் தம் கூடுநோக்கி விரைந்து பறக்கின்றன கோழி விடியலில் எழுந்து தவறாது குரலெழுப்பி ‘வெய்யோனை வாவுபரித்தேரேறி வாவென்றழைப்பனபோல்’ கூவுகின்றன. ஏன்? ஓரறிவுடைய மரங்களும் செடிகளும்கூடக் காலம் தவறாமல் பணியாற்றுகின்றன. மாவும் பலாவும் கோடையில் பழுத்துப் பயன்தருகின்றன: மல்லியும் முல்லையும் இளவேனிலில் முகிழ்த்து மணம் வீசுகின்றன. அவை அனைத்தும் இன்னார் இனியார் என்று பார்ப்பதில்லை; உயர்ந்தார் தாழ்ந்தார் என்று நோக்குவதில்லை. என் கட்சிக்காரன், வென்றவன் என்று வேறுபடுத்துவதில்லை. ஆனால் ஆறறிவுடையவனாகிய மனிதன் எதைக் காலத்தில் செய்கின்றான்? ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின் என்ற குறள் ‘பஸ்’சில்-பேருந்துகளில் எழுதுவதற்குத்தானே ஒழிய தன் வாழ்வுக்கு இல்லை என்று தானே செயலாற்றுகின்றான். இந்த நிலையில் அடுத்து வரும் இளம் சமுதாயத்தை-மழலையர் மனத்தை இப்போதே நேரிய வழியில் செலுத்தாவிட்டால் நாடு என்னாகும்? ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இல்லாத சாதிச் சண்டைகளும் சமயச் சண்டைகளும்,(தென் ஆப்பிரிக்காவின் நிறச்சண்டை உட்பட) அவற்றின் வழியே எழும் கொலைகளும் இன்று நாள்தோறும் நம் நாட்டில் நடைபெறுகின்றனவே. மக்கள் கடத்தலும் கள்ளப் பொருள்கள் கடத்தலும் இன்றுபோல் என்றேனும் இருந்ததுண்டா அரசு மட்டுமின்றித் தனிமனிதனும் இதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா! சமயத் தலைவர்கள்-சமூகத் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா! எண்ணிப் பார்த்து இளங் குழந்தைகளுக்கு ஒன்றிய நெறியில், உற்ற கல்வியையும் பிற நலன்களையும் தந்து வருங்கால சமுதாயத்தையாவது வாழவைப்பார்களா?

இந்த இளம் பிள்ளைகளுக்கு வெறும் ஆங்கில மோகத்தை வளர்க்காது, நம்நாட்டுச் சுற்றுச் சூழல், பண்பாடு, வாழ்க்கை இவற்றிற்கு ஏற்ப, பாடல்களையும் பாடங்களையும் கற்றுத்தர ஏற்பாடு செய்யவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதற்கேற்ப ஆத்திசூடி கொன்றை வேந்தன் தொடங்கி அறநெறிகளை வற்புறுத்தி வழிகாட்டும் பேரிலக்கியங்கள் வரிசை வரிசையாக-முறை முறையாக வகுப்பு நிலைக்கு ஏற்ப எண்ணற்று உள்ளன. அவற்றையே வேண்டாம் என்று ஒதுக்கும் அளவுக்கு இன்று தமிழன் முன்னேறிவிட்டானே! திருப்பிப் பார்த்துத் திருந்த வேண்டும்.

இன்று தந்தை தாய்ப் பேண், ஊருடன் கூடிவாழ், ஒப்புரவு ஒழுகு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இவை போன்றன தமிழ்க் குழந்தைகள் அறியாதன.

இத்தகைய இளங் குழந்தைகள் (0-6) பயிற்றுவதற்குத் தனித் திறன் தேவை. உயர்ந்த பட்டங்களோ, வேண்டாத பாடங்கள், மொழிகளைப் பயிற்றப் பயிற்சிகளோ தேவை இல்லை. குழந்தைகள் பயிற்சிப்பள்ளி (Nursery Training School) என ஒரு சில தனியார் நடத்துகின்றன. அவையும் தேவையான முறையில்-தெரிந்த வகையில் செயல்படுவதில்லை. பத்தாம் வகுப்பு பயின்றபின் ஆசிரியர் பயிற்சி தானே (Sec Grade) இன்று அடித்தளப் பயிற்சியாக உள்ளது. அதில் பயில்பவர்கள் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையில் ஆசிரியராக இருக்கலாம். அவர்களும் 1, 2 முதலிய வகுப்புகளுக்குச் சொல்லித் தரும் திறன் பெறுவகையில் அவர்கள் பயிற்சி பெறுவதில்லை. பயிற்சிப் பள்ளிகளின் பாடத்திட்டம் முதலில் மாற்றி அமைக்கப்பெறல் வேண்டும்.

இளங் குழந்தைகளுக்குப் பாடம் பயிற்றும் பயிற்சிப் பள்ளிகளைப் பற்றி அரசு கவனம் செலுத்தலாம். பெண் இனத்துக்குப் பெரிதும் உதவ நினைக்கும் இன்றைய அரசாங்கம் ஐந்தாம் வகுப்பு வரை மகளிரையே ஆசிரியராக நியமிக்கப் போவதாகக் கூறியுள்ளது. நல்லதே. ஆனால் குழந்தைகள் வகுப்பிற்கு உரிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி இல்லை. இதை எண்ணிப் பார்க்கவேண்டும் இல்லையானால் அடிப்படை இல்லாத கட்டடம் போன்று உடனே இடிந்து விழும். இதே சமுதாய வாழ்வாக நாட்டுவாழ்வு அமைந்து விடலாம். இப்பயிற்சியும் அவ்வம்மக்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப, அந்நிய வாடை வீசாத வகையில் அமையவேண்டும். மாவட்டத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளியாவது உடன் தொடங்க வேண்டும்.

நான் மேலே சுட்டியபடி குழந்தைகள் தாங்கள் வாழும் சமுதாயத்தை ஒட்டியே வளர்க்கப்பெறல் வேண்டும். இதனால் ஏழை ஏழையாகவே இருக்கவேண்டுமென்றோ செல்வன் மேலும் செல்வம் பெற்றவனாக ஆகவேண்டும் என்பதோ கருத்தன்று. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது என்பதற்கு ஏற்ப யாரோ எப்படியோ வாழ்கிறார்கள் என்று அதற்காக நம் குழந்தைகளும் அந்த வழியில் படிக்க வேண்டுவதில்லை. ஏழை நாடாக உள்ள இந்தியாவில்-பெரும்பாலும் கிராமங்களே அமைந்த இந்தியாவில் அக்கிராமச் சூழ்நிலைக்கேற்ப ஆரம்பகல்வி அமையவேண்டும். இளங் குழந்தைகள் உள்ளத்தே தன் ஊர் தன் உறவினர், உற்றார், தன்னைப்போன்ற மக்கள், ஊர்புறச் சூழல் போன்ற வகையில் அமையப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். பின் நான் ஆரம்பள்ளி பற்றிய எழுத்தில் காட்டிய படி வட்டம், மாவட்டம், மாநிலம், பிறகு, உலகம் என்று மெல்ல மெல்ல, வளர வேண்டும். இளங் குழந்தைகள் உள்ளம்-கண்ணாடி போன்ற உள்ளம்! எனவே தன் தாய் மொழி-தாய் தந்தை உற்றார் உறவினர் பற்று, ஊர்ப்பற்று முதலியன அமைய, பிறபின் தொடர வழி காட்டியாகப் பலவகையில் குழந்தைகள் கல்வி (0-6) அமைய வேண்டும். இது பற்றி இராமமூர்த்தி ஆய்வுக்குழு தெளிவாக இரண்டு பக்கங்கள் (125-126) பரிந்துரை செய்துள்ளது. அவற்றை மத்திய மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் இவ்வாறு இளங் குழந்தைகள் உள்ளத்தே நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வளரும் வகையில் கல்வி முறை அமைப்பின் வரும் சந்ததி வளமுற்று வாழ வழி உண்டாகும். நாட்டு மக்கள் தாம் கொண்டுள்ள எல்லா வேற்றுமைகளையும் பிஞ்சு உள்ளங்களில் புகாமல் பாதுகாத்திட முயல வேண்டும். அதற்கு ஏற்ப மத்திய மாநில அரசுகள் தக்க நெறிப்படும் குழந்தைகள்-இளங் குழந்தைகளுக்குப் பள்ளிகளை அத்துறையில் பயிற்சி பெற்ற நல்லாசிரியர்களைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ப் பழமொழி. எனவே ஐந்து வயது நிரம்பிய பிள்ளை உள்ளங்களில் பதியும் எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தும் நல்லாசிரியர் பயிற்சிப் பள்ளிகளை உடன் தொடங்கி ஓராண்டு அல்லது ஈராண்டு அப்பயிற்சியை முடிக்க வழிகாண வேண்டும். ஊர்தொறும் அர்சாங்கமே - ஊராட்சியாளர் வழியோ பிறவழியோ அத்தகைய நல்லாசிரியர் கொண்ட மழலைப் பள்ளிகளை நிறுவி, அவை நன்கு நடைபெறுகின்றனவா என்பதைக் கவனிக்க வழிகாண வேண்டும் இந்த நிலையினை முதலில் செய்யின், வருங்கால நாடு கல்வியால் மட்டுமன்றிப் பிற எல்லா வகையாலும் ஏற்றமுறும் என்பது தெளிவு.

முதல் வகுப்புக்கு முன் உள்ள ‘L.K.G. U.K.G’ வகுப்புகளைப் பற்றிச் சிறிது காண்போம். சீருடை உடுத்து தலைசீவி பெரும் சுமையாகப் புத்தகங்களைத் தாங்கிக்கொண்டு இளஞ் செல்வங்கள் பள்ளிக்கு வருவதும், அவர்களை அழைத்து வந்து விட்டு, பின் திரும்ப அழைத்துச் செல்ல, தாயரும் பிறரும் வருவதும் ஒவ்வொரு பள்ளியிலும் கண் கொள்ளாக் காட்சியாகத்தான் உள்ளது. சில பெற்றோர்கள்-இருவரும் பணிசெய்பவர்களாக இருந்து, வீட்டில் பார்க்க வேறு யாரும் இல்லா நிலையில், மாலை அவர்கள் திரும்பும் வரையில், பள்ளியிலேயே தங்க வைத்துக்கொள்ளத் தனி ஏற்பாடுகளும் சில இடங்களில் உள்ளன. குழந்தைகள் மழலைமொழி கேட்டு மகிழவேண்டிய நல்லாசிரியர்கள், சிலசமயங்களில் வல்லாசிரியர்களாவதும் உண்டு. இந்த நிலையினால் அஞ்சும் குழந்தைகளுக்குக் கல்வியிலேயே வெறுப்புத் தோன்றும் சீருடை.யும் பிறவும் குழந்தை உள்ளத்தில் வேறுபாடுகள் தோன்ற

க.-7 வழியில்லை. பெரும்பாலும் இவ்வகுப்புகள் பாதிநாட்களோ, சுமார் மூன்றுமணி நேரமோ நடப்பதால் உணவு வேறு பாட்டினைக் காணவும் முடியாது. சில குழந்தைகளுக்குப் பெற்றோர் இடைவேளையில் ஏதேனும் பருகக் கொண்டு வந்து தருவர். அது அதிக வேற்றுமையை ஏற்படுத்தாது. எனினும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தனிச் சலுகை தரக் கட்டாயப்படுத்தும் போதுதான் தொல்லை உண்டாகிறது.

L.K,G. U.K G. வகுப்புகளில் எழுத்து வேலைகள் அதிகம் இல்லை என்றாலும் குழந்தைகள் விரும்பியபடி வண்ணப் படங்கள் தீட்ட், வண்ணக் கோல்கள் பள்ளிகளில் தரப்பெறுகின்றன. அக் குழந்தைகள் கிறுக்கி வரையும் படங்களை ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் காட்டி அவை மகிழும் போதும் நாம் நம்மை மறக்கிறோம். சிறு சிறு அடிகளா லாகிய பாடல்களைப் பாடும்போதும் கேட்போருக்கு மகிழ்ச்சி பிறக்கிறது. ஆனால் அவை வேற்றுமொழியிலன்றோ பெரும்பாலான பள்ளிகளில் பயிற்றப்பெறுகின்றன. இந்த இரு வகுப்பிலும் தமிழே இல்லாத பள்ளிகள் சென்னை நகரில் பல உள்ளன. இதனைத் தடுக்க வழிகாணவேண்டும், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்ற வாக்கு என்றும் உண்மையாகுமாதலால் இந்த இளமையில் கற்றுத்தரும் கல்வியே வரும் காலச் சமுதாயத்தை வாழவைக்கும்-வளர வைக்கும். இந்த உண்மையினை எண்ணி அரசும் பிறரும் செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

7. முதியோர் கல்வி

* * *

இந்தியா உரிமை பெற்று நாறபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அப்பொழுதே எல்லாருக்கும் (3-15) வயதுச் கல்வி அறிவு தரவேண்டும் என்ற முயற்சியில் நாடு ஈடுபட்டு. இருந்தால் இன்று 50 வயதுக்கு உட்பட்டவர் அனைவரும் கற்றவர்களாகவே இருப்பர். இன்று மருத்துவப் பட்டம் பெறுபவர் அரசாங்க்ப் பணியில் சேர விரும்பினால் ஓராண்டு கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதி கொண்டு வரப் போவதாகக் கூறுகின்றனர். சாதாரணப் பட்டம் பெற விரும்புவர்களுக்கும் படிப்பு முடிந்தபின் ஓராண்டு கிராமத்தில் பணிபுரிந்தால்தான் பட்டம் பெறமுடியும் என்று ஏற்பாடு செய்யவேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். இந்தக் கருத்தினைத்தான், நான் முன்னரே குறித்தபடி, 1947இல் சுதந்திரம் பெற்ற உடனே இந்தியா முதல்சட்டமாக இந்த முறைக்கு ஏற்ப, ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்று ‘இந்திய முதற் சட்டம்’ என்ற நூலில் எழுதினேன். அதில் பட்டம் பெறுபவர் ஓர் ஆண்டில் கிராமங்களில் சென்று, அங்கேதங்கி, அவர்களொடு பழகி, அவர்தம் ஏற்றத் தாழ்வுகள் அறிந்து, துயர்துடைத்து, கல்வி அளித்து, தொழில்பெருக வழிகண்டு என்னென்ன செய்ய வேண்டும் என விளக்கியுள்ளேன். நாடகமணி T.K. சண்முகம் அதைப் பாராட்டித் தாம் அதனை நாடகமாக நடத்த விரும்புவதாகவும் கூறினார். இரண்டொரு பள்ளிகள் நடித்தன. அந்நூலுக்கு அன்றைய கல்வி அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்களும் பாராட்டி முன்னுரை தந்துள்ளார்கள். எனினும் இந்த முறை இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றும் பின்பற்றப் பெறவில்லை. இம்முறை அன்றே வழக்கத்தில், வந்திருக்குமாயின் கிராமங்களில் கல்வி கற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாக வளர்ந்திருக்கும். கல்லாதார் இல்லை என்ற நிலையே உருவாகி இருக்கும். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இன்றைய நிலையில் எழுத்தறியார் நிலை பற்றி அரசாங்க வெளியீட்டினையே இங்கே தர நினைக்கின்றேன். நாட்டின் அவலநிலையினையும், மேற்கொண்ட முயற்சிகளையும். செய்ய வேண்டியதாய காலப் பணியினையும் அது விளக்குவதை ஓரளவு காண இயலும். உலகில் உள்ள கல்லாதார் எண்ணிக்கையில் பாதி அளவு நம் நாட்டில்தான் இருக்கும் நிலையை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் வருந்தி வெட்கப்பட வேண்டாமா? எங்கோ ஒருசாரார் முன்னேறி விட்டதாகவும் பெரும்பாலோர் படித்ததாகவும் கூறிக் கொண்டு, ஏழைகள்-கிராம மக்கள்-பெண்கள் இவர்களுள் பெரும்பாலோர் படிக்காதிருக்கும் நிலையினை எண்ணிப், பார்ப்பதில்லை. அதிலும் இன்று நகரங்களில் வளரும் ஆங்கில மோகத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் மாக்கள், தம்மைப் போல் இந்திய மகனாக-மகளாக வாழும் எண்ணற்ற மக்களை எண்ணிப் பார்ப்பதில்லை; மாறாக ஏளனம் செய்வர். அரசாங்க முயற்சிகளும் அவ்வளவாகப் பயன் தருவதில்லை. அந்த அரசாங்க அறிக்கையினை இங்கே தருகின்றேன்.

COMMITTEES PERSPECTIVE

7-2-1. The Resolution setting up the committee to review NPE, inter alia, states:

“Despite efforts at social and economic development since attainment of Independence a majority of our people continue to remain deprived or education, which is one of the basic needs for human development. It is also a matter of grave concern that our people comprise 50 per cent of the world's illiterate, and large sections of children have to go without acceptable level of primary education. Government accords the highest priority, to education-both as a human right and as the means for bringing about a transformation towards a more humane and enlightened society. There is need to make education an effective instrument for securing a status of equality for women, and persons belonging to the backward classes and minorities. Moreover, it is essential to give a work and employment orientation to education

POST POLICY IMPLEMENTATION

7-3-0 In pursuances of the Policy, a National Literacy Mission was established in 1988. In quantitative terms, the Mission seeks to impart functional literacy to 80 million illiterate persons in 15-35 age group: 80 million by 1990 and an additional 50 million by 1995. The emphasis of the Mission is not on mere numbers but on attainment of certain pre - determined norms and parameters of literacy, numeracy, functionality and awareness. Under this programme 2,84,000 centres are functioning in the country with an estimated involvement of 84 lakh adult learners (about 35 lakh men and 49 lakh women). Six lakh literacy kits have been delivered to students, volunteers. Over 30,000 Jan Shikshan Nilayams have been sanctioned to . provide post - Literacy programmes. Over 800 voluntary Agencies have also been involved in the process. A Mass Campaign under NLM was launched by the then Prime Minister in May, 1988. Similar campaigns were launched by 24 States and UTs on the same date and after. The Director General. NLM in his presentation before the . NPERC stated that the Programme has suffered due to shortage of funds. As against the barest minimum requirement of funds amounting to Rs. 189 crores during 1989-90, the actual amount provided was of the order of 76.17 crores. The position was somewhat improved in 1990-91 when a sum of Rs.96 crores was provided, considering the magnitude of the problem of illiteracy the large uncover area and the need for mobilisation (A total of Rs.227 crores was spent under NLM during the years 1987-88 to 1989-90). Much more funds are required even for implementing a purely volunteer-based, campaign-oriented plan of action than what has been provided. (Towards an Enlightened and Humane Society-Pages 198 & 194)

நம் நாட்டிலேயே மலையாள மாநிலத்தில் நூற்றுக்கு நூறு கற்றவர்கள் இருக்கும் போது ஒவ்வொரு மாநிலமும் அத்தகைய முயற்சிகளை ஏன் மேற்கொள்ளலாகாது. , ஒரு சில மாநிலங்கள் ஓரளவு முயல்கின்றன. எனினும் போதிய அளவு இல்லை என்பதையே நாட்டுநிலை காட்டுகின்றது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு எழுத்தறிவிப்பு இயக்கம் அமைந்ததென அறிகிறோம். (திரு. இராமமூர்த்தியின் வெளியீடு 196) 5.25 இலட்சம் எழுத்தறியா மக்களுக்கு உதவ, அதை 21 பகுதிகளாகப் பிரித்து சுமார் 50,000 தனியார் உதவி நிறுவனங்கள் வழியே செயலாற்றி 1990 ஏப்பிரல் முதல் 1992 மார்ச்சு முடியுமுன், அம்மாவட்டத்தையே முழுதும் கற்ற மாவட்டமாக்க முயல்வதாக அரசாங்கக் குறிப்பு காட்டுகிறது. எனினும் அங்கேயும் அவர்கள் நினைத்தபடி பயன்விளையவில்லை என்றே கூறுகின்றனர். ஆம்! கடந்த நாற்பது ஆண்டுகளில் இளம் பிள்ளைகள் (5-14) கட்டாயமாகப் பயில வேண்டிய திட்டத்தினை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றி இருந்தால் இன்று இந்த அவலநிலை இராது அல்லவா! தற்போது தமிழ்நாட்டில் புத்துணர்ச்சி அரும்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தினைப் பூரணக்கல்வி அறி மாவட்டமாக்க முனைந்துள்ளனர் என்ற செய்தி அண்மையில் வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டம் ஏறக்குறைய நிறைவு எய்தும் நிலையில் உள்ளது எனக் கூறுகின்றனர். நாட்டில் பல நிறுவனங்கள் தாமே முன்வந்து, இந்த எழுத்தறிவு இயக்கத்தில் பங்கு கொண்டு பாடுபட முனைகின்றது எனக் கேட்டறிகிறோம். பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ஊர்தோறும் சென்று இந்த ஆக்கப்பணிக்கு ஆவன செய்கிறார்கள் என அறிகிறோம். இன்றைய மாநில அரசும் இந்த வகையில் மத்திய அரசின் துணையுடன் பல கோடி செலவிட்டு இந்தஎழுத்தறிவு இயக்கத்தினைச் செயல்படுத்துகின்றது என்பதைக் கேட்க மகிழ்ச்சி பிறக்கின்றது. அரசாங்கம் பல ஆண்டுகளாக இதற்கெனக் கல்வித்துறையில் ஒரு தனிப்பிரிவே அமைத்து, அதற்கெனத் தனி இயக்குநரையும் இருக்க வைத்து, ஊர்தோறும் செயல்படுவகையில் பல அதிகாரிகளை நியமித்து ஆவன செய்து வருகின்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து எல்லையிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப் பெற்று, அவர்கள் ஊர்தொறும் சென்று முதியோர் கல்வி நிலையங்கள் அமைத்துப் பாடுபடுகின்றனர். முதியவர்களுக்கு வேண்டிய பலகை, புத்தகம், கரும்பலகை, போன்றவற்றை இனாமாக அளித்து அழைக்கின்றனர். முதலில் ஒரு சிலர் சேர்ந்தாலும் மெல்ல மெல்ல. அவருள் பலர் விட்டு விலகுகின்றனர் என்ற குரலே கேட்கிறது. ‘வந்து படிப்பதற்கு எனக்கென்ன தருவாய்’ என்ற கேள்வியும் கேட்கப் பெறுகிறதாம்! எங்கோ ஒரு சில இடங்களில் தாமாகவே வலிய வந்து கற்கும் பெரியவர்கள்-எழுத்தறிவற்றவர் இருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறோம். அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் படங்கள், விளக்க நூல்கள், இன்ன பிறவற்றையும் அரசாங்கம் தருகிறது. அவர்களுக்கு எப்பொழுது ஓய்வு கிடைக்குமோ அப்போது வகுப்புகளை நடத்தவும் தயாராக உள்ளது. எனினும் மக்க்ள் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். இளம்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலேயே அந்த நிலை என அறிகிறோம் பகல் உணவும் பாலும் பழமும் பிறவும் அளிக்கின்ற காரணத்தால் தான் பள்ளியில் தற்போது அதிகமான பிள்ளைகள் பயில்கிறார்கள் என்று அரசாங்கமே தகவல் தருகின்றதே. இந்த நிலை எல்லாம் போக்க வழி இல்லையா! மருந்தில்லையா அரசாங்க முனைப்பு போதாதா! பணியாளர் முயற்சி பற்றாக்குறையில் அமைகின்றதா? தெரியவில்லையே.

1981 மக்கள் கணக்குப்படி நம் நாட்டில் பயிலாத ஆண்கள் 53% ஆகவும் பெண்கள் 75% இருந்தனர். இப்போதோ இந்த நூற்றாண்டின் இறுதியிலோ நான் மேலே காட்டியபடி, உலகக் கல்லாதார் எண்ணிக்கையில் பாதி இந்தியாவில் இருக்கும் என்கின்றனர். இதற்குக் காரணம் மக்கள் இதில் போதிய கவனம் செலுத்தாமையேதான். நாட்டில் ஒன்றும் கல்லாதவன்-கைத்தொழில் வினைஞன் ஒரு நாளைக்கு 50, 60 என்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறான். பெண்களும் அப்படியே இருபத்தைந்து, முப்பது என நாள்தோறும் சம்பாதிக்கின்றனர். இளம்பிள்ளைகளும் கூட 15 வயதில்-இன்னும் 10 வயதில் கூட 10 அல்லது 15, 20 வரை நாட்கூலி பெறுகின்றனர். இவற்றைச் சேமித்து வாழ்க்கையினைச் செம்மைப்படுத்துகிறார்களா என்பது வேறு. ஆனால் இவ்வாறு பெறும் வருவாயினை விடுத்து, படிக்க வருவது கடினம். ‘படித்தால் என்ன இதைவிட அதிகமாக வரப் போகிறதா?’ என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகின்றது. மேலும் பலர் மாலை வேளைகளில் குடிக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகின்றனர். பெண்கள் வீட்டு வேலைக்கு உட்படுகின்றனர். இரவிலோ அன்றி விடியற் காலையிலோ சமையல் செய்து, உண்டு. வேலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்காக உடன் எடுத்துச் சென்றால்தானே நாள் முழுதும் உழைக்க முடியும். இந்த நிலையில் அவர்கள் படிப்பதெங்கே? பிள்ளைகள் வரலாம். அவர்களை நேரிய வழியில் ஆற்றுப்புடுத்த வேண்டாமா? அரசாங்கம் இந்த அவலநிலையைப் போக்க ஏதேதோ வழிவகைகளைக் கண்டு கொண்டுதான் வருகிறது. ஆயினும் அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் களையப்பெறல் வேண்டும்.

பெரியோர்களுக்கு என ஓராண்டோ ஈராண்டோ கல்விக் கூடங்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பயில வருவோர் குறைந்தது பாதிநாட்களாவது வரின் ஓரளவு எழுத்தறிவு பெற முடியும். ஆனால் அதற்கும் பஞ்சம் என்கின்றனர். ஏதோ மற்றவர் வற்புறுத்தலுக்காகச் சேர்ந்ததாகவும் வேலை வெட்டி அற்றவர் செயல் இது என்றும் நினைக்கின்றவர் இன்றும் பலர் உள்ளனர். இந்த நினைவினை மாற்ற வேண்டும். ஓரளவாவது படித்தாலன்றிச் சமூகத்தில் உயர முடியாது என்ற உண்மை அவர்கள் உள்ளத்தில் உணர வழிவகை காண வேண்டும். உடன் செயலாற்றின் தக்க பயன் விளையும்.

ஒரு காலத்தில் வரிகட்டுபவருக்குத்தான் சட்டசபைத் தேர்தல் வாக்குரிமை என்றிருந்தது. பின் எழுதப் படிக்கத், தெரிந்தவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை உண்டு என்று விதி வகுக்கப்பெற்றது. அக்கால நிகழ்ச்சிகளை நான் எண்ணிப் பார்க்கிறேன். கிராமங்களிலும் நகரங்களிலும் எழுத்து வாசனையே அறியாத பலர். எப்படியாவது படிக்க வேண்டும்-கை எழுத்தாவது போட வேண்டும் என்று முயன்று, அதன் வழியே வாக்காளர் ஆகும் தகுதி பெற முயன்றனர். அந்தச் சில ஆண்டுகளில் கணக்கு எடுத்திருந்தால் எழுத்தறிவு இயக்க வளர்ச்சி நன்கு விளக்கும். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் அரசாங்க உதவியோ-அட்டிற் சாலைகளோ இலவச நூல் உதவியோ பிறவோ இல்லை. பலர் யாரையாவது அண்டிக் கற்றனர். அந்த நிலை மாறி உரிமை பெற்றபின் எல்லாரும் இந்நாட்டு மன்னராக உயர்ந்து விட்டமையின், படித்தவர் படியாதவர் -செல்வர் வறியர் யாவராயினும் பதினெட்டு நிரம்பப் பெற்றால் வாக்களராகவும், அதன் வழிச் சட்டமன்ற உறுப்பினராகவும்-ஏன்?-நாடாளும் அமைச்சராகவும் கூட ஆகலாம் என்ற நிலை வந்துவிட்டமையின் படிப்பில் கவனம் குறைந்தது. படிக்காத மேதை என்ற பட்டமும் வழங்கப் பெறும்-எப்படியும் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் கூடவே சேர்ந்துவிடும் பின் முதியோர் கல்வி எப்படி வளரும்? இந்த அவலநிலை ஜனநாயக நாட்டினை எப்படித் தலைதூக்க வைக்கும்? இதனாலேயே நாட்டில் பல்வேறு பிரிவுகளும் சாதி சமயச் சண்டைகளும் பிறகொடுமைகளும் நிகழ்கின்றன. ஒரு காலத்தில் கல்லாதவர் கற்றவர் சொற்கேட்டு அடங்கி நல்லவற்றை மேற்கொண்டு வாழ்ந்தனர் எனக் காண முடிகிறது.

1977-78இல் ஆரம்பித்த, நான் மேலே காட்டிய அரசாங்கச் சார்புடைய எழுத்தறிவியக்கம்-முதியோர் கல்வி முறை பல வகையில் இடர்ப்பட்டு சிலவிடங்களில் தொடங்கிய பள்ளிகள் மூடப்பட்டு பயனற்ற நிலையில், 1989இல் புதிய முயற்சியினை அரசாங்கம் மேற்கொண்டது. இப்புதிய முறை கேரளம், கோவா, புதுவை, குஜராத் ஆகிய மாநிலங்க்ளில் நன்கு நடைபெற்றுப் பயனும் விளைந்துள்ளது என்பர். (p. 198). இதன் வழி, பல தனியார் நிறுவனங்கள் தாமே முன் வந்து, கல்லாதார் இருக்குமிடம் தாம சென்று, அவர்கள் ஓய்வு பெறும் நேரம் அறிந்து, அவர்கள் மன நிலைக்கும் மன நிறைவுக்கும் ஏற்ற வகையில் மெல்ல மெல்ல எழுத்தறிவித்து ஊக்குவிக்கும் நிலையினைக் காண்கின்றோம். இதனாலேயே அண்டை மாநிலமான கேரளத்திலே நூற்றுக்கு நூறு ஆணும் பெண்ணும் எழுத்தறிவு பெற்றுச் சிறக்கிறார்கள் என அறிய முடிகிறது. தமிழ்நாடு இப்போது தான் அந்த வழியினைப் பின்பற்ற நினைக்கிறது.

கேரளம் போன்ற ஒரு சில இடங்களில்-குறைந்த அளவில் கல்லாதவர் வாழும் பகுதிகளில் காணும் வெற்றியினை நாட்டு வெற்றியாகக் கொள்ள முடியாது. கல்லாமாக்கள் பெருவாரியாக உள்ள பகுதிகளில் தனி நிறுவனங்களும் அரசும் சேர்ந்து, பெருத்த முயற்சியிலும் செலவிலும் பாடுபட்டால் ஒரு வேளை வெற்றி காணலாமோ, என எண்ணுகிறேன். ஏறக்குறைய நூறு ஆண்டுகளாகக் கேரளமும்-மிசோராமும் இடையறாது பாடுபட்டு நின்ற காரணத்தினாலேதான் அங்கெல்லாம் நிறை நலமாக முதியோர் கல்வி வெற்றி பெற, கல்லாதார் இல்லையெனப் போற்றப் பெறுவது அறிகிறோம் (p. 200). அத்தகைய முயற்சியினை எல்லா மாநிலங்களும் மேற்கொண்டால் விரைவில் நாட்டில் கல்லாதார் இல்லையாவர். ஆம்! கற்ற ஆணும் பெண்ணும் அக்கல்லா மனிதனுடனோ பெண்ணுடனோ பழகி நின்று, அவர்கள் மனநிலை அறிந்து மெல்ல மெல்லக் கல்வியின் அவசியத்தைப் புகட்டி சிறு சிறு வகையில் எழுத்தறிவித்து, அவர்தம் மொழி வளர்க்கும் நெறியில் பயிற்றுவித்து, தாம் சோர்வு அடையாமல் தளர்ச்சியுறாமல் பயிற்றாளராகச் செயல்புரிவராயின் நிச்சயமாகப் பயன் விளையும். இங்கே இராமமூர்த்தி குழு இந்த முதியோர் கல்வி வளரத் தந்த சில கருத்துக்களை அப்படியே உங்கள்முன் வைக்கின்றேன் அவை அனைத்தும், என்னாலோ-மற்றவர் அனைவராலுமோ ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்று நான் கொள்ளாவிடினும் இக்கருத்து செயலாற்றுவோருக்குத் தூண்டுகோலாக அமையும் என்பது என் துணிவு.

RECOMMENDATIONS

Imperting of literacy should be placed in the context of the developmental needs of the adult. Adult education programmes should be accompanied by a wide range of measures relating to health, nutrition, housing, and employment needs. They should also address themselves in issues of fundamental rights, laws, secularism and democracy. After creating awareness in respect of these essentlal needs and issues the adult learner himself should be expected to ask for adult literacy, the stary should be in respect of creation of awareness for essential needs and from there work backward to adult literacy. ii) While the mass campaign strategy may be tried out further, the alternative model being employed by the Department of Education through Mahila Samakhya may be closely monitored and its application for adult literacy examined-considering that the objective of this project is to create awareness regarding issues of survival and there by generate felt needs. iii) The mass campaign strategy as well as the Mahila Samakhya model may be objectively evaluated to look for meanigful lessons for the future. iv) On most of the developmental problems and matters, realting to fundamental rights, social justice etc. the majority of the illiterates more often than not find themselves in positions of conflict with the official authorities. Therofore genuine initiatives for adult - education programmes. voluntary agencies, community groups, political parties and their mass organisations should be facilitated. v) While NLM goes ahead with its planned literacy campaign in the Eighth Five Year Plan period, an independent study group should be commissioned to evaluate the programme, particularly with a view to arrive at an understanding of what may be appropriate strategies to remove adult illiteracy in the quicker possible time . The evalution may also look into the various alternative models and study their relevance with respect to diverse sociocultural and political conditions in different parts of India. The mininum objective basis what approaches do not yield results, so that, five years later, at least those models may not be encouraged. vi) The Department of Education should coordinate with the Department of Rurel Development and Ministry of Labout and organise programmes for vocational skills for the adult illiterates—facilitating flow of funds from programmes like TRYSEM (Training of Youth for Self Employment). Community Polytechnics should also be involved in a large scale in imparting vocational skills amongst the adult illiterates. (This will enhance. the employability of the adult illiterates and thereby create awareness regarding basic needs and issues of life, in the process generating demand for adult literacy as a felt need ) vii) The non-literates should be placed in an environment in which they have constant interface with the challenge of the written word. viii) Illiterate adults are those who have either not had access to education or having had access, have been unable to complete their schooling. A person has to remain in school atleast for a minimum of four years to attain a relatively irreversible level of iiteracy. Literacy should be a form of basic training making it possible for the adult to acquire some knowledge as may be necessary. It is imperative that Universalisation of Elementary Education is given top priority in educational planning and resource allocation. The objective should be to ensure that no child in the early nineties shall grow into an illiterate adult in. the next century. (If this can be achieved, we would have then succeeded in controlling the chief contributor to illiteracy in India, i.e. low rate of participation in school education.) Pages-200 & 201 (Towards an Enlightened and Humane Society) இத்துடன் கற்றவர் அஞ்சல் வழியே மேல் நிலைக் கல்வி பயலும் முறையினையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்லாதார் ஒருபுறம் இவ்வாறு கற்க, கற்றவர் மேலும் கற்க விரும்பும் நிலை வளர்ந்து வருகிறது. இந்திய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அஞ்சல் வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது பற்றி முன்னரே ஓரளவு கண்டோம். பல்கலைக் கழகப் பட்டப் படிப்பினையும் உயர்பட்டப் படிப்பினையும் அஞ்சல் வழியே கற்றுத் தருகின்றன. அதற்கென ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தனித்துறையினையே அமைத்துப் பாடங்களைத் தயாரித்து அனுப்புகின்றன. ஒரு சில முறையாக இயங்க, சில தவறுகின்றன. பட்டம் பெற எண்ணிப் பல வகையில் கனவு காணும் பலர் அல்லலுறவும் காண்கிறோம். பாடங்களை முறையாக அனுப்புவதும் இடையிடையே குறித்த இடங்களில் பல ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்துவதும் முறையாக நடைபெறுகின்றன. பெரும்பாலும் பணிபுரியும் ஆடவரும் மகளிரும் இவற்றில் சேர்ந்து பயன்பெற விரும்புகின்றனர்; பெறுகின்றனர். எனினும் ஆய்ந்து கண்டவர்கள் இவர்கள் தரம் முறையாகப் பயிலுபவர் தரத்தினும் தாழ்ந்தே உள்ளது என்பர். ஆண்டொன்றுக்கு 80 நாள்கள் (நாளைக்கு 5 மணி நேரம்) நல்லாசிரியர்கள் கீழே அமர்ந்து பல்வேறு பாடங்களை முறையாகப் பயின்று, பருவ இடைத் தேர்வு, காலாண்டு,அரையாண்டுத் தேர்வுகள் எழுதி திருத்தப் பெற்று, தங்கள் தவறுகளை அவ்வப்போது உணர்ந்து திருந்தும் மாணவர்களோடு இவர்களை ஒப்பிடுவது பொருந்தாததுதான் எனினும் இவர்களும் முயன்று, பயின்று வெற்றி பெறுகின்றமை பாராட்டுதற்குரியதாகும். ஆயினும் ஒருசில பல்கலைக் கழகங்கள் பலரையும் தேர்ச்சியுறச் செய்தால்தான் நம் பல்கலைக் கழகத்துக்கு அதிக மாணவர் வருவர்-அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தவறுகள் இழைப்பதாகக் கேள்விப்படுகிறோம். மேலும் எங்கோ ஒருவர் பாடங்களைத் தயாரிக்க, வேறு எங்கோ ஒருவர் ஆண்டுக்கு ஓரிரு முறை பாடம் நடத்த, எப்போதோ கடும் கோடையில் ஒரே முறை தேர்வுக் களத்தில் குதிக்கும் இவர்கள் நிலை எண்ணத்தக்க ஒன்றாகும். மேலும் ஆய்வுக்களத் தொடர்புடைய பட்டங்களையும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி போன்றவற்றையும் இந்த அஞ்சல் வழிக் கல்விக்கு அப்பாலே இருக்க வைத்தல் நலமாகும். இந்தக் கொள்கையில் பல்கலைக் கழக மானியக் குழு விரைவில் சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்த நினைக்கும் குறிப்புகள் நாளிதழில் வெளிவருகின்றன. தற்போது திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களும் செயலாற்றுகின்றன. சில பல்கலைக்கழகங்கள் அதற்கெனத் தனித்துறைகளை அமைத்துள்ளன. படிப்பே அறியாதவரோ அன்றிச் சிறிது பயின்றவரோ நேரே பட்டத் தேர்வுக்குச் செல்ல வழி உண்டு. சில பல்கலைக் கழகங்கள் அடிப்படைப் படிப்பை வலியுறுத்தும் ஒரு நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல் ஒன்றும் போதுமானது, இது அவ்வளவு சிறந்ததா? அவற்றுள் பயின்றோர் உண்மையில் கற்றவர்கள் ஆவார்களா என்பதை வரும் காலம்தான் நமக்கு உணர்த்தும், எப்படியோ நாட்டில் எழுத்தறியாதவர்களை எழுத்தறிவு உள்ளவர்களாக்குதற்கும் சற்றே படித்தவர்கள் மேலும் மேலும் படித்துப் பட்டங்கள் பெறுவதற்கும் பலப்பல புதிய முறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் செம்மையாகச் செயலாற்றின் நினைத்த பயனைப் பெற இயலும், இன்றேல் கோடிக் கணக்கான நாட்டுப் பணம் செலவாவதோடு காலமும் வீணே கழிந்தொழிந்ததாக முடியும். எனவே இத்தகைய கல்வி நிலையங்களைக் கட்டிக் காக்கும் பொறுப்புள்ளவர்கள் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் தாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத-தேவையான சேவைகளை மனத்தில் கொண்டு நாட்டுக் கல்வியே முக்கியம் என்ற உணர்வில் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். எல்லாரும் கல்வி கற்று, மேலும் கற்று, மேன்மேலும் கற்று நாட்டின் நலனைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதே என் ஆசை!

8. தொழிற் கல்வி

* * *

தொழிற்கல்வி உரிமை பெற்றபின், சற்றே வளர்ந்திருக்கிறது என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மத்திய மாநில அரசுகள் இத்துறையில் கருத்திருத்திச் செயலாற்றுகின்றன என்று சொல்லலாம். தமிழகச் சட்டமன்றத்திலே விரைவில் தொழில்துறையில் தமிழ்நாடு முதலிடம் பெறும் என முதல்வர் கூறியுள்ளதாகச் செய்தித். தாள்வழி அறிய முடிந்தது. மத்திய அரசும் தன் நேரடிப் பார்வையிலே நாட்டின் தேவைக்கேற்ற வகையில் நிறுவனங்களைப் பல மாநிலங்களில் அமைத்து வருவது எண்ணத் தக்கது. எனினும் பரந்த பாரதத்துக்கு இந்த வளர்ச்சி போதாது என்பதே அறிஞர்தம் முடிவு. அதற்கு ஏற்பத் தொழில் எவ்வளவு வளர்ச்சியடையினும் அதன் வழியே உருவாகும் பொருள்களின விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. இது வளரும் நாட்டுக்கு. ஏற்றதாகுமா?

என் இளமைக் காலத்திலே (1925-28) ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் நான் பயின்றபோது, ஏதாவது ஒரு தொழிலைக் கற்கவேண்டும் என்ற முறை இருந்தது. நான் பயின்ற வாலாஜாபாத் இந்துமத பாடசாலையில் பயிர்த் தொழில், பாய் நெய்தல், துணி நெசவு, நூல் நூற்றல், பொத்தான் செய்தல், தச்சவேலை, கயிறு திரித்துக் கூடை முதலியன செய்தல் போன்ற தொழில்கள் கற்றுத்தரப் பெற்றன். மாணவன் ஏதேனும் ஒரு தொழிலைத் தவறாது கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படியே 1936இல் நான் பணியாற்றத் தொடங்கிய காஞ்சிபுரம் ஆந்திரசன் உயர்நிலைப்பள்ளியிலும் சில சிறு கைத்தொழில்கள் பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தமை நினைவுக்கு வருகிறது. பத்தாம் வகுப்பு அன்றி, அன்றைய பதினோராம் வகுப்பு வரையில் பயிலும் மாணவன். ஏதேனும் ஒரு தொழிலைக் கல்வியுடன் கற்க வேண்டும் என்பது கட்டளை-முறை. எனினும் கட்டாயம் இல்லையாதலால் பல பள்ளிகள் இவற்றை ஏற்று நடத்தவில்லை. நம் நாட்டில் அன்றும் இன்றும் எதுவும் கட்டாயமாக்கினால்தான் நடக்கும்போலும். எனினும் மேலே 11ஆம் வகுப்புகளில் தட்டெழுத்து போன்றவை தொழில் அமைப்பில் இடம்பெற, பள்ளி இறுதித் தேர்வில் அவையும் பாடமாக ஏற்கப்பெற்றுப் போற்றப்பட்டன. எனவே அந்தியர் ஆட்சி இருந்த அந்த நாளிலேயே பள்ளியில் பயிலும் மாணவர் ஏட்டுக் கல்வியுடன் நாட்டுக்குப் பயன்படும் தொழிற்கல்வி ஒன்றினைக் முறையாகப் பயில வழிவகை இருந்தது. ஆனால் உரிமை பெற்றபின் அந்த நிலை இல்லை என அறிகிறேன். பெரும்பாலும் 6 முதல் 11வது வரையில் பயிலுபவர் இத்தகைய தொழில் ஒன்றினைக் கற்றுக்கொண்டால், அவர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடி அலையாம்ல் வீட்டிலேயே ஏதேனும் தொழில் செய்து வாழ வழி இருந்தது இந்த மரபு ஏனோ உரிமை பெற்ற பாரதத்தில் ஒதுக்கப் பெற்றது? -

இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் தொழில் கல்வியினைச் சாதி அடிப்படையில் சார்த்தி அவனவன் தன்தன் சாதிக்கமைத்த தொழிலைக் கற்கவேண்டும் என்று விதி அமைத்தார் என்றும் இதனாலேயே அது பல பெரிய எதிர்ப்புக்களிடையே எடுபடாமல் விடுபட்டுப் போயிற்று என்றும் கூறுவர். பள்ளிகளில் பல தொழில்களை அமைத்து, வேண்டியவர் வேண்டிய தொழிலைப் பயிலலாம் என விதித்து, அவற்றிற்குத் தேர்வும் நடத்திச் சான்றிதழ் தர ஏற்பாடு செய்திருப்பாராயின் அத்தொழில்முறை ஓரளவு நாட்டில் வளர்ந்திருக்கும். ‘வருணாசிரம’ மரபு என அது ஒதுக்கப்பட்டது என அறிகிறேன்.

க.-8 1974இல் புதிய கல்வி முறை (10+2+3) புகுத்தியபோது மேநிலை வகுப்புகளில் (11 & 12) தொழில் பிரிவு என்று (Vocational Course) ஒன்று அமைக்கப்பெற்றது. அன்று அந்த மேநிலைப்பள்ளிக் குழுவில் நான் உறுப்பினராக இருந்தபோது, இதை வலியுறுத்திப் பல தொழில்களை ஏற்படுத்தி, ஒன்றினை மாணவர் பற்றிப் படர வழிவகுக்குமாறு கூறினேன். எனினும் அது கால கட்டத்தில் வெறும் தட்டச்சும் சுருக்கெழுத்தும் என்ற வகையில் அமைந்தது. அதிலும் பல மாணவர் பங்கு கொண்டனர். 1987-88 மேநிலை வகுப்பில் பயின்ற சுமார் 3.5 இலட்சம் மாணவரில் 96,000 பேர் (24%) இந்தத் தொழிற்கல்வி பயின்றார் என அரசாங்கக் கணக்கு தரப்பெறுகின்றது. எனினும் இதில் பயில்பவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பு இல்லாத நிலை உண்டாயிற்று. கல்லூரியில் சேர்க்கும் மாணவரில் நூற்றுக்குப் பத்து மாணவரையே சேர்க்க விதி அமைத்தனர் போலும். பல கல்லூரிகள் அதையும் பின்பற்றுவதில்லை. எனவே அதன் வளர்ச்சியும் தடைப்பட்டது எனலாம். நான் முன்னரே காட்டியபடி இவர்களை அரசாங்க எழுத்தர் பதவிக்கு முதனிலை தந்து எடுத்துக் கொள்ளல் பொருந்துவதாகும். இப்படியே இம்மேநிலை வகுப்புகளில் ஆசிரியர் பயிற்சி வகுப்பும் இருந்தது. அதில் பயின்றவர்களை-மேலும் அத்துறையிலேயே ஓராண்டு ஈராண்டு பயிற்சி பெறச்செய்து, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க வழி செய்திருக்கலாம். அவ்வாறில்லாமல் அவர்களும் நாற்சந்தியில் நின்று நலிய வேண்டி வந்தமையின் அந்தத் துறையும் அண்மையில் மூடப்பட்டது என அறிகிறேன். இவ்வாறு ஆக்க நெறிக்கென வகுக்கப்பெற்ற பாதைகள் அரசாங்க ஊக்குதல் இல்லாத காரணத்தினாலேயே அழிக்கப்படும் ஓர் அவலநிலை நாட்டில், காண வருந்த வேண்டியுள்ளது. தொழிற்கல்வி என்றால் ஏதோ பொறியியல், மருத்துவம் இவற்றின் அடிப்படையில் அமைந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிலுதல் என்றே நினைத்திருக்கிறோம். சாதாரண குடிசைத் தொழில்களுக்கும் பயிற்சியும் பாதுகாப்பும் தேவை என்பதை மறந்து விடுகிறோம். நான் முன்பு காட்டிய முதியோர் கல்வி நெறியில் இத்தகைய தொழிற்கல்வியும் இடம்பெறின், இதைக் கற்றுக் கொள்ளுவதோடு வருபவர்கள் ஏட்டுக் கல்வியிலும் பயிற்சி பெற வாய்ப்பு உண்டு. பழங்காலத்தில் இருந்தது போன்று பள்ளியிலேயே-சிறப்பாகக் கிராமப்புற பள்ளிகளிலேயே கைத் தொழில்கள் கற்பிக்கப்பெறல் வேண்டும், பெருஞ்செல்வர்களைப் பெரும் கைத்தொழில் பெருக ஊக்கி ‘உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்’ என்றபடி, நாட்டு நடப்பும் செயல் முறையும் பிறவும் இருந்தால் எப்படித் தொழில் வளரும்: எப்படி ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று’ வாழ முடியும்? ஆளுபவர் இவற்றையெல்லாம் சிந்தித்து உடன் தக்க வகையில் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன். நாடு வாழ அதுவே சிறந்தது. இன்று சிறுதொழில் வளர்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் தர அரசு முன்வருகிறது. அதற்கென அமைச்சும் தனித்துறையும் கூட உள்ளன என அறிகிறேன். ஆனால் அதற்கு மானியமாகத் தரப்பெறும் அரசாங்கப் பணம் எந்தெந்த வகையிலோ-வழங்குபவருக்குக் கையூட்டு, பிறவகைச் செலவுகள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது என்பர்.

நாட்டில் தொழிற்கல்வி ஓங்கி வருகிறதெனினும் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்தியக் கல்விக்குழு இதுபற்றித் தன் கருத்தினைத் தெரிவித்து (National Policy of Education) அதன் வளர்ச்சிக்கு வழிகாண முயல்கின்றது. திரு. இராமமூர்த்தி குழுவும் அதன் கருத்துக்களை ஆராய்ந்து வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது.

தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் உரிமம் பெற்றும் பெறாமலும் பல பொறியியற் கல்லூரிகளும் தொழிற் பள்ளிகளும் இயங்குகின்றன என்றும் அவற்றுள் பல தரத்தில் தாழ்ந்துள்ளன என்றும் அக்குறிப்பு காட்டுகிறது. ஆம்! தமிழ்நாட்டில் அரசாங்கம் சென்ற ஆண்டு ஒரு கல்லூரியோடு போட்டியிட்டு, வேறுபாடுற்ற நிலையினை நாடறியும். மேலும் ஆளுபவருக்கு உற்றவராகவும் பல்கலைக் கழகத்துக்குப் பலவகையில் வேண்டியவராகவும் இருப்பின் பொறியியற் கல்லூரி மட்டுமன்றி, புதிதாக எந்தக் கல்லூரியும் தொடங்க வாய்ப்பு உள்ளதை நாட்டு நடவடிக்கைகள் நன்கு விளக்குகின்றனவே. மாறிமாறி வரும் ஆளுபவர் கைப்பாவைகளாகப் பல கல்லூரிகள் இருக்கின்றன-அவை செயல்பட வேண்டிய நிலையில் மாணவர்களைத் திறனறிந்தவர்களாக ஆக்கும் வகையில் இருக்கின்றனவா என்பது ஐயத்துக்கிடமாக உள்ளதே. மற்றும் பெண்களுக்குச் சமஉரிமை என்று மேடையிலும் சட்டமன்றத்திலும் முழங்கும் நிலையிலும் தொழிற். கல்லூரியில் 12% சான்றிதழ் பள்ளிகளில் 17% தான் பயில்கின்றனர். சீர்மரபினர் அன்றி ஒதுக்கப்பட்டவர் பட்டப் படிப்பில் 5% சான்றிதழ் பள்ளியில் 9% உள்ளனர் (ப 237). இந்த அவல நிலையில் மகளிர் முன்னேற்றமும் தாழ்ந்தோர் உயர்வதும் முயற்கொம்பு-ஆகாயப்பூப் போன்றதாகும்.

இத்தகைய தொழிற் கல்லூரிகள் உரிமம் பெற்றவை பெறாதவை நன்கு இயங்குகின்றனவா எனக்காணல் அரசின் கடமையாகும். நல்ல ஆய்வுக் கூடங்கள், நல்லாசிரியர்கள், நல்ல கட்டடங்கள் இல்லாமலேயே பல இயங்குகின்றன எனப் பேசுகின்றனர்-அறிக்கை விடுகின்றனர். அரசோ பல்கலைக் கழகங்களோ இந்த அவல் நிலைகளைப் பற்றி எண்ணுவதில்லை போலும். வேண்டியவர்களாயின் ஒன்றும் இல்லாமலே எல்லா வகுப்புகளையும் தருதலும் வேண்டாதவராயின் எல்லாம் இருந்தும் ஏதோ காரணம் காட்டி ஒன்றும் தராது ஒழிப்பதும் பல்கலைக் கழகச் செயலாக அமைவது என்கின்றனர்.

பொறியியல், மருத்துவத்துறை போன்றவற்றிலும் கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்றவற்றிலும் தக்க அனுபவம் மிக்கவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இங்கேயும் பதவி உயர்வு முதலியவற்றிலேயும் இன்னார் இனியார் என்ற வேறுபாடு காட்டப்பெறுகிறது. என்பர். அடிப்படைத் தேவையான சாதனங்கள்-கருவிகள் கூட இல்லாமல் எப்படி இவை இயங்க முடியும் மத்திய அரசு இவற்றுக்கென வழங்கும் பெரும் தொகைகளை மாநில அரசு தன் செலவுகளுக்கென வேறு வகையில் செலவு செய்துவிடலாம். இதனால் முறையாகச் செயல்படும் பள்ளிகள் கல்லூரிகளை அந்தரத்தில் விட நேரிடுகின்றது. 1989-90 இல் முடிக்கப் பெற்ற பணிகளுக்கும் செய்முறைகளுக்கும் சில பள்ளிகளுக்கு 1990 இடையிலேயே மத்திய அரசு முழு மானியத் தொகையினை மாநில, அரசுக்கு அனுப்பியும், இன்னும் அத்தொகைகள் உரிய கல்வி நிலைகளுக்குச் சென்று சேரவில்லை என்கின்றனர். பின் அவை எவ்வாறு நன்கு செயல்படும்? வேலியே பயிரை, மேயும் வகையில் இவ்வாறு பல மானியங்கள் இடையில் அரசாங்கத்தாலே அவலமாக்கப் பெறுகின்றன. இன்றைய அரசு இதைக்கண்டு ஆவன செய்யும் என நம்புகிறேன்.

கிராம மக்களை ஈடுபடுத்தும் வகையில் பல்கலைத் தொழிற் பள்ளிகள் (Polytecnics) இயங்கவேண்டும். பல்லாயிரக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலை மாறவேண்டும். கண்ணிருந்தும் குருடராய்-காதிருந்தும் செவிடராய் அனைத்தையும் கண்டு வாளாலிருந்தால், நாடு இன்னும் இழிநிலையைத்தான் அடையும். இவற்றை எண்ணி நாடாளும் நல்லவரும் பதவி வகிக்கும் பட்டதாரிகளும் அலுவலர்களும் பிறரும் நாட்டு நிலனிலே அக்கறை கொண்டு செயல்படுதல் நன்றாகும். முக்கியமாகத் தொழிற்கல்வி வளர அனைவரும் ஒன்றிச் செயலாற்றினால்தான் பயன் உண்டு. சமுதாயத்தோடு தொடர்புடைய தொழில்களை ஊர்தோறும் அமைத்து; அவற்றிற்குத் தொழிலியல் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றவர்களைத் தக்கவாறு அமைத்து, வேண்டிய உப்கரணங்களையும் பிறவற்றையும் தந்து அரசு ஊக்க வேண்டும். கிராமங்களில் பயிரிடுவோர் பாதி நேரத்தை வீணாக்காமல் நாட்டுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்துதரும் நிலை வளர வேண்டும். படித்து விட்டு வேலை இல்லாதிருக்கும் நிலையும் இதனால் இல்லையாகும் எல்லாரும் நகரில்தான் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தால் பல கோடியாக வாழும் நம் நாட்டுக் கிராம மக்கள் கதி என்னாவது? தொழில் மயம் கிராமங்களில் தொடங்க வேண்டும்.

தொழிற் கல்லூரிகளைத் தொடங்குவதற்குப் பல்கலைக் கழகம், மாநில அரசு, மத்திய அரசு ஆகிய அனைத்திலிருந்தும் இசைவு பெறுதல் இன்றியமையாதது. வேண்டுவோர்தம் தேவையினை அறிந்துவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் கவனித்து, தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முடிவு எடுத்து மத்திய, மாநில அரசுகளும் பல்கலைக் கழகங்களும் ஆணை அனுப்பினால் நன் மாணவர்கள் சேர்க்கப் பெற்றுப் பயனடைவர். எனவே புதிய தொழிற் கல்லூரிகள் திறக்கவும் புதிய பாடங்கள் தொடங்கவும் வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் ஆராய்ந்து இரு அரசுகளும் பல்கலைக் கழகங்களும் செயலாற்ற வேண்டிய கடமையினை மறத்தலாகாது. இசைவு வழங்குவதிலும் நேரில் திறனறி குழுக்கள் அமைத்து நேரில் சென்று கண்டு அமைப்பாளர்கள் தக்க வகையில் தேவையானவற்றைச் செய்திருக்கிறார்களா எனக் கண்டே இசைவு வழங்கவேண்டும். விரைந்து செயல்படின் விடிவு உண்டு விளைவும் உண்டு.

தொழிற் கல்லூரிகளைப் பல தொழிற் கூடங்களோடு இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும். வெறும் ஏட்டுப் படிப்பும் அங்கே செய்யும் சில கள ஆய்வுகளும் போதா! ‘ஏட்டுக் கல்வி கவைக்கு உதவாது’ என்பது எல்லாக் கல்விக்கும் பொருந்தும் என்றாலும் தொழிற் கல்விக்கு மிக மிகமுக்கியமானது. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்ற மற்றொரு பழமொழியும் இதற்குப் பொருந்தும். மருத்துவக்கல்லூரிக்கு உடன் இணைந்தே ஒவ்வொரு மருத்துவமனை இருக்க வேண்டும் என்ற விதி இருப்பது போன்று பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளுக்கும் ஓர் உயரிய தொழிற்சாலை அல்லது தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என விதி செய்ய வேண்டும். பயிலும் மாணவர் பாதி நேரத்திலோ-அன்றித் தேவையான நேரத்திலோ அத்தொழிற்சாலையில் நேரிய பயிற்சி பெறல் வேண்டும், நான் முன்னே கிராமங்களுக்குக் காட்டிய சிறுதொழில் நெறிப்படி, இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் பெருந்தொழிலோ சிறு தொழிலோ தேவையானால் கிராமந்தோறும் தாமே தொடங்க உந்துதல் பெற்றவராதல் வேண்டும். இன்றேல் பலகோடி தொழிற்கல்விக்குச் செலவிடுதலால் பயனில்லை, அரசாங்கமும் தொழிற் கல்லூரி அமைப் போரும் இந்த வகையில் கருத்திருத்தி ஆவன செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளுகிறேன்.

தொழிற் கல்வியின் ஒவ்வொரு துறையினையும் தனித் தனி ஆராயின் அதுவே பெருநூலாகும். அதற்கு ஏற்ற தனித் தகுதியும் எனக்கு இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். மருத்துவம், பொறியியல், கணிப்பொறி, சிறு தொழில்கள் அனைத்திலும் அவ்வத்துறையில் வல்லவர்களைத் தனித்தனியாக மாநில மைய அரசுகள் அழைத்து, மக்கள் வாழ்கின்ற பகுதிக்கு ஏற்ற தக்க பயன் விளையத்தக்க வகையில் செயல்பாடுகளும் அமையும் வகையில் பாடத்திட்டங்களையும் பயிற்று முறையினையும் களப்பணிகளையும் அமைத்து, அதையும் சரி பார்க்க ஓர் உயர்நிலைக் குழுவையும் ஒவ்வொரு துறைக்கும் அமைத்து ஆவன காணின் நாடு நலம்பெறும். எப்போதோ ஒருமுறை எங்கோ தலைநகரில் குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு திட்டம் தீட்டினால் பயனில்லை. இடந்தோறும், சென்று-ஊர்தோறும் நிலவும் நிலை கண்டு அவ்வந்நிலைக்கு ஏற்றவகையில் பள்ளி, கல்லூரிகள் மட்டுமன்றி, தொழிற் கூடங்களை அமைத்து அவற்றைப் போற்றிப் பாதுதாக்க வேண்டும். நான் மேலேகாட்டியபடி, அவ்வத்துறைகளுக்கு ஏற்ற தொழிற் கூடங்கள் இணைக்கப்பெறல் வேண்டும்; அன்றி அமைக்கப்பெற வேண்டும். இவ்வாறன்றி வெறும் தொழிற் பள்ளி, கல்லூரிகளை மட்டும் தொடங்கி விட்டால் மற்றொரு வேலை இல்லாப் பட்டாளமே உருவாகும். மேலும் நாட்டில் பல சிக்கல்களும் கொடுமைகளும் பிற இழிநிலைகளும் தோன்ற வழிவகுக்கும். நாடாளும் நல்லவர்கள் இவற்றையெல்லாம் எண்ணிச் செயலாற்றுவார்களாயின் நாடு நலம் பெறும். நாம் உலகத்தில் உயர்வோம். உண்மை வாழ்வும் நலமும் மலரும்.

இந்தத் தொழிற்கல்வி பற்றித் திரு. இராமமூர்த்தி குழுவினர் ஆய்ந்து தெளிந்த முடிவுகளை நெறிப்படுத்த வேண்டிப் பரிந்துரை செய்துள்ளனர் (பக். 243-248). ஒவ்வொரு வகையினையும் நன்கு ஆராய்ந்து அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என வகைப்படுத்திக் காட்டியுள்ளனர். இத்துறையில் பணிபுரிவோர் அனைவருமே இவற்றை நெறி அறிந்து போற்றல் வேண்டும். இந்தப் பரிந்துரைகளே முடிவு என்று கொள்ளவேண்டும் என நான் கூறமாட்டேன். இவை முன்னேற்றப் படிகளுள் சில. தெளியத் தெளிய, ஆராய ஆராய உலக வளர்ச்சிக்கு ஒப்ப நம் நாட்டுத் தொழிற்கல்வியும் அதற்கென அமைந்த பிற துணைநிலைக் கருவிகளும் இடமும் காலமும் பிறவும் அமையப் பார்த்துக் கொள்ளவேண்டும். சில நாடுகள் முயல்வது போன்று அறிவியல் நெறி அழிவுப்பாதைக்கு வழி கோலாமல் ஆக்கப் பாதைக்கு வழி கோலுவதாய்-உலகச் சமுதாய வாழ்வுக்கு உகந்ததாய் அமைய வழிகாண வேண்டும். யாண்டும் இன்பம் நிறைய-எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற-வையகம் வளமுற-கல்வித் துறையின் எல்லாப்பகுதிகளும் முயன்று ஒருமை உணர்வில் செயலாற்றின் நாடும் உலகமும், உய்யும் உயரும் அந்நாள் விரைந்து வருவதாக!

நல்ல ஆசிரியரின் இலக்கணம்

குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம், மலை நிறைகோல், மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர் குணம் இணையவும்

அமைபவன் நூல் உரை ஆசிரியன்னே.

(நன்னூல்)

பாடம் சொல்லும் முறை

ஈதல் இயல்பே இயம்பும் காலை

காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்

சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி

உரைக்கப் படுபொருள் உள்ளத் தமைத்து

விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து

கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்

கோட்டமில் மனத்தின் நூல்கொடுத்தல் என்ப.

(நன்னூல்)

பாடம்கேட்கும் முறை

கோடல்மரபே கூறும் காலைப்

பொழுதொடு சென்று வழிபடல் முனியான்

குணத்தொடு பழகி அவன்குறிப்பின் சார்ந்து

இருஎன இருந்து சொல்எனச் சொல்லிப்

பருகுவன் அன்ன ஆர்வத்தின் ஆகிச்

சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்

செவி வாயாக நெஞ்சு களனாகக்

கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப்

போ எனப் போதல் என்மனார் புலவர்.

(நன்னூல்)